தாய்மொழி நாள்
கல் தோன்றாதபோது
மண்ணும் தோன்றாதபோது
ஒலி தோன்றியபோது
ஒளியும் தோன்றியபோது
ஒளியோடு ஒலி ஒளிந்தபோது
ஒளியோடு ஒலி ஒலித்தபோது
ஒளிர்ந்தே ஒலித்த ஓசையின்போது
ஒய்யாரமாய்ப் பிறந்ததுத் தமிழ்!
தஞ்சை த.இராமநாதன்
தாய்மொழி நாள்
கல் தோன்றாதபோது
மண்ணும் தோன்றாதபோது
ஒலி தோன்றியபோது
ஒளியும் தோன்றியபோது
ஒளியோடு ஒலி ஒளிந்தபோது
ஒளியோடு ஒலி ஒலித்தபோது
ஒளிர்ந்தே ஒலித்த ஓசையின்போது
ஒய்யாரமாய்ப் பிறந்ததுத் தமிழ்!
தஞ்சை த.இராமநாதன்
தமிழரும் தூயவராகலாம்
கழிவுகளை அகற்றிச் சுத்தப்படுத்தினால் drain-
கழிவுகளை ஏற்றி அசுத்தப்படுத்தினால் brain-
மாடுகளோடுக் கலந்து வாகனத்தில் பறந்து கடப்பது சாதனை ஆகலாம்
மனிதரோடு சேர்ந்து நாய்கள் சாலையில் திரிந்து
நடப்பது வேதனை ஆகலாம்
அசுத்தம் செய்யாத மனிதர் தமிழராக இருந்தாலும் தூய மனிதராக ஆகலாம்
சுத்தமான இனம் தமிழ் இனமாக இருந்தாலும் தூய இனமாக ஆகலாம்!
தஞ்சை த.இராமநாதன்
போராட்டம்
போராட எண்ணம் இல்லாதவர்களும் போராடும் நிலைக்கு வந்தது ஏன்?போராடுவோரைப் போராடா வண்ணம் போராடிக் காக்கச் செல்லாததும் ஏன்?
உழுதுண்டு வாழ்ந்து முன் செல்பவர் போராடும் நிலைக்கு வந்தது ஏன்?
தொழுதுண்டு வாழ்ந்து பின் செல்பவர் போரிடும் நிலைக்குச் சென்றதும் ஏன்?
போராடுமுன் தடுக்க முயலாமல்
போராடும்போது தடுக்க முயல்வது ஏன்?
போராடியபின் கொடுக்க முயல்வதை
போராடுமுன் கொடுக்க முயலாததும் ஏன்?
- தஞ்சை த இராமநாதன்
திரைப்படம் தந்த பாடம் என்ன?
படத்தில் படத்தை உற்றுப் பார்த்து மகிழ்வை அடைந்தீரா?
படத்தில் பாடத்தைக் கற்றுத் தேர்ந்து புகழை அடைந்தீரா?
பிடித்ததால்தான் படத்தைப் பார்க்க குடும்பத்தோடு சென்றீரா?
பிடிக்குமென நினைத்து படத்திற்கு குடும்பத்தோடு சென்றீரா?
குடும்பத்தோடு பார்க்கக் கூடியதைப் படத்தினில் பார்த்தீரா?
குடும்பத்தோடு பார்க்கக் கூடாததையும் படத்தினில் பார்த்தீரா?
- தஞ்சை த இராமநாதன்
எளிய கேள்வியும் குழப்பும் பதிலும்
உழவர் பின்னே உலகென்றால் அர்த்தம் என்ன?
உழவுத் தொழில்தான் உலகிலேயே முதன்மையான தொழில்!
இதெல்லாம் இப்போதைக்கு ஒத்து வருமா?
இது எப்போதும் எங்கேயும் ஒத்து வரும்!
விளைந்த பொருளுக்குத் தகுந்த விலை கிடைப்பதில்லையே ஏன்? விலை இருக்கிறதோ இல்லையோ பசியாற உணவு வேண்டுமே!
உண்டு கொழுப்பவர்கள் உழைக்கும் உழவரை
உழவர் என்றாவது ஒரு நாள் உயர்ந்த நிலையை அடையப்போவது உறுதி!
உழவுத் தொழில் செய்யும் ஆணை எந்தப் பெண்ணும்
மணக்க ஏங்கும் மனநிலை என்றாவது ஒரு நாள் வந்துவிடும் உறுதி!
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது உண்மைதானோ?
உழக்குக் கணக்கெல்லாம் காலாவதியான கணக்கு!
உழவர் பின்னே உலகு என்பதும் காலாவதியான கணக்குதானே? உம்மோடு எனக்கு எதற்கு பிணக்கு?
- தஞ்சை த இராமநாதன்
பாரம்பரியமிக்கது பரம்பரை
இருப்பதைப் போதாதென நினைத்தால்
இல்லாததே நினைப்பில் அகலாது நிற்கும்
இருப்பதே போதுமென நினைத்தால் இல்லாதது நினைப்பில் இல்லாது நிற்கும்
கல்லைக் கல்தானேயென நினைத்தால் கல்லால் கட்டிய கல்லணை நில்லாது வீழும்
கல்லையே கலையென நினைத்தால் கல்லால் கட்டிய கோயில் நிலைத்து வாழும்
தானமும் தர்மமும் செய்ய நினைத்தால் தனமும் பணமும் தானாக வளர்ந்து செழிக்கும்
நியாயமும் நேர்மையும் உள்ள மனதால்
பாரம்பரியமும் பரம்பரையும் செழித்து வளரும்!
- தஞ்சை த இராமநாதன்