ஒரு கவிஞரின் குரல்
கொண்டாட்டம் என்றாலே வண்ணமிகு வான வேடிக்கைதான் என்றைக்கும் பழமையான வாடிக்கை
கொண்டாட்டம் என்றதுமே புரியாதபடி பாட்டைப் பாடி ஆட்டம் போடுவதுதான் இன்றைக்கு புதுமையான வேடிக்கை
யார் அதிகவிலை வெடியை வெடித்தார்கள் என்பதைப் பொறுத்ததுதான் செல்வ நிலை என்பது என்றைக்கும் பழமையான வாடிக்கை
யார் அதிகவிலை மதுவைக் குடித்து புகையைப் பிடிப்பதைப் பொறுத்ததுதான் நவீன செல்வ நிலை என்பது இன்றைய புதுமையான வேடிக்கை
கவிஞரின் குரலில்...
உள்ளது உள்ளபடியே உள்ளதால் உள்ளத்தின் ஒலியெனவே உணர்ந்தேன்!
- தஞ்சை த.இராமநாதன்












