தீபாவளி வாழ்த்துகள்
உலகெங்கும் வாழும் அதிக மக்களுக்கு
தெரிந்தது இந்தியர்களின் தீபாவளி
உலகத் தலைவர்கள் இந்தியர்களை அதிகம் வாழ்த்துவதும் இந்த தீபாவளி
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாகக் கொண்டாடுவது தீபாவளி
ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அதிகமாகக் கொண்டாடுவதும் தீபாவளி
அயல் நாடுகள் அரசு விடுமுறை அதிகம் இந்தியர்களுக்குத் தருவது தீபாவளி
அற்புத நாடு சிங்கப்பூர் அரசு விடுமுறை எங்களுக்குத் தருவதும் தீபாவளி
புரியாதவர்கள் தீபாவளியைப் புகழாது விட்டாலும் இகழ்வது கூடவே கூடாது
புரிந்தவர்கள் தீபாவளியைப் புகழ்ந்து இருளை அகற்றுவதை விடவே கூடாது!
- தஞ்சை த.இராமநாதன்









