Saturday, 27 December 2025

குழந்தை இதயம் நமக்கு உள்ளதா?

 

குழந்தை இதயம் நமக்கு உள்ளதா?

பாரபட்சம் பார்க்காது பார்ப்போரை பாசத்தோடு பார்த்து குதூகலித்து எளிதாகச் சிரிக்கும் அன்பான இதயம்

ஆள் பார்த்து இடம் பார்த்து அழாமல் அழத் தோன்றும் போதெல்லாம் சுதந்திரமாக அழும் அழகான இதயம்

திறந்த மனதோடும் மலர்ந்த முகத்தோடும் வெளிப்படையாக நேசிக்கும் வெகுளியான இதயம்

பயமற்ற மனதோடும் ஆழமான நம்பிக்கையோடும் தூக்குவோர் கைகளில் தூங்கும் தூய்மையான இதயம்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment