Tuesday, 31 January 2023

பெரிச்சாளியும் சுண்டெலியும்

 


பெரிச்சாளியும் சுண்டெலியும்

பெரிய எலியென்றால் பெரிச்சாளி 
சிறிய எலியென்றால் சுண்டெலியா?
 
கடற்கரையில் ஆடுமொளி காணும் ஒளி
படத்திரையில் பாடுமொலி கானா ஒலியா?

சிந்துவதால் வருவது மூக்கில் சளி
கத்துவதால் வருவது நாக்கில் சனியா?

உழைப்போர்க்கு வறுமை விதியின் சதி
ஏய்ப்போர்க்கு செழுமை மதியின் சதியா?

முதுமையில் நரை முதிய வயதினர் பெறுவது முதிர்ச்சி
இளமையில் நரை இளம் வயதினர் பெறுவது அதிர்ச்சியா?

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 30 January 2023

வந்து தானாக வந்து சேர்ந்து விடும்

 


வந்து தானாக வந்து சேர்ந்து விடும்

இதை எதுக்கு சொல்றேன்னா
இது வந்து உங்கள் நல்லதுக்குதான்
அதை எதுக்கு சொல்றேன்னா
அதுவும் வந்து உங்கள் நல்லதுக்கேதான்

எதுக்காக வந்து நீங்க இப்படி வந்து திடீரெனக் கோபப்பட்டீங்க?
அதுக்காகவா வந்து நீங்க இப்படி வந்து திடீரெனக் கோபப்பட்டீங்க?

எதுக்கு வந்து நீங்க அப்படி வந்து          விழுந்து விழுந்து சிரிச்சீங்க?
அதுக்கு வந்தா நீங்க இப்படி வந்து                      விழுந்து விழுந்து சிரிச்சீங்க?

அதை வந்து சும்மா வந்து ஒரு சிரிப்புக்காக அப்படிச் சொன்னேங்க
இதை வந்து சும்மா வந்து ஒரு செய்திக்காக இப்படிச் சொன்னேங்க

எப்ப வந்து எதை வந்து சொல்வது சரியென்று உங்களுக்குத் தெரியாதா?
இப்ப வந்து அதை வந்து சொல்வது சரியாயென உங்களுக்குத் தெரியாதா?

அட எப்ப வந்தீங்க நீங்க
வாங்க வாங்க வந்து இப்படி உட்காருங்க
வந்ததைப் பற்றி எழுதிக் கொண்டு
நீங்க வந்ததைப் பார்க்கலீங்க!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 29 January 2023

அப்புறத்தை அப்புறப்படுத்துவோம்

 


அப்புறத்தை அப்புறப்படுத்துவோம்

அப்புறம் எப்ப எல்லோரும் வந்தீங்க அது அர்த்தமற்ற அப்புறம்
அப்புறம் திரும்ப எப்ப வருவீங்க அதுவும் அர்த்தமற்ற அப்புறம்
அப்புறம் வீட்டில எப்படி இருக்காங்க அது அர்த்தமற்ற அப்புறம்
அப்புறம் ஏதாவது சொல்லுங்க அதுவும் அர்த்தமற்ற அப்புறம்
அப்புறம் போயிட்டு வரட்டுமா அது அர்த்தமற்ற அப்புறம்
அப்புறம் போயிட்டு வாங்க அதுவும் அர்த்தமற்ற அப்புறம்!
உடனே...
அப்புறத்தை அப்புறப்படுத்தினால் அப்புறம் எப்புறம் போகுமோ?

- தஞ்சை த.இராமநாதன்


Friday, 27 January 2023

பாலின் பலவகைகள்

 

பாலின் பலவகைகள்

ஆண்பால் என்பது ஆண் என்றானது
பெண்பால் என்பது பெண் என்றானது    அன்பு என்பது அன்பால் என்றானது        பண்பு என்பது பண்பால் என்றானது

பிறப்பு என்பது பிறப்பால் என்றானது
சிறப்பு என்பது சிறப்பால் என்றானது
கருப்பு என்பது கருப்பால் என்றானது
மறுப்பு என்பது மறுப்பால் என்றானது

இளைப்பு என்பது இளைப்பால் என்றானது
களைப்பு என்பது களைப்பால் என்றானது
மளைப்பு என்பது மளைப்பால் என்றானது
உழைப்பு என்பது உழைப்பால் என்றானது

இருப்பு என்பது இருப்பால் என்றானது  இழப்பு என்பது இழப்பால் என்றானது
கரும்பு என்பது கரும்பால் என்றானது   துரும்பு என்பது துரும்பால் என்றானது

இனிப்பு என்பது இனிப்பால் என்றானது
புளிப்பு என்பது புளிப்பால் என்றானது
சிரிப்பு என்பது சிரிப்பால் என்றானது     பூரிப்பு என்பது பூரிப்பால் என்றானது

நகைப்பு என்பது நகைப்பால் என்றானது
பகைப்பு என்பது பகைப்பால் என்றானது
படிப்பு என்பது படிப்பால் என்றானது
நடிப்பு என்பது நடிப்பால் என்றானது

அறம் என்பது அறத்துப்பால் என்றானது
பொருள் என்பது பொருட்பால் என்றானது
இன்பம் என்பது இன்பத்துப்பால் என்றானது
மானம் என்பது தமிழின்பால் என்றாவது?

- தஞ்சை த.இராமநாதன்


Thursday, 26 January 2023

வாங்க வாங்கிப் போங்க

 

வாங்க வாங்கிப் போங்க

வங்கிக்கு கடனை வாங்கப் போங்க
கடனாளிப் பெயரை வாங்கிப் போங்க
பள்ளிக்கு படிப்பை உள்வாங்கப் போங்க
படித்து நற்பெயரையும் வாங்கிப் போங்க

காசோடு பொருளை வாங்கப் போங்க
பாக்கியை மறவாது வாங்கிப் போங்க
போட்டியில் பரிசை வாங்கப் போங்க பரிசோடு பெயரையும் வாங்கிப் போங்க

மருத்துவரிடம் மருந்து வாங்கப் போங்க பொறுத்து இருந்து வாங்கிப் போங்க
தியானத்தில் நிம்மதி வாங்கப் போங்க
மன ஆனந்தத்தையும் வாங்கிப் போங்க

கடற்கரைக்கு காற்றை வாங்கப் போங்க காற்றின் இதத்தையும் வாங்கிப் போங்க
பூக்கடைக்கு பூவை வாங்கப் போங்க      பூவின் வாசத்தையும் வாங்கிப் போங்க!

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 24 January 2023

ஓடிய நாயே ஓடினாயே

 

ஓடிய நாயே ஓடினாயே

மிரண்டு ஓடிய நாயே ஓடினாயே                            விரட்டி ஓடிய நாயே ஓடினாயே
மிரண்டதால் ஓடிய நாயே ஓடினாயே  விரட்டுவதால் ஓடிய நாயே ஓடினாயே

தப்பித்துவிட ஓடிய நாயே ஓடினாயே தப்பாதுவிட ஓடிய நாயே ஓடினாயே    உயிரைக் காக்க ஓடிய நாயே ஓடினாயே
உயிரைப் போக்க ஓடிய நாயே ஓடினாயே

இறைத்து ஓடிய நாயே ஓடினாயே                        முறைத்து ஓடிய நாயே ஓடினாயே                        குரைத்து ஓடிய நாயே ஓடினாயே                          குரைக்காது ஓடிய நாயே ஓடினாயே

பிடிக்கவிடாது ஓடிய நாயே ஓடினாயே
பிடித்துவிட ஓடிய நாயே ஓடினாயே
துரத்துவதால் ஓடிய நாயே ஓடினாயே
ஓடுவதால் துரத்திய நாயே ஓடினாயே!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 22 January 2023

மானம் இருப்பவரும் இல்லாதவரும்

 


மானம் இருப்பவரும் இல்லாதவரும்

பணம் இல்லாதவர் பணம் இருப்பவர் முன்னால் பணம் இல்லாதவரே
பணம் இருப்பவர் பணம் இல்லாதவர் முன்னால் பணம் இருப்பவரே

குணம் இல்லாதவர் குணம் இருப்பவர் முன்னால் குணம் இல்லாதவரே
குணம் இருப்பவர் குணம் இல்லாதவர் முன்னால் குணம் இருப்பவரே

நாணம் இல்லாதவர் நாணம் இருப்பவர் முன்னால் நாணம் இல்லாதவரே
நாணம் இருப்பவர் நாணம் இல்லாதவர் முன்னால் நாணம் இருப்பவரே

மனம் இல்லாதவர் மனம் இருப்பவர் முன்னால் மனம் இல்லாதவரே
மனம் இருப்பவர் மனம் இல்லாதவர் முன்னால் மனம் இருப்பவரே

மானம் இல்லாதவர் மானம் இருப்பவர் முன்னால் மானம் இல்லாதவரே
மானம் இருப்பவர் மானம் இல்லாதவர் முன்னால் மானம் இருப்பவரே

இனம் இல்லாதவர் இனம் இருப்பவர் முன்னால் இனம் இல்லாதவரே
இனம் இருப்பவர் இனம் இல்லாதவர் முன்னால் இனம் இருப்பவரே

ஞானம் இல்லாதவர் ஞானம் இருப்பவர் முன்னால் ஞானம் இல்லாதவரே
ஞானம் இருப்பவர் ஞானம் இல்லாதவர் முன்னால் ஞானம் இருப்பவரே!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 20 January 2023

அரையபுரத்தில் காணும் பொங்கல்


அரையபுரத்தில் காணும் பொங்கல்

காலை முதல் இரவு வரை தொடர்ந்தன பல்வேறு தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகள்
ஆரம்பம் முதல் முடியும் வரை இருந்தன
பாபநாசத்தார் முகத்தில் மகிழ்ச்சிகள்

அழகான நடனமும் நாட்டியமும் அரங்கை அலங்கரித்து மகிழ்வை நிலை நாட்டின
ஆபாசமான நடனமும் நாட்டியமும் இல்லாதது நிகழ்விற்குக் கலை கூட்டின

கட்டிய கண்ணோடு கையில் கம்போடு பானை உடைக்க தொடர்ந்த பயணம்
பாதி தூரம் கடந்து பாதை மாறியதால்  உடைக்க முடியாது முடிந்த பயணம்

முப்பத்தொன்றாவது நிகழ்வை நடத்தினர் பாரதியார் நற்பணிக் குழுவினர்                          பயன்மிகு பரிசுகளையும் கொடுத்தனர் அரையபுரத்து ஏற்பாட்டுக் குழுவினர்!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 19 January 2023

சொந்தத்தைப் பிணைப்பது பந்தம்

 


சொந்தத்தைப் பிணைப்பது பந்தம்

வேறு எந்த சொந்தமும் பெற்றெடுத்தத் தாயின் பந்தம்போல் ஆகிடவும் முடியாது

பலவாறு வந்த எந்த சொந்தமும் பந்தமற்று சொந்தமாகிடவும் முடியாது

பந்தத்தைக் காட்டாத எந்த சொந்தமும்
சொந்தமென நினைத்திடவும் முடியாது

பந்தமற்று வந்த எந்த சொந்தமும் சொந்தமாக நிலைத்திடவும் முடியாது

சொந்தமுமாகி பந்தமுமான சொந்தம் என்றுமே பிரிந்ததும் கிடையாது!

- தஞ்சை த.இராமநாதன்


Sunday, 8 January 2023

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரை...


 

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரை...

விமானம் மேகத்தினுள் பறக்கும்போதே            உப்புமா மற்றும் பிரியாணி சாப்பாடு சுவையான சைவப் பிரியாணி கிடைத்தது எனக்கு                                                                          சூடான உப்புமா கிடைத்தது என் மனைவி அன்புக்கு

பாதி சாப்பிட்டதும் என் பாகப் பாதியை பரிமாற்றம் செய்ய முயன்றேன் நான்
பிரியாணி நழுவி மனைவி காலில் விழ தேநீரும் சிறு அபிஷேகம் செய்தது

நானோ என்ன செய்வதென அறியாது பதற்றத்தோடு திகைத்துப் பார்த்தேன்
செய்வதறிந்த அன்போ துரிதமாக தாளால் துடைத்து எடுப்பதைப் பார்த்தேன்

ஏன் இப்படி செய்தீங்கனு அன்பின் குரல் கேட்டது பட்டதை துடைத்துக் கொண்டே ...
நான் செய்திருந்தா திட்டிருப்பீங்கதானே    என கேட்டது அன்பானக் குரல் என் மனதை தொட்டுக் கொண்டே...

எத்தனைப் பொருமை என் அன்புக்கு அத்தனைப் பெறுமையும் என் அன்புக்கே என்னங்கவென அழைக்கும் என் அன்புக்கு 
என்ன அன்பு என அழைப்பேன் என் பங்குக்கு

அசதியுடன் தூங்கிய அன்பைப் பார்த்தபடி        தூங்காதுப் பார்த்தேன் பறந்தபடியே                  என்ன தவம் செய்தேனோ என எண்ணியபடி  எழுதினேன் கண்ணீரைத்  துடைத்தப்படியே...

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 2 January 2023

நான் பிறந்த ஊர் ஆம்பலாப்பட்டு

 

காசாங் குளத்து குலத்தில் பிறந்து வளர்ந்த எனது ஊர் ஆம்பலாப்பட்டு                    தர்மராஜ் சிவக்கொழுந்து பெற்றெடுத்த தலைமகனான எனது ஊர் ஆம்பலாப்பட்டு

பழமையான நிலங்களில் நீர் வளம் பெற்று பணம் விளையும் ஊர் ஆம்பலாப்பட்டு            குளங்களால் சூழப்பட்டு ஏரிகளால் வளம் பெற்று சிறப்புறும் ஊர் ஆம்பலாப்பட்டு
          
நன்செய்யெனும் வயல்கள் சூழ்ந்த செழிப்பான ஊர் ஆம்பலாப்பட்டு                  புன்செய்யெனும் கொல்லைகள் சூழ்ந்த எல்லையான ஊர் ஆம்பலாப்பட்டு

ஆடு மாடு கோழி குருவிகள் எல்லாம் ஓசை எழுப்பிடும் ஊர் ஆம்பலாப்பட்டு                    கபடி பளிங்கி பந்தாட்டமென ஆடிப் பாடி விளையாடிய ஊர் ஆம்பலாப்பட்டு

பகுத்தறிவோடு ஆன்மீக அடித்தளம்    கொண்ட ஊர் ஆம்பலாப்பட்டு            பண்போடும் படிப்போடும் மேல்தளம் கண்ட ஊர் ஆம்பலாப்பட்டு

ஆம்பலெனும் அல்லி ஆவெனும் பசு  பட்டுயெனும் சிற்றூர் ஆம்பலாப்பட்டு        முல்லை நிலத்தோடு மருத நிலம் சேர்ந்த ஊர் எனது ஆம்பலாப்பட்டு!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 1 January 2023

நிறம் மாறிய பூக்கள்

 


நிறம் மாறிய பூக்கள்

சிவப்பு நிறத்தில் இருந்ததால்தான் செம்பருத்திப் பூவென ஆனாயே!

வெள்ளை மணம் கொண்டதால்தான்                வெண் பருத்திப் பூவென ஆனாயோ?

பக்தி மனம் கொண்டதால்தான்                            மஞ்சள் பருத்திப் பூவென ஆனாயா?

வஞ்சக மனதைக் கொண்டுவிட்டால்                    என்ன நிறத்து பூவென ஆவாயோ?

- தஞ்சை த.இராமநாதன்


புத்தாண்டில் பழமை

 


புத்தாண்டில் பழமை 

இரண்டாயிரம் ஆரம்பித்து 22 வருடங்கள் நடந்து முடிந்தது
22 வருடங்கள் நடந்து முடிந்ததும் 23வது வருடமும் வந்தது


22 வருடத்தில் நடந்த சம்பவங்களில் பல சம்பவங்கள் மறந்துப் போகாமலும் இல்லை
கடந்த 4 வருடங்களின் Corona சம்பவங்களை மறந்துப் போகவும் முடியவில்லை

 
ஆண்டுக்கு ஆண்டு ஆண்டு அனுபவித்த அனுபங்கள் பலவும் உண்டு
ஆண்டு அனுபவித்த அனுபவங்களில் மனதில் பதிந்தவைகள் சிலவும் உண்டு

50க்கு மேல் வாழ்ந்தவர்கள் அனைவரும் அடுத்த 50ஐ கடப்பது பெரிதும் அரிது                  50ஐ கடக்காதவர்கள் கடக்கும் முன்பே கடக்கப் போகும் பாதையை நினைப்பதும் அரிது

ஒரு முறை வாழப்போகும் வாழ்க்கையை தன்மானத்தோடும் மனிதப் பண்பாட்டோடும் கூடி வாழ்ந்த குடும்ப வழக்கத்தை முயன்றுப் பார்ப்போம் இப் புத்தாண்டில்!

- தஞ்சை த.இராமநாதன்
  1 Jan 2023