Saturday, 22 October 2022

வெடிப்பதும் வெடிக்காததும் வெடியே

 


வெடிப்பதும் வெடிக்காததும் வெடியே

கல்லில் வைத்து கல்லால் அடித்து வெடிக்க வைப்பது கேப் வெடி
சுருள் துப்பாக்கியினுள் சுற்றி வைத்து
அமுக்கி வெடிப்பது சுருள் கேப் வெடி
பற்ற வைத்ததும் திரிபோல் வந்து திகைக்க வைப்பது மாத்திரை வெடி
சுற்றி சுழன்று ஒளியோடு சேர்ந்து
புகையைத் தருவது சங்கு சக்கர வெடி
விளக்கில் பட்டு சிறிது வெளிச்சம் தந்து
பல நிறத்தில் ஒளிர்வது பென்சில் வெடி
கம்பியோடு இருந்து கம்பீரமாய் எரிந்து கரிபோல் முடிவது கம்பி மத்தாப்பு வெடி
பம்பரம்போல் இருந்து பற்றிப் பொறிந்து  புஷ்சென முடிவது புஷ் வான வெடி
உயரேப் பறந்து அதிர்ந்து வெடித்து
அசர வைப்பது அணுகுண்டு வெடி
சரமாய் சேர்ந்து சரசரவென வெடித்து
ரசிக்க சிரிக்க வைப்பது சீனி வெடி
நெருப்புப் பட்டதும் குதித்துப் பறந்து
இருமுறை வெடிப்பது இரட்டை வெடி
வண்ணத்துடன் பெரிதாக அமைந்து
காகிதத்தை சிதறடிப்பது லஷ்மி வெடி!

- தஞ்சை த.இராமநாதன்


2 comments:

  1. அனைத்து வெடிகளும் குதூகளபடுத்தும்,நினைவுகள் பின்னோக்கி செல்கிறது நன்றி

    ReplyDelete