Saturday, 24 September 2022

பூவாகி மணந்திடு மொட்டே

 

பூவாகி மணந்திடு மொட்டே

பறித்த மொட்டு பொதுவாக எப்போது நுகர்ந்தாலும் மணப்பதுமில்லை
பறித்த மொட்டு மெதுவாக எப்போது மலர்ந்தாலும் மணக்காமலுமில்லை!

மொட்டோடு மொட்டை கோர்த்துக் கட்டா
நாறுகளோ மணப்பதுமில்லை
மொட்டையோடு மொட்டை சேர்த்துக் கட்ட
ஊருகளோ இணங்காமலுமில்லை! 

மொட்டில்லாது பூவை மட்டும் சூடிட பாவையர் எப்போதும் விரும்பியதுமில்லை                          மெட்டில்லாது பாவை மட்டும் பாடிட பாடுபவர் எப்போதும் விரும்புவதுமில்லை!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 22 September 2022

பாவிகளின் உலகமா இது?

 

பாவிகளின் உலகமா இது?

அன்புள்ளம் கொண்டோரை அடிமை ஆக்க நினைப்போர் அயோக்கியர்கள்
அப்பழுக்கு அற்றோரை அழ வைக்க நினைப்போர் அட்டூழியக்கார்கள்
உழைக்காது பணத்தைப் பெருக்கி பதுக்குவோர் பணப் பொறுக்கர்கள்
உழைப்போரை ஏமாற்றி உல்லாசமாய் வாழ்வோர் மனக் கிறுக்கர்கள்!

 
ஏய்த்துப் பிழைப்போரைப் பார்த்தால்                சொல்ல வேண்டும் அடப் பாவிகளே!
ஏமாந்து உழைப்போரைப் பார்த்தால்                சொல்ல வேண்டும் அப்பாவிகளே!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 20 September 2022

போகா இடமும் போகும் வழியும்

 

போகா இடமும் போகும் வழியும்

புல்லைக் கல்லில் தேடும் ஆட்டையும் கண்டோம்
கல்லின் காலோடு நிற்கும் ஆட்டையும் கண்டோம்
பாறையில் கொம்பைத் தேடும் யானையையும் கண்டோம்
கொம்பில்லா பாறையில் கொம்பில்லா யானையையும் கண்டோம்
போகா இடம் சென்று போகும் வழியையும் கண்டோம்
போகும் இடம் தெரிந்தும் போகா வழியையும் கொண்டோம்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 18 September 2022

செத்த நேரம் இதைப் படியுங்கோ

 

செத்த நேரம் இதைப் படியுங்கோ

செத்த நேரம் தினமும் தியானம் செய்து பாருங்கோ
செத்தபின் எதுவும் செய்ய முடியாது                    பாருங்கோ
செத்தையானபின் மலரில் மணமேது கூறுங்கோ
சொத்தையானபின் பல்லில் உயிரேது கூறுங்கோ
செத்தப் பிணத்தை தடியால் அடிப்பது தவறுங்கோ
சேத்தப் பணத்தை குடியால் அழிப்பது தவறுங்கோ!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 13 September 2022

எல்லை தரும் தொல்லை

 

எல்லை தரும் தொல்லை

வீட்டில் எல்லை மீறினால் தொல்லை
நாட்டில் எல்லை மாறினாலும் தொல்லை
ரேட்டில் எல்லை மாறினால் தொல்லை
ரோட்டில் எல்லை மீறினாலும் தொல்லை
காட்டில் எல்லை மீறினால் தொல்லை
கோர்ட்டில் எல்லை மாறினாலும் தொல்லை
போத்தல் எல்லை மாறினால் தொல்லை
பாட்டில் எல்லை மீறினாலும் தொல்லை
கோட்டால் பிரித்த எல்லையால் தொல்லை
கேட்டால் பிரிந்த எல்லையாலும் தொல்லை!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 11 September 2022

பிறப்பது எதற்காக?

 

பிறப்பது எதற்காக?

ஆண்ட வீட்டு மகாராணியென                              வாழ்ந்தவரும் இறந்து விடுகின்றார்
அண்டை வீட்டு மக ராணியென                            வாழ்ந்தவரும் இறந்து விடுகின்றார்
கோட்டையில் இருந்து ஆண்டவனாக                வாழ்ந்தவரும் இறந்து விடுகின்றார்
குடிசையில் இருந்து ஆண்டியாக                          வாழ்ந்தவரும் இறந்து விடுகின்றார்

இருந்தார் இறப்பை நினைக்காது
இருப்பை நினைத்து மகிழ்கின்றார்
இருப்பார் மறுபிறப்பை நினைக்காது
இறப்பை நினைத்து அழுகின்றார்!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 6 September 2022

ஊட்டும் பிள்ளை

 

ஊட்டும் பிள்ளை

ஊட்டி ஊட்டி வளர்த்தப் பிள்ளை
ஊட்ட ஊட்ட வளர்ந்தப் பிள்ளை
ஊட்டச் சத்தோடு வளர்த்தப் பிள்ளை
ஊட்டியச் சத்தோடு வளர்ந்தப் பிள்ளை
பார்த்து வளர்த்து வளர்ந்தப் பிள்ளை
பார்த்து வளர்த்த வளரும் பிள்ளை
பார்த்து ரசிக்க ஊட்டும் பிள்ளை
ருசித்துப் பார்க்க ஊட்டும் பிள்ளை!

- தஞ்சை த இராமநாதன்


Monday, 5 September 2022

வீணர்களின் வெட்டி வேலை

 

வீணர்களின் வெட்டி வேலை

அபகரிப்பில்லாமல் மரத்தோடு மரமாக வீட்டைக் கட்டி வாழ்வது தவறா? ஆரவாரமில்லாமல் உறவோடு உறவாக  கூட்டைக் கட்டி வாழ்வதும் தவறா?
வேலையில்லாமல் வெட்டித் தனமாக
மரத்தை வெட்டி சாய்ப்பது சரியா?
மூளையில்லாமல் முட்டாள் தனமாக
மரத்தை முறித்து சாய்ப்பதும் சரியா?
வள்ளலார் வாழ்ந்த வழியை மறந்து மரத்தை கொலை செய்வது தீரமா?
பாரதியார் தந்த வரியை மறந்து குருவியை கொலை செய்வதும் வீரமா?

- தஞ்சை த இராமநாதன்


Friday, 2 September 2022

புடிச்சிருக்கா? பிடித்திருக்கா?

 

புடிச்சிருக்கா? பிடித்திருக்கா?

குளிர்பானம் குடிக்கப் பிடித்திருந்தால் குடித்தபின் சளிப் பிடித்துவிடும்
குடிச்சி குடிச்சிப் பழகிவிட்டால்
குடிக்கும் பழக்கம் பிடித்துவிடும்
புகைப் பிடிக்க பழகிவிட்டால்                                புடிச்சப் பழக்கமாய் அது மாறிவிடும்
புடிச்சி திருமணம் நடந்திருந்தால்
பிடித்த வாழ்க்கைக் கிடைத்துவிடும்
கட்டிப் புடிச்சி வரவேற்றால் உறவுகள்            பிடித்த உறவாய் வளர்ந்துவிடும்
தீ பிடித்துக் குடிசை எரிந்து விட்டால்    எரிந்தபின் சாம்பலாகி அழிந்துவிடும்
புடிச்சப்படி ஊரை சுற்றித் திரிந்தால்                    பிடிக்காதப் பேரைத் தந்துவிடும்!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 1 September 2022

காற்றடித்த நேரத்திலே

 

காற்றடித்த நேரத்திலே

காற்று அலைபோல் அடித்தால் காற்றில் ஆலை காற்றாலையாக மாறும்
காற்றிலிருந்து இயந்திர ஆற்றலாகி இயந்திரத்திலிருந்து மின்னாக மாறும்
ஆடும் செருப்பும் அரசியல் செய்தால்
அரசியல் அருவருப்பாக மாறும்
மனதில் சுத்த எண்ணம் ஊறாதாயின்                நாத்த வாயில் வார்த்தை நாறும்!

- தஞ்சை த இராமநாதன்