இதற்காகவா பெண்ணுரிமை?
கண்டவுடன் காதல் வலை அதற்கா பெண் உரிமை?
கண்டவனுடன் காதல் அலை அதற்கா பெண் உரிமை?
கண்டவுடன் ஆடல் பாடல் அதற்கா பெண் உரிமை?
கண்டவனுடன் ஓடல் கூடல் அதற்கா பெண் உரிமை?
காமம் தீர்க்கக் காதல் செய்தல் அதற்கா பெண் உரிமை?
மோகம் தீர்க்கக் காதல் செய்தல் அதற்கா பெண் உரிமை?
சிறு வயதில் போதைப் பழக்கம் அதற்கா பெண் உரிமை?
சிறு வயதில் புகைப் பழக்கம் அதற்கா பெண் உரிமை?
கடமை கட்டுப்பாடு வேண்டாம் அதற்கா பெண் உரிமை?
பண்பாடு நாகரீகம் வேண்டாம் அதற்கா பெண் உரிமை?
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு கேட்டோம் அன்று அது நன்று!
கலாச்சாரமற்றப் பெண்ணுக்கு படிப்பு எதற்கு கேட்போம் இன்று அதுவே நன்று!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment