Saturday, 30 March 2024

ஆறாத எண்ணம்


ஆறாத எண்ணம் 

மாறாத எண்ணமாயின் அது என்றென்றும் ஆறாத எண்ணமே
மாறிய எண்ணமாயின் அது என்றென்றும் ஆறிய எண்ணமே 

எண்ணாத எண்ணமாயின் அது என்றென்றும் எண்ணில்லா எண்ணமே 
எண்ணும் எண்ணமாயின் அது என்றென்றும் எண்ணினுள் எண்ணமே 

சொல்லும் எண்ணமாயின் அது என்றென்றும் கொல்லாத எண்ணமே
கொல்லும் எண்ணமாயின் அது என்றென்றும் சொல்லாத எண்ணமே 

உருகா உளத்தினை உருக வைத்திடும் வாசகம் திருவாசகத்திடமே 
உருகும் உளத்தினை பெருக வைத்திடும் வாசகமும் திருவாசகத்திடமே!

தஞ்சை த இராமநாதன் 

Wednesday, 13 March 2024

வீரமும் சோரமும்

வீரமும் சோரமும்

நற்குடியில் பிறந்து விவேகத்தோடு                    கால்மேல் கால் போட்டு வேளைப்                        பார்க்காது காலை ஆட்டுவது வீரம்!                    நாறக்குடியில் பிறந்து விவகாரத்தோடு            காலை மாலைப் பார்க்காது ஆளைப்                    பார்த்துக் கால் ஆடுவது சோரம்!

மனதில் உள்ளதை உள்ளபடி உரைத்து              உரைத்ததை உரைத்தபடி உரைக்கும்படி            உணர வைப்பது வீரம்!
மனதில் ஊறாததை உளறாது உரைத்து            உரைத்ததை உரைக்காதபடி உணர்த்தி              உணர்வற்று வாழ்வது சோரம்!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 8 March 2024

தேர்தல் நேரம்

 


தேர்தல் நேரம்

செய்யவே முடியாததை செய்வோமென சொல்லித் திரிவதும் தேர்தல் நேரத்தில்
செய்து முடிக்காததைச் செய்தோமென சொல்லித் திரிவதும் தேர்தல் நேரத்தில்

செல்லாத போக்கிலும் செல்வோமென சென்று வருவதும் தேர்தல் நேரத்தில்
செல்லாத வாக்கிலும் வெல்வோமென வென்று வருவதும் தேர்தல் நேரத்தில்

சொல்லியபடியே கிள்ளிக் கொடுத்து வெற்றிப் பெறுவதும் தேர்தல் நேரத்தில்
சொல்லாதபடியும் அள்ளிக் கொடுத்து
வெற்றிப் பெறுவதும் தேர்தல் நேரத்தில்

செலவைச் செய்து கோடியைப் பார்க்க ஓட்டமாய் ஓடுவதும் தேர்தல் நேரத்தில்
செயலைச் செய்து கேடியைக் காக்க
கூட்டமாய் கூடுவதும் தேர்தல் நேரத்தில்!

- தஞ்சை த இராமநாதன்