Friday, 30 June 2023

சாட்சிகள்

சாட்சிகள்

பார்த்ததைப் பார்த்தேனென சொல்லி வெல்லும் சாட்சி உண்மை சாட்சி
பார்க்காததைப் பார்த்தேனென சொல்லி கொல்லும் சாட்சி பொய் சாட்சி

பார்த்ததைப் பார்த்தேனென சொல்ல வைப்பது மனிதனோட மனசாட்சி
பார்க்காததைப் பார்த்தேனென சொல்ல வைப்பது மனிதனோட பணசாட்சி

சொன்ன சொல்லை மாற்றும்போது மாறிவிடுவது மாறும் மனித சாட்சி
சொன்ன சொல்லை மாற்றாதபோது மாறாதிருப்பது மாறாத இறை சாட்சி!

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 27 June 2023

மாறும் பயணத்தில் மாறாப் பயணம்

 

மாறும் பயணத்தில் மாறாப் பயணம்

பாலகன் விடலையானான்
பதின்மக்கலை முகத்திலேறி

விடலை காளையானான்                திருமணமாலை கழுத்திலேறி

காளை மாளியானான்
மனக்கவலை மனதிலேறி

மீளி மறவோனான்
நரைத்தமுடி தலையிலேறி

மறவோன் திறவோனான்
வாய்மூடி மவுனத்திலேறி

திறவோன் முதுமகனாகிப்
போனான் பாடையிலேறி!

- தஞ்சை த.இராமநாதன் 

Monday, 26 June 2023

நரியும் பரியும் சமமாக முடியாது

நரியும் பரியும் சமமாக முடியாது

ஒழுக்கம் உள்ளாரும்
ஒழுக்கம் இல்லாரும் சமமில்லை

உழைத்துக் களைப்பாரும்
உழைக்காது இருப்பாரும்  சமமில்லை

வேளையில் தூங்கி எழுவாரும்                              காலையில் தூங்கி விழுவாரும் சமமில்லை

பெரியோரை அவமதிப்பாரும்                                பெரியோரை மதிப்பாரும் சமமில்லை

பார்த்ததும் வணக்கம் சொல்லுவோரும்
வணக்கம் சொல்லாதாரும் சமமில்லை

முகத்தில் பொய்யாக நடிப்பாரும்
அகத்தில் மெய்யாக துடிப்பாரும் சமமில்லை

மானம் காத்து வாழ்வோரும்
மானம் அழித்து வீழ்வோரும் சமமில்லை

குறையோடு கூத்தாடும் குறை குடமும்              குறையில்லா நிறை குடமும் சமமில்லை

மறைந்திருந்து ஊளையிடும் நரியும்
மகிழ்ந்தோடும் பரியும் சமமில்லை!

- தஞ்சை த.இராமநாதன்




Saturday, 24 June 2023

சென்னையில் மெட்ராஸ்

 

சட்டம்போட்டுதான் மெட்ராஸின் பெயரைச்      சென்னையென மாற்றி இருப்பார்கள்              திட்டம்போட்டுதான் மெட்ராஸின் பெயரைச்    சென்னையென மாற்றி இருப்பார்கள் 

சட்டத்தை நிலைநாட்டும் நீதி மன்ற பெயரோ சென்னை நகரில் மெட்ராஸின் பெயரில்      நீதி மன்றம் இருக்கும் Pariis Corner பெயரோ    பாரிமுனை என நல்ல தமிழின் பெயரில் 

தமிழில் மெட்ராஸென இருப்பது என்னவோ    மெட்ராஸுக்கு அழகாக இருக்கலாம்                  தமிழில் சென்னையென இருதிருந்தால்            தமிழ்நாட்டுக்கே அழகாக இருந்திருக்கும்

கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே முன் தோன்றியதாகச் சொல்வதில் அர்த்தமில்லை  சென்னைத் தோன்றியும் மெட்ராஸ் மாறாதது நீதித் துறையாயினும் நியாயமேயில்லை!

- தஞ்சை த.இராமநாதன்