Saturday, 24 August 2024

மூன்றின் முக்கியத்துவம்

 


மூன்றின் முக்கியத்துவம்

முதலிலேயே கோணமானால் அது முற்றிலும் கோணமாகும்
மூன்றும் கோணமானால் அது முதலிலேயே முக்கோணமாகும்

மூன்று கனிகளானால் அது நமக்குப் பிடித்த முக்கனிகளாகும்
மூன்று முனைகளானால் அது நமக்குப் பிடிக்க  மும்முனைகளாகும்

மூன்று வண்ணங்களானால் அது வெளிப்படும் மூவண்ணமாகும்
மூன்று குணங்களானால் அது
வெளிப்படும் முக்குணமாகும்

மூன்று பாகங்களானால் அது பிரிந்தபின் முப்பாகமாகும்
மூன்று போகங்களானால் அது விளைந்தபின் முப்போகமாகும்

மூன்று சங்கங்களானால் அது சங்ககாலங்களின் முச்சங்கமாகும்
மூன்று சந்திப்புகளானால் அது அந்தந்தக் காலங்களில் முச்சந்தியாகும்

மூன்று கலைகளானால் அது முக்கியமான முக்கலையாகும்
மூத்த மொழியாததால் அதில் ஐக்கியமானது முத்தமிழாகும்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 22 August 2024

எது தமிழ்? யார் தமிழர்?

எது தமிழ்? யார் தமிழர்?

காது கேட்கிறதா? எனக் கேட்பவர் தமிழரா?
காது கேக்கல எனச் சொல்பவர் தமிழரா?
காது கேட்கவில்லையா? எனக் கேட்பவர் தமிழரா?
காது கேக்குது எனச் சொல்பவர் தமிழரா?

கடவுளைப் பார்த்தாயா? எனக் கேட்பவர் தமிழரா?
கடவுளைப் பாக்கல எனச் சொல்பவர் தமிழரா?
கடவுளைப் பார்க்கவில்லையா? எனக் கேட்பவர் தமிழரா?
கடவுளைப் பாத்தேன் எனச் சொல்பவர் தமிழரா?

போய் சேர்ந்துட்டாயா? எனக் கேட்பவர் தமிழரா?
போய் சேரல எனச் சொல்பவர் தமிழரா?
போய் சேரவில்லையா? எனக் கேட்பவர் தமிழரா?
போய் சேந்துட்டேன் எனச் சொல்பவர் தமிழரா?

பாடம் கற்றாயா? எனக் கேட்பவர் தமிழரா?
பாடம் கத்துக்கல எனச் சொல்பவர் தமிழரா?
பாடம் கற்கவில்லையா? எனக் கேட்பவர் தமிழரா?
பாடம் கத்துக்கிட்டேன் எனச் சொல்பவர் தமிழரா?

தமிழைச் சுவைத்தாயா? எனக் கேட்பவர் தமிழரா?
தமிழைச் சுவைக்கல எனச் சொல்பவர் தமிழரா?
தமிழ் இனித்ததா? எனக் கேட்பவர் தமிழரா?
தமிழ் இனிக்கல எனச் சொல்பவர் தமிழரா?

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 20 August 2024

நாணயம்

 

நாணயம்

நாட்டுக்கு நாடு மதிப்புக்கு மிகவும் தேவை நாணயம்
நாட்டின் மதிப்புக்கு நாட்டுக்கு மிகவும் தேவை நாணயம்
மனிதன் நாணயத்துடன் வாழ மிகவும் தேவை நாணயம்
மனிதன் நா நயத்துடன் பேச மிகவும் தேவை நாணயம்

நீதியோடு நேர்மை சேர்ந்திட மிகவும் தேவை நாணயம்
நிதியோடு கருணை சேர்ந்திட மிகவும் தேவை நாணயம்
உலக சந்தை நிர்ணய மதிப்புக்குத் தேவை தங்க நாணயம்
உளச் சொந்த நிர்மாண சோதிப்புக்குத் தேவை உங்க நாணயம்

பண்பில்லாதவரிடம் பணமாக வந்து சேருவது பந்தாவான நாணயம்
அன்புள்ளவரிடம் தானாக வந்து சேருவது பண்பான நாணயம்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 15 August 2024

எப்படி / எதற்குச் சுதந்திரம்?

 

அன்று,
அடிமைத்தனம் அகன்றிடத்தான் கிடைத்தது சுதந்திரம்
ஆங்கிலேயர் ஆட்சி அகன்றிடத்தான் கிடைத்தது சுதந்திரம்
இன்னுயிர்கள் நொந்து செத்துத்தான் கிடைத்தது சுதந்திரம்
ஈடு இணையற்ற தியாகத்தால்தான் கிடைத்தது சுதந்திரம்
உறுதி மிகுந்த கோட்பாட்டால்தான் கிடைத்தது சுதந்திரம்
ஊக்கம் நிறைந்த செயல்பாட்டால்தான் கிடைத்தது சுதந்திரம்
ஐக்கிய தொடர் போராட்டத்தால்தான் கிடைத்தது சுதந்திரம்
ஒருமித்த கொள்கையால்தான் கிடைத்தது சுதந்திரம்
ஓங்கிப் பிடித்த தேசக் கொடியால்தான் கிடைத்தது சுதந்திரம்
அவையம் யாவும் அங்கீகரித்துத்தான் கிடைத்தது சுதந்திரம்!

இன்று,
பசியும் உண்டு பட்டினியும் உண்டு    கொலையும் உண்டு கொள்ளையும் உண்டு போதையும் உண்டு பேதையும் உண்டு  துரோகமும் உண்டு துயரமும் உண்டு... சுதந்திர மாதா கண்ணீர் வடிப்பது இவற்றையெல்லாம் கண்டு!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 10 August 2024

தன்னைத் தானே அறியலாம்


தன்னைத் தானே அறியலாம்

அரிவாள் ஏந்தியவர்கள் அடிதடியெனும்    சதியால் முந்தியவர்கள்
அறிவால் முந்தியவர்கள் விடாபிடியெனும் 
விதியால் பிந்தியவர்கள்

போதைக்கு அடிமையானவர்கள் பூமிக்கு
சுமையான தீயவர்கள்
போதிக்கத் துணையானவர்கள் சாமிக்கு இணையான தூயவர்கள்

அறிந்து அநியாயம் அக்கிரமம்    செய்வோர்கள் அயோக்கியர்கள்
தெளிந்து தினமும் தியானம்        செய்வோர்கள் தவப்புதல்வர்கள்

பணத்துக்காகப் பல் இளிப்பவர்கள் குணமிழந்த மனிதப்பதர்கள்
குணத்துக்காகத் தோள் கொடுப்பவர்கள்
மனம்கனிந்த மாமனிதர்கள்!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 9 August 2024

The Great Singapore / அருமையான சிங்கப்பூர்

 

The Great Singapore

Singapore is a tiny dot in the world's name
Singapore is a big point in the world's fame
Cleanliness and sanitation made Singapore world class                                                                    Singapore was greatly established by the hard working class                                                                Living in Singapore is a great blessing for the living people                                                                Living in Singapore makes the people as proudly living people!

- Dharmaraj Ramanathan
  Grassroots Leader (GRL)
  Yew Tee, Singapore

-------------------------------------------

அருமையான சிங்கப்பூர்

உலகத்தின் பூகோளப்படத்தில் சிங்கப்பூர் சிறு புள்ளி                                                        உலகத்தின் புகழிடத்தில் சிங்கப்பூர் பெரும் புள்ளி

சுத்தம் சுகாதாரத்தால்தான் சிங்கப்பூர் அடைந்தது உலகத்தரம்                                உறுதி உழைப்பால்தான் சிங்கப்பூர் அடைந்தது உயர்தரம்

சிங்கப்பூரில் வாழ்வது வாழ்வோருக்குப் பெரும் வரம்                                              சிங்கப்பூரில் வாழ்வதால் வாழ்வோருக்குப் பெருமை தரும்!

- தர்மராஜ் இராமநாதன்                             அடித்தள அமைப்பு தலைவர் (GRL)               Yew Tee, Singapore

Monday, 5 August 2024

நாண் உண்டேன் நான்

 


நாண் உண்டேன் நான்

நான் எடுத்து வந்து கொடுக்கட்டுமா என்றார் என் மனைவி
நான் வந்து எடுத்துக் கொள்ளட்டுமா என்றேன் நான் 
நானே எடுத்து வந்து கொடுக்கிறேன் என்றார் என் மனைவி
நீயே எடுத்து வந்து கொடுத்துவிடு என்றேன் நான்
நாணை தானே எடுத்து வந்து கொடுத்தார் என் மனைவி
நாணை எடுத்து மடித்து கடித்து உண்டு மகிழ்ந்தேன் நான்!

- தஞ்சை த இராமநாதன் 


Thursday, 1 August 2024

வயநாடா? வயல்காடா?

 

வயநாடா? வயல்காடா?

இயற்கையான சூரமலை அழிந்ததால்
செயற்கையான கோரநிலை வந்ததோ?
இயற்கையான அட்டமலை அழிந்ததால்
செயற்கையான அடைமழை வந்ததோ?

இயற்கையான வாடிக்கை மாறியதால்
செயற்கையான முண்டக்கை தடம் இடம் மாறியதோ?
இயற்கையான வயல்காடு தடம் மாறியதால்
செயற்கையான வயநாட்டின் இடம் தடம் மாறியதோ?

இயற்கையாலோ செயற்கையாலோ        இரந்து இறப்போர் எஸ்டேட்டிலும் ஏழைகள்தானே!

- தஞ்சை த இராமநாதன்