Sunday, 29 June 2025

பத்து நாட்டில் வீடு

தமிழ்மண்ணில் முருகனுக்கு அறுபடை வீடு அகிலத்தில் முருகனுக்குப் பெரும்படை வீடு தமிழில் நாளெல்லாம் முருகனைப் பாடு பாடிடும் நாட்டிலெல்லாம் முருகனுக்கு வீடு

தைப்பூசமெனில் தமிழரால் முருகனுக்குத் தூக்குவதுக் காவடி                                      கருத்துப் பூசலெனில் அரசியலால் முருகனைத் தூக்குவது commedy

 மன பக்தியோடு முருகனைப்பாடிச் சிரிப்போருக்கு முருகனே துணை                பண சக்தியோடு முருகனைப்பாடிச் சிக்குவோருக்கு முருகனே வினை!

-தஞ்சை த.இராமநாதன்

Friday, 27 June 2025

உயரத்தில் வேலை செய்தல்

 

உயரத்திலிருந்து விழுந்து அடிபட்டும்    இறந்து விடுகிறார்கள்                                உயரத்திலிருந்து விழும் பொருளால் அடிபட்டும் இறந்து விடுகிறார்கள்

ஏணியில் ஏறும்போது மூன்று பிடிமானம் இருந்தால் விழுவதைத் தடுக்கலாம்          தவறி விழுந்தாலும் உடல் வார்ப்பட்டைப் பிடியோடு இருந்தால் விழுந்தபின்னும் தப்பிக்கலாம்

பயிற்சிக் கொடுப்பவருக்கும் பயிற்சி தேவைப்படுகின்றது இப்போதும்            பயிற்சி பெறுபவருக்கோ அடிக்கடி பயிற்சித் தேவைப்படுகின்றது எப்போதும்!

 - தஞ்சை த.இராமநாதன்


Wednesday, 18 June 2025

அப்பாவை இழந்து ஏழு வருடங்கள்

 

இந்த தினம் என் தந்தை இறந்த தினம்
எந்தன் மனதில் ஆறாத வடுக்களின் ஏழாவது வருட தினம்

அய்யாவென என்னை அழைத்துச் சிரித்துக் கொண்டாடிக் கொண்டாட வைத்த அப்பா
அய்யோவென நான் கதறி அழுது தொழுது பார்த்தாலும் உங்களைக் கண்களால் காண முடியவில்லையே அப்பா!

பயமற்ற பண்பட்ட பண்பாட்டுடன் வீரத்தைக் கொடுத்ததற்கு நன்றி அப்பா
பணத்திற்காக மனதை மாற்றாத மாசற்ற குணத்தைக் கொடுத்ததற்கும் நன்றி அப்பா!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 15 June 2025

தந்தையாருக்குத் தந்தையர் தினம்

 

சொந்த பந்த சுமையைத் தூக்கித் தூக்கித் தூக்கமிழந்தவர் தந்தையார் 
சுமந்த சுமை பிள்ளையைத் தாக்காமல் பார்த்துக் காத்தவர் தந்தையார்

தன் பிள்ளைத் தன்னைவிட மேலே உயரத் தூணாகத் தாங்கிப் பிடித்தவர் தந்தையார்
தனக்கு வேண்டியதைத் தேடாது தன் பிள்ளைக்காகத் தேடி ஓடியவர் தந்தையார்

தாங்க முடியாத தாக்கம் தாக்கினால்
அப்பா என அலறுவர் தந்தையற்றோர்
தாங்கவே முடியாத தாக்கம் தாக்கினால்
எப்பா எனக் கதறுவர் தந்தையற்றோர்

எத்தனை உறவை இழந்தாலும் உறவே உறவின் உணர்வை மறந்தாலும் 
அப்பனின் உறவை இழந்து உயிரின் உணர்வை மறந்தால் இழிவே!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 13 June 2025

எது நிலையானது?

 

பிறக்கும்போதே இறக்கப்போவதை உறுதியாக அறியாதோரும் இல்லை
பறக்கும்போதே இறக்கப்போவதை இறுதியாக அறிந்தோரும் இல்லை

இருக்கையில் இருந்தபடி இறப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் சோகம்
இருக்கையில் எழுந்தபடி இருப்பது ஒரேயொருவர் வாழ்வில் யோகம்

பறக்க ஆரம்பித்ததும் இறங்கப் போவதை எண்ணியோரும் உயிரோடு இல்லை
பறக்க ஆரம்பித்ததும் இறக்கப் போவதை எண்ணாதோரும் உயிரோடு இல்லை

நிலையற்றதை நிலையானதாக நினைப்பதை நிறுத்துவோமா?

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 1 June 2025

எந்த சொத்தும் எந்தன் ஈசன் தந்த சொத்தே


எல்லாமே எந்தன் ஈசன் தந்த சொத்து
ஈசனே எம் சொத்தாகி வந்தது கெத்து
ஆதிசிவனான ஈசனால் எமக்கு வந்தது தரம்
சிவநேசனான எமக்கு ஈசன் தந்தது வரம்

உள்ளத்தின் ஒலியாக வந்தது எந்தன் ஆதிசிவன்
இல்லத்தில் ஒளியாக வருவதும் எந்தன் அதேசிவன்
விழுந்தால் எழ வைத்தது எந்தன் ஆதிசிவன்
எழுந்ததும் வாழ வைப்பதும் எந்தன் அதேசிவன்

மனதைப் புரிய வைத்ததும் எமது ஈசனே
மனிதரை அறிய வைப்பதும் எமது ஈசனே
தியாகம் செய்ய வைத்ததும் எமது ஈசனே
தியானம் செய்ய வைப்பதும் எமது ஈசனே!

- தஞ்சை த.இராமநாதன்