கூடும் குருவியும் தரும் பாடம்
இலையின் நார் நரம்புகளை பறந்து பறந்து எடுத்து வந்து சேர்க்கும்
எடுத்த நார் நரம்புகளை உடனே பறந்து பறந்து தொகுத்து எடுத்துக் கோர்க்கும்
ஆடும் காற்றோடு சேர்ந்து ஆடினாலும் வாழ்வைத் தொடர முயன்றுப் பார்க்கும்
சிறுகச் சிறுகச் சேர்த்து பெருகப் பெருக வாழும் வழிக்கான கண்கூடானப் பாடம்
ஆண் துணை இறந்தால் மனம் உருகி உருகிக் கிடந்து உயிரை விடும் பாடம்
தொங்கும் கூட்டில் தங்கும் பக்குவத்தை தூக்கணாங் குருவி தரும் பாடம்!
- தஞ்சை த இராமநாதன்










