ஆண்கள் தினம்
ஆண் தினமும் உழைக்கின்றார் ஆண்கள் தினத்திலும் உழைக்கின்றார்
பெண் பிள்ளையை சுமக்கின்றார் ஆண் அனைவரையும் சுமக்கின்றார்
பாயோடு பக்குவமானப் பயணம் அந்தக் கோரைப் பாயோடுப் பயணம்
நழுவ விடா பிடியோடுப் பயணம் நழுவினாலும் விடாபிடிப் பயணம்
ஆக்கும் கடவுள் ஆண் கடவுள் காத்து அழிப்பதும் ஆண் கடவுள்
ஆக்கிக் காத்தலை போற்றா உலகம் அழிவை மட்டும் தூற்றும் உலகம்
களைப்பை காட்டிக் கொள்ளார் இளைப்பையும் காட்டிக் கொள்ளார்
தன்னலம் பார்க்கா ஆண் வர்க்கம் தன்மானம் பார்க்கும் ஆண் வர்க்கம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment