Saturday, 31 December 2022

பெருமைகள் பலவிதம்

 


பெருமைகள் பலவிதம்

கஷ்டப்படாது இஷ்டப்பட்டப் பொருளை பெற்றால்தான்                                                            பெற்றப் பொருளுக்கும் பெற்ற நபருக்கும் பெருமையா?
இஷ்டத்தோடு கஷ்டப்பட்டால்தான் பெற்றப்  பொருளுக்கும்                                                              பெற்ற நபருக்கும் பெருமை!

வீட்டினில் தலையாயக் கடமைகளை செய்ய முயன்று                                                            மாயைப் புகழுக்காக முயற்சி செய்யாதது மட்டுமா பெருமை?                                                      பெற்றோரை முதியோர் இல்லத்தில்                    விட்டு விடாது மான உணர்வுடன் சேர்ந்து வாழ்வதில்தான் பெருமை!

அரையாபுரத்தார் அருகிலேயே உள்ள                108 லிங்கேஸ்வரரை வணங்கி                           நெல்லை பாபநாசநாதரையும் வணங்குவதில் மட்டுமா பெருமை?
தஞ்சையில் வாழ்வோர் அங்கேயேயுள்ள பிரகதீஸ்வரரையும் வணங்கி                                 கயிலை கைலாயநாதரையும் வணங்குவதில்தான் பெருமை!

- தஞ்சை த.இராமநாதன்


பாதி உடை தத்துவம்

 



பாதி உடை தத்துவம்

வறுமையைப் பார்த்து பாதி உடையை                Barrister காந்தியடிகள் அணிந்தது                    அர்த்தமுள்ள தத்துவம்
சாமியைப் பூஜிக்க பாதி உடையை                      Priests பூசாரிகள் கடவுள் முன் அணிவது          அர்த்தமற்ற தத்துவம்

கடவுளை வணங்க பண்பாட்டின்படி                    புரிந்த மொழியில் பூஜை செய்வது                      அர்த்தமுள்ள தத்துவம்                                              கடவுளை வணங்க பயன்பாட்டின்படி                புரியாத மொழியில் பூஜை செய்வது அர்த்தமற்ற தத்துவம்

கேட்டை அகற்ற அடி மனதில் அழுது                    ஆண்டவனுக்கு ஆராதனை செய்வது அர்த்தமுள்ள தத்துவம்                                          ஆடை அகற்றி அடி வயிற்றுக்குக்                          கீழே மட்டும் அணிந்து ஆராதனை செய்வது    அநாகரிகமான தத்துவம்

கட்சிக் கூட்டத்திற்கு செல்லும் நபர்கள்              கரை வேட்டி கதர் சட்டையோடு செல்வது          அர்த்தமுள்ள தத்துவம்                          வழிபாட்டுத் தலத்தில் பக்தர்கள் முன்                  ஆணின் தொந்தியைக் காண்பிப்பது                  அநாகரிகமான தத்துவம்!

- தஞ்சை த.இராமநாதன்


Friday, 30 December 2022

தாய்

 

தாய்

மனம் மகிழ்ந்து சுமந்து பெற்றெடுத்தாய்
தூய அன்போடு அறிவூட்டி வளர்த்தாய்
துன்பங்களைத் துடைத்து எறிந்தாய்
வயிற்றுப் பசியைப் போக்கி வைத்தாய்
தட்டிக் கொடுத்து உற்சாகம் கொடுத்தாய்  கண்டிக்க மெல்லக் குட்டவும் செய்தாய்            அம்மா என்றதும் ஓடோடி வந்தாய்                        நோயுற்றால் கவலையோடு நொந்தாய்              வயதானாலும் பாசத்தைத் தந்தாய்                      கணவனுக்கு பக்கப் பலமாக  இருந்தாய்            பேரப் பிள்ளைகளோடு நீ மகிழ்ந்தாய்                  பெற்றப் பிள்ளைகளுக்கு நீ அன்பைத் தாய்!

- தஞ்சை த.இராமநாதன்


Thursday, 29 December 2022

எது வெற்றிகரமான வளர்ச்சி?

எது வெற்றிகரமான வளர்ச்சி?

கோடிக்கு மேல் கோடிகளை மட்டும் சேர்த்தால் அது கோட்பாடற்ற வளர்ச்சி

விடாத  கொள்கையோடு கோடிகளை சேர்த்தால் அது கோட்பாடுடைய வளர்ச்சி 

மனிதாபிமானம் நல்லொழுக்கம் ஆன்மிகத்தோடு கோடிகளை சேர்த்தால் அதுவே வெற்றிகரமான வளர்ச்சி!

- தஞ்சை த.இராமநாதன் 

Wednesday, 28 December 2022

அனைவரும் ஒரு நாள் பிணக்காரரே

 

அனைவரும் ஒரு நாள் பிணக்காரரே

பணம் இருந்தால் இருப்பவர் எல்லாம் உயர்வானப் பணக்காரர்கள்
இறந்து முடிந்தால் இறந்தவர் எல்லாமே உயிர்போனப் பிணக்காரர்கள்

எழுந்து வாவென இறந்தவரைப் பார்த்து வேகமாகக் கத்துவார்கள்
எழுந்து வந்தால் பேயெனக் கத்தி                      மோசமாகக் குத்துவார்கள்

மணம் நறுமணமென வாசனையைப் பண உடலில் தெளிப்பார்கள்
பிணம் நாறுமென வாசனையைப் பிண உடலிலும் தெளிப்பார்கள்

முதலில் அடித்துக் கொண்டு பொதுவாக கூட்டத்தோடு அழுவார்கள்
பிறகு அலட்டிக் கொள்ளாமல் மெதுவாக அடக்கத்தோடு அழுவார்கள்

போட்ட வேசத்தைக் கலைக்க வெடியைக் கொளுத்தி வெடிப்பார்கள்
காட்டாத பாசத்தைக் காட்ட கண்ணீரைக் கொட்டி வடிப்பார்கள்

பல்லக்கோடு நகர்-வலம் போனாலும் அது செத்தப் பிணமே
பாடையோடு ஊர்-வலம் போனாலும் அதுவும் செத்தப் பிணமே!

- தஞ்சை த.இராமநாதன்


Saturday, 17 December 2022

எருமையின் அருமை

 

எருமையின் அருமை

எருமை நம் சொந்த வீட்டில் உயிரோடு பொறுமையாய் அருகில் இருந்தபோது எருமையின் பெருமை அருமையென நமக்கு அப்போது புரியவேயில்லை                                        

எருமை எந்த நாட்டில் இப்படி உயிரற்று            சிலை எருமையாய் இருந்தபோதும்                    புதுமையான எருமையே பெருமையென நமக்கு இப்போது புரியாமலும் இல்லை

தண்ணீருள் முழுதாய் மூழ்கியும் நீந்தியும்        கரை சேர்த்த உள்ளூர் எருமையின் அருமை  நாம் வறுமையில் இல்லாது இருந்தபோது நமக்கு அப்போது புரியவேயில்லை

தண்ணீரில் மூழ்கவோ அல்லது நீந்திக் கரை சேரவோ இயலாத நிதி வறுமையை சிலை எருமை மூலமாக உணர்த்தப்படுவதை நமக்கு இப்போது புரியாமலும் இல்லை!                  

- தஞ்சை த இராமநாதன்