பாரதி வந்து பார்த்தால்...
சாதிக்கு ஒரு சங்கம்க்ஷஆனால் சாதி கூடாது என பிரசங்கம் தேர்தலுக்கும் வேண்டும் சாதி ஆனால் சாதி கூடாது என அதிபிரசங்கம்
சத்தம் போட்டு சந்திக்கு சந்தி கூடுவதும் சாதிக் கூட்டம் சாதி கூடாதென முச்சந்தியில் கூவுவதும் அதே கூட்டம்
சாதிப் பெயரில் சதவிகிதப்படி வேலை சாதி வெறியில் சகிக்க முடியாதபடி கொலை
சிங்களத்து தீவிற்கும் பாலமில்லை வங்கத்தில் ஓடும் நீருக்கும் தீர்வில்லை
ஆணின் தன்மையில் மாற்றமில்லை பெண்ணின் தரத்தில் ஏற்றமில்லை
நிலை கெட்டு விட்டார் மானிடர் பராசக்தியும் பாரா சக்தியானாள்
எனக்குக் காணி நிலமும் வேண்டாம் காட்டுமிராண்டி வாழ்வும் வேண்டாம்
"பாரதி கால் தூக்கி ஓடி விடுகின்றார்"
- தஞ்சை த இராமநாதன்








