பாவிகளின் உலகமா இது?
அன்புள்ளம் கொண்டோரை அடிமை ஆக்க நினைப்போர் அயோக்கியர்கள்
அப்பழுக்கு அற்றோரை அழ வைக்க நினைப்போர் அட்டூழியக்கார்கள்
உழைக்காது பணத்தைப் பெருக்கி பதுக்குவோர் பணப் பொறுக்கர்கள்
உழைப்போரை ஏமாற்றி உல்லாசமாய் வாழ்வோர் மனக் கிறுக்கர்கள்!
ஏய்த்துப் பிழைப்போரைப் பார்த்தால் சொல்ல வேண்டும் அடப் பாவிகளே!
ஏமாந்து உழைப்போரைப் பார்த்தால் சொல்ல வேண்டும் அப்பாவிகளே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment