வீரத்துடன் விவேகமுடைய வீரத்தமிழர் பசும்பொன் தேவர் ஆன்மீகத்துடன் மானமுடைய மறத்தமிழர் பசும்பொன் தேவர்
பணக்கார பண்ணையார் வீட்டில் பிறந்த தவப்புதல்வர் பசும்பொன் தேவர் பல ஆயிரம் ஏக்கரை தானம் செய்த தர்ம சீலர் பசும்பொன் தேவர்
பணம் பெயர் பதவிக்காக அரசியலுக்கு வந்தவர் அல்லர் பசும்பொன் தேவர் பணத்தைப் பொருட்படுத்தாத பரம்பரை பணக்காரர் பசும்பொன் தேவர்
தடுக்கப்பட்ட மக்களை கோயிலினுள் அழைத்துச் சென்றவர் பசும்பொன் தேவர் தடுத்தவர்களை வருகிறேன் வந்து பார் என சவால் விட்டவர் பசும்பொன் தேவர்
பட்டதாரி இல்லாத காமராஜரை பட்டாதாரி ஆக்கியவர் பசும்பொன் தேவர் காமராஜருக்கு அரசியல் அடித்தளம் இட்ட அற்புதத் தலைவர் பசும்பொன் தேவர்
பலநூறு தலைமுறையினரின் பாராட்டைப் பெறப் போகிறவர் பசும்பொன் தேவர் எக்களத்திலும் வென்ற முக்குலத்தில் பிறந்த தங்கத் தமிழர் பசும்பொன் தேவர்
திருநீறு பூசி திலகமிட்டு பொலிவான முகத் தோற்றமுடையவர் பசும்பொன் தேவர் ஆங்கிலப் புலமையோடு அகில அரசியல் அறிந்த பகுத்தறிவாதி பசும்பொன் தேவர்
வெட்டி வேலைப் பார்த்தோரை நல்ல வேலை வெட்டிப் பார்க்க வைத்தவர் தேவர் சதி செய்து பேதம் பேசித் திரிந்தோரைச் சரி செய்து யோசிக்க வைத்தவர் தேவர்!
- தஞ்சை த இராமநாதன்