சட்டம்போட்டுதான் மெட்ராஸின் பெயரைச் சென்னையென மாற்றி இருப்பார்கள் திட்டம்போட்டுதான் மெட்ராஸின் பெயரைச் சென்னையென மாற்றி இருப்பார்கள்
சட்டத்தை நிலைநாட்டும் நீதி மன்ற பெயரோ சென்னை நகரில் மெட்ராஸின் பெயரில் நீதி மன்றம் இருக்கும் Pariis Corner பெயரோ பாரிமுனை என நல்ல தமிழின் பெயரில்
தமிழில் மெட்ராஸென இருப்பது என்னவோ மெட்ராஸுக்கு அழகாக இருக்கலாம் தமிழில் சென்னையென இருதிருந்தால் தமிழ்நாட்டுக்கே அழகாக இருந்திருக்கும்
கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே முன் தோன்றியதாகச் சொல்வதில் அர்த்தமில்லை சென்னைத் தோன்றியும் மெட்ராஸ் மாறாதது நீதித் துறையாயினும் நியாயமேயில்லை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment