Sunday, 2 August 2026

அன்போடு அறுபதைக் கடந்தேன்



பகுத்தறிவான அறிவாற்றலைப் பயன்பாட்டில் கொண்டும்
பக்குவமான செயலாற்றலைப் பண்பாட்டில் கொண்டும்

நியாய நீதியோடு நேர்மையைக் கோட்பாட்டில் கொண்டும்                                                 கடமையோடு கண்ணியத்தைக் கொள்கையில் கொண்டும்

அறிவுரையோடு ஆலோசனையை இரு மகன்களுக்குச் சொல்லித் தந்தும்
தன்மையோடு பாசத்தினைக் கணவன் இராமநாதனுக்கு அள்ளித் தந்தும்

பிறந்த ஆம்பலாப்பட்டில் முதல் பெண் பொறியாளராகப் படித்துச் சிறந்தும் சிங்கப்பூரில் முனைவர் படிப்பைக் குடும்பத்திற்காகப் படிக்காமல் துறந்தும்

அடியேன் எனக்கு அளவில்லாத ஆனந்தத்தை அள்ளித் தந்த
அறியாததை நான் அறிய அரிய தியானத்தைச் சொல்லித் தந்த என் மனையாள் அன்பரசிக்கு..
அறுபான் வாழ்வியலைக் கீழே ஈரடியில் தந்தேன்...
"அன்பு-நாதனுக்கு ஆற்றும் உதவி இந்நாதன் என்னோற்றான் கொல்எனும் சொல்"

என் உள்ளத்தின் ஒலியோடு ஒளியை ஏற்றி இப்பாவழி பாடி மகிழ்கின்றேன்!

- தஞ்சை த.இராமநாதன்

10 comments: