Tuesday, 26 September 2023

காண்டோ இடத்தில் குண்டோ?

 

காண்டோ இடத்தில் குண்டோ?

வெடிக்கும் குண்டைப் போட்டவர்கள்
வெடிக்காது மண்டையைப் போட்டார்களோ?
வெடிக்கக் குண்டைப் போட்டார்கள்
வெடிக்காத குண்டைப் போட்டார்களா?

குண்டைப் போட்டுப் புதைத்தார்களா?
சண்டைப் போட்டுப் புதைத்தார்களா?
பயந்து குண்டைப் போட்டார்களா?
பாய்ந்து குண்டைப் போட்டார்களா?

அப்போ புக்கிட்தீமாவில் போட்டார்களா?
அப்பர் புக்கிட்தீமாவில் போட்டார்களா?
கண்ட இடத்திலெல்லாம் போட்டார்களோ?
காண்டோ கட்டுமிடத்திலும் போட்டார்களோ?

இருக்கெனத் தெரிந்ததால் இல்லாத இடம் புகலிடம்
இல்லையெனத் தெரிந்தால் இருந்த இடம் புகழிடம்
வெடிக்க நினைத்தால் குண்டை வெடித்து விடலாம்
வெடிக்காத குண்டு வெடித்ததும் மறந்து விடலாம்!

- தஞ்சை த.இராமநாதன்


Friday, 22 September 2023

சரக்கில் பல சரக்கு இருக்கு

 

சரக்கில் பல சரக்கு இருக்கு

இருந்த சரக்கில் பல சரக்கும் இருக்கு
இருக்கும் சரக்கில் பழ சரக்கும் இருக்கு
இருந்த சரக்கு பழைய சரக்கா இருக்கு இருக்கும் சரக்கு புது சரக்கா இருக்கு

இருந்த சரக்கு பேசும்வரை இருக்கு
இருக்கும் சரக்கு பேசாதவரை இருக்கு
இருந்த சரக்கு விற்காதவரை இருக்கு இருக்கும் சரக்கு விற்கும்வரை இருக்கு

குடிப்பைச் சரக்கென்பது மனக் கிறுக்கு
புகைப்பைச் சரக்கென்பது இனக் கிறுக்கு
பெண்ணை சரக்கென்பது ஈனக் கிறுக்கு
மண்ணை வெறுப்பதோ ஊனக் கிறுக்கு

தமிழன் என்பதில் தன்மானம் இருக்கு
தமிழ் என்பதில் தனிமணமே இருக்கு!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 21 September 2023

காலை மாலை வணக்கம்

 

காலை மாலை வணக்கம்

காலை வணக்கம் மாலைவரை மலர்ந்து தொடர்ந்தால் மனமெல்லாம் மணக்கும்
மாலை இணக்கம் நாளைக் கடந்து தொடர்ந்தால் காலமெல்லாம் இனிக்கும்

காலையோ மாலையோ காலந்தொட்டு காலைத் தொட்டுத்தான் கும்பிடுவோம்
கலையோ காளையோ அவிழ்த்துவிட்டு கொம்பைத் தொடத்தான் ஓடுவோம்

காலையில் கிழக்கில் வரும் கதிரவனை விளக்கை அகற்றி விடை கொடுப்போம்
மாலையில் மேற்கே போகும் கதிரவனை விளக்கை ஏற்றி விடை கொடுப்போம்

காலையில் உருவான உற்சாகம்                 மாலையைக் கடந்து கனவாகக் கூடாது
காலையில் உருவான உம் சோகம் மாலையைக் கடந்து நனவாகக் கூடாது!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 20 September 2023

ஆவியைப் போக்கிப் போதித்தல்

 

ஆவியைப் போக்கிப் போதித்தல்

நீர் ஆவியாகி தன் கொதிநிலையில்          நிலை மாறுவது அழகோ அழகு
நீவிர் ஆளாகி உன் மதிநிலையில்                      நிலை ஏறுவதும் அழகோ அழகு

தொண்டை வத்த தன் ஆவியைப்
போக்குவது ஆசிரியர் தொழில்
தொண்டு செய்து தன் ஆவியைப்                  போக்குவதும் ஆசிரியர் தொழில்

உத்யோக தொழில் என்றாலும் அதில் ஆவியைப் போக்குவது ஆசிரியரே
உத்வேக தொழில் என்றாலும் அதில் ஆவியைப் போக்குவதும் ஆசிரியரே

ஆவியைப் போக்கும் ஆசிரியருக்கு      அடுத்தவர் பாராட்டு அரைகுறையோடு
ஆவியைப் போக்கும் ஆசிரியருக்கு அன்னையார் பாராட்டோ அக்கறையோடு!

- தஞ்சை த.இராமநாதன் 

Monday, 18 September 2023

அடிக்கடி கிடைக்காத கொழுக்கட்டை

அடிக்கடி கிடைக்காத கொழுக்கட்டை

அடிக்கடி கவிதை எழுதுவோரை கடவுளேயென சத்தம் போடுகிறார்கள்
அடிக்கடி உரக்கக் கத்துவோரை அரசியலாரென நித்தம் தேடுகிறார்கள்

அடிக்கடி கனமாக மழை அடித்தால்    நனைந்து நடுங்கி ஓடுகிறார்கள்
அடிக்கடி பலமாக வெய்யில் அடித்தால் வேர்த்து வியர்த்து வாடுகிறார்கள்

அடிக்கடி பார்த்து இருந்தால் உடனே முகத்தைச் சுளிக்க முயல்கிறார்கள்
அடிக்கடி பார்க்காது இருந்தால் உடனே பார்த்துப் பேச முயல்கிறார்கள்

அடிக்கடி அழைத்துப் பேச நேரமில்லாது
Message செய்து கொல்கிறார்கள்          அடிக்கடி உடற் பயிற்சிக்கு நேரமில்லாது Massage செய்து கொள்கிறார்கள்

அடிக்கடி கொழுக்கட்டைக் கேட்டால்      கிள்ளிக் கொடுக்கிறார்கள்
பிள்ளையார் சதுர்த்திக்குக் கேட்காமலே  அள்ளிக் கொடுக்கிறார்கள்!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 16 September 2023

பார்த்தும் பார்க்காதுப் போனால்

பார்த்தும் பார்க்காதுப் போனால்

பார்த்ததைப் பார்க்காதுப் போனால்
பார்த்தது பார்க்காததாகி விடுமோ?
பார்க்காதது பார்த்ததாகிப் போனால்
பார்க்காதது பார்த்ததாகி விடுமோ?

பார்த்ததும் பார்த்ததை மறந்தால்
பார்த்தவர் கர்மயோகியாகிடுவாரோ?
பார்க்க முடியாததைப் பார்த்தால்                          பார்த்தவர் மர்மயோகியாகிடுவாரோ?

படித்தவர் படிக்காதவராக மாறினால்             படித்த படிப்பு பெருந்தாடியாகுமோ?படிக்காதவர் படித்தவராக மாறினால்
படிக்காத படிப்பு குருந்தாடியாகுமோ?

பார்த்தும் பார்க்காதுப் போனால்              பார்த்த பார்வை குருடாகிப் போகுமோ?
கேட்ட காது கேட்காதுப் போனால்                கேட்ட கதை செவிடாகிப் போகுமோ?

- தஞ்சை த.இராமநாதன்


Tuesday, 12 September 2023

சமாதானம் - சனாதனம்

சமாதானம் - சனாதனம்

நல் மனதோடு வாழ வேண்டும்
கல் மனதோடு வாழ வேண்டாம்

பொன் மனதோடு வாழ வேண்டும்
புண் மனதோடு வாழ வேண்டாம்

இரக்க மனதோடு வாழ வேண்டும்
அரக்க மனதோடு வாழ வேண்டாம்

மறக்கும் மனதோடு வாழ வேண்டும்
துறக்கும் மனதோடு வாழ வேண்டாம்

துடிக்கும் மனதோடு வாழ வேண்டும்
இடிக்கும் மனதோடு வாழ வேண்டாம்

படிக்கும் மனதோடு வாழ வேண்டும்
கடிக்கும் மனதோடு வாழ வேண்டாம்

கொடுக்கும் மனதோடு வாழ வேண்டும்
கெடுக்கும் மனதோடு வாழ வேண்டாம்

இனமான மனதோடு வாழ வேண்டும்
கனமான மனதோடு வாழ வேண்டாம்

தன்மான மனதோடு வாழ வேண்டும்
சன்மான மனதோடு வாழ வேண்டாம்

சமாதானத்தால் சேர்ந்து வாழ வேண்டும்      சனாதனத்தால் பிரிந்து வாழ வேண்டாம்!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 8 September 2023

நாற்றத்தில் மாற்றமில்லை

 

நாற்றத்தில் மாற்றமில்லை 

புறக் குப்பை நாற்றத்தை முகத்தின் புற மாற்றத்திலும் காணலாம் 
அகக் குப்பை நாற்றத்தை முகத்தின் புறத் தோற்றத்திலும் காணலாம் 

நாறுது நாறுதெனக் குறை சொன்னால் 
மாற்றத்தைக் காண முடியாது 
நாற்றம் மாற நாட்டம் இல்லையானால் 
மாற்றத்தைக் காண முடியாது 

தன் நிலத்தைச் சுத்தமாக வைக்காதவர் தன்மானத்தை இழந்தவராவார் 
தன்மனத்தை அசுத்தமாக வைப்பவர் 
மனித மாண்பையும் இழந்தவராவார் 

சுத்தம் சோறு போடுமெனச் சத்தம் போட்டால் சுத்தம் வந்திடாது 
அசுத்தத்திற்குத் தண்டனையெனச் சட்டம் போட்டால் அசுத்தம் இருந்திடாது!

- தஞ்சை த.இராமநாதன் 

Thursday, 7 September 2023

பெரும்பாலும் பெருமாளும்

பெரும்பாலும் பெருமாளும் 

பெருமாளைப் பெருமாளென வணங்கி பெரும்பாலும் பெருமாளே என்பர் 
பெருமாளைத் திருமாலென வணங்கி பெரும்பாலும் திருமாலே என்பர் 

பெரும் மாலோ சிறு மாலோ ஒரு மால் வேண்டி பெருமாளிடமும் வேண்டலாம் 
லுலு மால் வேண்டி பெரும் மாலையைச்            சூடி திருமாலிடமும் வேண்டலாம் 

பெருமாளையும் திருமாலையும் மறந்து              மணி வண்ணனைத் தேடியும் ஓடலாம் 
கருநீலக் கண்ணனையும் மறந்து விஷ்ணுவைத் தேடிப் பாடியும் ஓடலாம்

அங்கிருந்து இங்கு வந்தாலும் இந்தக் கடவுளையும் காண முடியாது 
இங்கிருந்து எங்கு ஓடினாலும் எந்தக் கடவுளையும் காண முடியாது 

உண்மையுடன் உழைத்து ஒருவருக்கும்  தீங்கு செய்யாதது நல்ல உள்ளம் 
நல்ல உள்ளத்தில் கடவுள் இருப்பதால் எங்கிருந்தாலும் அந்த உள்ளம் துள்ளும்!

- தஞ்சை த.இராமநாதன்  

Wednesday, 6 September 2023

கடைப் பிடித்தல்


 கடைப் பிடித்தல்

நல்ல தடத்தில் நல்ல கொள்கைகளைக் கடைப்பிடித்தால் கரை சேரலாம்
நல்ல இடத்தில் நல்ல பொருட்களைக்    கடைப் பிடித்து விற்றால் காசு சேரலாம்

கடைப்பிடித்த கொள்கையைக் காசு வாங்கிக் கொண்டு கை விரிக்காதே
கடையில் விற்கும் பொருட்களில் கலப்படம் செய்யக் கடை விரிக்காதே

கடைப்பிடிக்கக் கடைப்பிடிப்பவருக்குக் கடைப்பிடித்தவர்களைப் பிடிக்கும்
கடைப் பிடிக்க கடைப் பிடிக்கும் நபருக்கு          காசு கொடுப்பவர்களைப் பிடிக்கும்                     

கடைசிவரை கடையை நடத்தி காசைச் சம்பாதித்துச் சேர்த்தவர்களும் உண்டு
கடைப்பிடித்த கொள்கைகளைக் கடைசிவரைக் காத்தவர்களும்  உண்டு!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 3 September 2023

அதிபரானார் தர்மன்

 

அதிபரானார் தர்மன்

சத்தங்கள் இல்லாது நடந்தது தேர்தல் சச்சரவுகள் இல்லாது முடிந்தது தேர்தல் கலவரம் இல்லாது நடந்தது தேர்தல்
நிலவரம் தெரிந்ததும் முடிந்தது தேர்தல்

துணைப் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டவர் தர்மன்
அதிபராக அலங்கரிப்படுபவர் தர்மன்
நிதியில் நேர்த்தியானவர் தர்மன்
மதியில் கீர்த்தியானவர் தர்மன்

தர்மனை Dharman எனப் பிழையுடன் எழுதும் தமிழர்கள் பலபேர் உண்டு
Tharman எனச் சரியாக எழுதும் தமிழர் சிங்கையின் அதிபரானது நன்று!

- தஞ்சை த.இராமநாதன்