வெட்டிக் கொல்கிறார்கள்
வெட்டிக் கொள்கிறார்கள்
வெட்டியும் கொல்கிறார்கள்
கூடிக் கொள்கிறார்கள்
கூடியும் கொல்கிறார்கள்
தேடிக் கொள்கிறார்கள்
தேடியும் கொல்கிறார்கள்
ஓடிக் கொள்கிறார்கள்
ஓடியும் கொல்கிறார்கள்
ஆடிக் கொள்கிறார்கள் ஆடியும் கொல்கிறார்கள் பேசிக் கொள்கிறார்கள் பேசியும் கொல்கிறார்கள் மோதிக் கொள்கிறார்கள் மோதியும் கொல்கிறார்கள் மறைந்து கொள்கிறார்கள் மறைந்தும் கொல்கிறார்கள் கர்வம் கொள்கிறார்கள் கர்வத்தாலும் கொல்கிறார்கள் காமம் கொள்கிறார்கள் காமத்தாலும் கொல்கிறார்கள் கர்மம் கொள்கிறார்கள் கர்மத்தாலும் கொல்கிறார்கள்
மிருகத்தனம் கொள்ளாதீர்கள்
மிருகத்தனத்தாலும் கொல்லாதீர்கள்!
- தஞ்சை த இராமநாதன்

சிறப்பு. சொல்லாடல் மிக்க நயம். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி🙏🙏
DeleteGood
ReplyDelete🤝🤝
ReplyDelete