சரபோஜி கல்லூரி முன்னாள்
தமிழ்ப் பேராசிரியர் M.M
(ஆம்பலாப்பட்டு முனைவர் மு.முத்துசாமி அவர்களின் 7வது வருட நினைவு நாள்: 13 July 2026)
உங்கள் ஊரில் உள்ள காக்கைகளின் எண்ணிக்கையை எண்ணியதுண்டோ?
எண்ணியுள்ளேன் எனச் சொல்வார் எண்ணியது எப்படியென எண்ணவும் செய்வார்
எங்களூரில் 248 காக்கைகள் என்பார்
குறைந்தால் வெளியூர்ப் பயணமென்பார்
கூடினால் விருந்தாளி வருகையென்பார்
ஏனென்ற கேள்வியைச் சரியாகத் தட்டிக் கேட்பார்
ஏன் என்ற கேள்வியைத் தவறாது கேட்கவும் சொல்வார்
எதற்குக் கேள்வியெனச் சரியாக யோசிக்கச் சொல்வார்
என்ன கேள்வியெனத் தவறாது யோசிக்கவும் சொல்வார்
ஆம்பலான அல்லிக்கு மருதமென்பார் ஆ எனும் பசுவுக்கு முல்லையென்பார்
இருநிலம் சேர்ந்த ஒரு சிற்றூரென்பார்
அதுவே நமது ஆம்பலாப்பட்டு என்பார்!
(மறக்க முடியாத மாண்புகள் நிறைந்த என் தாய் மாமாவை / மாமனாரை வணங்குகின்றேன்!)
- தஞ்சை த.இராமநாதன்

அருமை
ReplyDelete🙏🙏
DeleteSuper Sir
ReplyDelete🙏🙏
Delete👍
ReplyDelete🙏🙏
Delete👍
ReplyDeleteவணக்கம் 🙏, என்றும் அவர்கள் நினைவு...
ReplyDelete👍🙏
ReplyDelete🙏
Deleteசூப்பர் sir
ReplyDelete