Friday, 29 November 2024

டன்டனக்கா எல்லோருக்கும் ஒன்றே

 

டன்டனக்கா எல்லோருக்கும் ஒன்றே

இறக்குமுன் எல்லா கோணத்திலும் எல்லோரும் வெவ்வேறு கோணத்தில்                          இறந்தபின் எல்லா கோணத்திலும் எல்லோரும் ஒரே கோணத்தில்

இறக்கும்வரை வாயை மூடாதுப் பேசியவர் வாய்மூடிக் கிடக்கின்றார்
இறக்கும்வரை வாயை மூடியேக் கடத்தியவர் வாயைப் பிளந்து கிடக்கின்றார்

தங்கப் பெட்டியோ தகரப் பெட்டியோ          அருணா கயிறுவரை வெட்டப்படும்
சந்தன பெட்டியோ சாதாரண தட்டியோ
டன்டனக்கா ஒரே மாதிரி தட்டப்படும்!

- தஞ்சை த.இராமநாதன்


Wednesday, 27 November 2024

பழத்தின் பலம் பழத்தில்

 

பழத்தின் பலம் பழத்தில்

பழுத்த பழத்தை வெட்டித் துண்டாக்கிக்
கடித்ததும் இனித்தால் பலமென்பார்கள்
வெட்டுண்டுத் துண்டாகித் துவண்டு        அழுகாது இருந்தால் பழமென்பார்கள்

அடுத்தவர் உழைப்பை உறிஞ்சித் தளிர்த்ததைத் திறமை என்பார்கள்                                  உழைத்தவர் களைத்து வருந்தித்            தவிப்பதை மடமை என்பார்கள்

வெள்ளம் வருமெனத் தெரிந்ததும்                துன்பம் வருத்துகிறது என்பார்கள்
வெள்ளம் வடியுமெனத் தெரிந்ததும்
இன்பம் நெருங்குகிறது என்பார்கள்!

- தஞ்சை த.இராமநாதன்


Thursday, 21 November 2024

ரகுவரன்-ரவி-ரஹ்மான் வகையறா

 

ரகுவரன்-ரவி-ரஹ்மான் வகையறா

ரகுவரன் விவாகரத்து பெற்றது வில்லன் வாழ்வின் விவகாரமென மறந்தோம்

ரவி விவாகரத்து பெற்றது கதாநாயகன் வாழ்வின் விவகாரமென மறந்தோம்

ரஹ்மான் பெறப்போவதை இசைத்தோன்
வாழ்வின் விவகாரமென மறப்போம்

பிழைப்புக்காக நடிப்பவர்கள் மண வாழ்வு திடீரென முடிவைப் பெறும்போது

மண வாழ்வை நடித்து வாழ்வோர் வாழ்வு முழுமை அடைய வழியேது?

-  தஞ்சை த.இராமநாதன்


Tuesday, 19 November 2024

கொடுக்கல் வாங்கல்

 

கொடுக்கல் வாங்கல்

பேரைப் புகழோடுப் பெற முடியாததைப் பணம் கொடுத்து வாங்கி விடுவதும்
பதவியைப் படித்துப் பெற முடியாததை இனம் கெடுத்து வாங்கி விடுவதும்

கொடுக்க முடிந்ததைக் கொடுத்துக் கொடுத்தே முடிந்தவராகி விடுவதும்
வாங்க முடிந்ததை வாங்கி முடித்துக் கொடுத்து வைத்தவராகி விடுவதும்

கொட்டிக் கொட்டித் தீர்த்து நீர் தீர்ந்து
முடிந்ததாலும் மேகம் கொட்ட வருவதும்
வாங்கி வாங்கி தீர்த்து நீவிர் வாங்க வழியின்றி வாழ்வு முடிந்து விடுவதும்

அரசியலில் சகஜமப்பா என்றாலும்
வாழ்வியலின் சாராம்சம் இதுதானப்பா!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 14 November 2024

ஜூ ஜூபி

 

ஜூ ஜூபி

செல்லடி எனக் கேட்டதும் தனக்குக் கிடைத்தது சொல்லடி என்றவள்
செல்லம்மா எனக் கேட்டதும் தனக்குக் கிடைத்தது செல்லமடி என்கிறாள்

தள்ளடா எனச் சொன்னதும் தள்ளாதுத் தள்ளாடித் தடுமாறி நின்றவன்
தள்ளாத வயதில் தள்ளியே நின்றாலும் தள்ளாமலே தள்ளாடி நிற்கின்றான்

பணம் கிடைக்குமாயின் பிணத்தைவிடப்
பலமாகப் பல்லைப் பிளக்கின்றான்
பயன் கிடைக்காததாயின் பல் இளித்துப்
பழகியதைக் கனவாகக் காண்கின்றான்!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 10 November 2024

உண்மை உண்மையே

 

உண்மை உண்மையே

தேரோட்ட தேரோட்டம் முடிந்ததும் தேர் நின்றால் உறுதியாகத் தேரடி
போராடி போராட்டம் முடிந்ததும் போர் நின்றால் இறுதியாக அதிரடி

ஏரோட்ட ஏரோட்டம் முடிந்ததும் சேர் அடித்தயிடம் பயிர் பயிரிடப்படும்
காரோட்ட காரோட்டம் முடிந்ததும் யார்
நிறுத்துமிடமும் கார் நிறுத்துமிடம்

உழைத்து உறவுக்கு உதவிய எவர்
உழைப்பும் தூக்கி எறியப்படும்
நயவஞ்சகம் நாடகம் ஆடும் எவர்        துரோகமும் உயர்த்திப் போற்றப்படும்!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 9 November 2024

ஒற்றுமை-பொறாமை-வேற்றுமை

 

ஒற்றுமை-பொறாமை-வேற்றுமை

கா காவெனக் கரைந்து கூட்டிக் கூடி  உணர்வோடு உண்டால் காகங்கள்
வான் வெளியில் ஓடிக் கூடிச் சேர்ந்து குளிரோடு பொழிந்தால் மேகங்கள்

லொள் லொள்ளென கூடிக் குரைத்துக் கடித்துக் குதறிக் கொன்றால் நாய்கள்
சர் சர்ரென வேகம் கூட்டிக் குறைத்து    மோதிக் கொன்று செத்தால் பேய்கள்

உணர்வோடும் உரிமையோடும் கூடிக் கொண்டாடும் வாழ்வில் மெய்கள்
வேற்றுமையோடும் பொறாமையோடும் ஆடி அடங்கிடும் வாழ்வில் பொய்கள்!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 4 November 2024

இனிப்பல்ல பலகாரம்

 

இனிப்பல்ல பலகாரம்

இடத்தை நல்லா கூட்டுமாறு சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கூட்டுமாறு உடனே கேட்டு விடுகிறார்கள்

வீட்டை நல்லா பெருக்குமாறு சொல்லி முடிப்பதற்குள்ளாகவே விளக்குமாறு உடனே கேட்டு விடுகிறார்கள்

சமைத்து தாளிச்சதும் தாளிச்சதை சாப்பிடக் கேட்டால் தாளிச்சாவே இருப்பதாகக் கொடுக்கிறார்கள்

தினமும் மலரை மாலையில் கொடுக்கச் சொன்னால் மாலை மலர் வேளையில் தின மலரைக் கொடுக்கிறார்கள்

தீபாவளிக்கு இனிப்பை அதிகம் சாப்பிடாதீர்கள் என்று சொன்னால் இனிப்பல்ல பலகாரமெனச் சாப்பிடுகிறார்கள்!

- தஞ்சை த.இராமநாதன் 

Saturday, 2 November 2024

மறக்க முடியாத மாரிக்கண்ணு


மறக்க முடியாத மாரிக்கண்ணு

ஓடி ஆடி விளையாடிச் சுற்றி வந்தாலும் அதிஷ்டக்காரனென முதலில் சாக்கைப் பிடிக்கச் சொல்லும் என் அப்பாயி
சாக்குப் போக்குச் சொல்லாமல் சந்தைக்குப் போகும் சாக்கைப் பிடித்தவுடன் பிடித்தபடி ஓடி விடுவான் அப்பாடி

எட்டு வயதினிலே கண்ணிலே கண்ணில் கட்டி வந்ததால் கண்ணை மறைத்து வலியைக் கொடுத்திடும்
ராமராசு பக்கத்தில வாய்யா என கூப்பிட்டு கூப்பிட்டு தினமும் என் கண்ணை என் அப்பாயி பார்த்திடும்
கண்ணைக் காட்டிக் காட்டி நான்காவது நாள் கட்டிப் பழுத்ததைப் பார்த்திடும் என் அப்பாயி
ரொம்ப கிட்டக் கூப்பிட்டு நாக்கை வைத்து கட்டியை வழித்து எடுத்திடும் என் அப்பாயி

கண்ணில் கட்டியை நீக்கியதை எண்ணினால் நெஞ்சு வலிக்க அழுவேன் என் அப்பாயி
இருந்தாலும்,
என் கண்ணீரைத் துடைக்க என் கையே உதவுவதால் நீ கவலைப்பட வேண்டாம் என் மாரிக்கண்ணு அப்பாயி!

- தஞ்சை த.இராமநாதன்