அடிக்கடி கிடைக்காத கொழுக்கட்டை
அடிக்கடி கவிதை எழுதுவோரை கடவுளேயென சத்தம் போடுகிறார்கள்
அடிக்கடி உரக்கக் கத்துவோரை அரசியலாரென நித்தம் தேடுகிறார்கள்
அடிக்கடி கனமாக மழை அடித்தால் நனைந்து நடுங்கி ஓடுகிறார்கள்
அடிக்கடி பலமாக வெய்யில் அடித்தால் வேர்த்து வியர்த்து வாடுகிறார்கள்
அடிக்கடி பார்த்து இருந்தால் உடனே முகத்தைச் சுளிக்க முயல்கிறார்கள்
அடிக்கடி பார்க்காது இருந்தால் உடனே பார்த்துப் பேச முயல்கிறார்கள்
அடிக்கடி அழைத்துப் பேச நேரமில்லாது
Message செய்து கொல்கிறார்கள் அடிக்கடி உடற் பயிற்சிக்கு நேரமில்லாது Massage செய்து கொள்கிறார்கள்
அடிக்கடி கொழுக்கட்டைக் கேட்டால் கிள்ளிக் கொடுக்கிறார்கள்
பிள்ளையார் சதுர்த்திக்குக் கேட்காமலே அள்ளிக் கொடுக்கிறார்கள்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment