Monday, 29 November 2021

கையில் அடங்கியது உலகம்

 

கையில் அடங்கியது உலகம் 

உள்ளங்கை நெல்லிக்கனி அது வேறு 

உள்ளத்தின் கைப்பணி இது வேறு 

வெறுங் கையில் முழம் அது வேறு 

நவீன நாகரிகத்தின் பலம் இது வேறு 

கண்ணால் காண காட்சி வேண்டும் 

விரல்தான் அதற்கு உதவிட வேண்டும் 

நாடு விட்டு நாடு நொடியில் போகலாம்

ஒமிக்ரான் பரவலை உடனே அறியலாம் 

சென்னை வெள்ளத்தை சொன்னால் எளிதில் புரியுமா?      

கண் முன் காட்சியாகக் காட்டினால் எளிதில் புரியுமா?

கைப்பேசியை வைத்தே கைப்பேசியை தூற்றுவது சரியா? 

அளவோடு கையாண்டு கைப்பேசியை போற்றாததும் சரியா?

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 28 November 2021

குதிரைகளும் பலவிதம்

 

குதிரைகளும் பலவிதம் 

ஓடும் குதிரையைக் கண்டதுண்டு

ஓடாக் குதிரையையும் கண்டதுண்டு

ஆடும் குதிரையைக் கண்டதுண்டு 

ஆடாக் குதிரையையும் கண்டதுண்டு  

சண்டிக் குதிரையைக் கண்டதுண்டு

வண்டிக் குதிரையையும் கண்டதுண்டு

கருப்புக் குதிரையைக் கண்டதுண்டு 

சிவப்புக் குதிரையையும் கண்டதுண்டு 

கனைத்தக் குதிரையைக் கண்டதுண்டு 

கனைக்காக் குதிரையையும் கண்டதுண்டு

உதைத்தக் குதிரையைக் கண்டதுண்டு 

உதையாக் குதிரையையும் கண்டதுண்டு

யோசித்தேன் கல் குதிரையைக் கண்டு 

எழுதி விட்டேன் இக்கவிதையை நன்று!

- தஞ்சை த இராமநாதன் 

Saturday, 27 November 2021

எங்கெங்கும் வேண்டும் கோவில்

 

எங்கெங்கும் வேண்டும் கோவில் 

எல்லாக் குடிகளுக்கும் முன் தோன்றிய              மூத்தக் குடி கட்டியக் கோவில்கள் பல                இக்கோவில்களைக் கண்டே மற்றைய              சமூகங்கள் கண்டன வழிகள் பல 

தான் சிறு குடிசையில் வாழ்ந்தாலும்                    கடவுளை கோபுரத்தில் வைத்தது என் வம்சம்  என் வம்சத்திடம் எவர் வாலை ஆட்டினாலும்    என் கடவுள் செய்திடுவார் எவரையும் தும்சம் 

மேள சத்தம் கேட்கட்டும் கோவிலெங்கும்        தேவையற்ற ஓசை ஓயட்டும் ஊரெங்கும்          நாட்டு அழுக்கை அகற்றட்டும் வெள்ளம்        இறைவன் அருளைப் பெறட்டும் உள்ளம்

கோயில் இல்லாத ஊரில் வாழ்ந்தால் தமிழ்ப்  பரம்பரைக்கு ஏற்படும் பெரும் இழுக்கு              கோயிலைக் குறை கூறி சுற்றித் திரிந்தால் தமிழர்ப் பண்பாடாட்டிற்கும் ஏற்படும் இழுக்கு!

- தஞ்சை த இராமநாதன் 

Friday, 26 November 2021

தள்ளாடுது தாலாட்டிய உள்ளம்

 

 தள்ளாடுது தாலாட்டிய உள்ளம் 

காய்ந்துப் போய் சுடும் ஆறாக இருந்தது                                                                                          கரைப் புரண்டோடும் வெள்ளக் காடானது

ஓய்ந்துப் போய் உறங்கிய ஊரெல்லாம்                                                                                      பயந்துப் போய் கலங்கிப் பீதியானது

இருந்த இடமும் நிலையாக இல்லை                                                                                               போகும் இடமும் நிலையாக இல்லை 

தூக்க முடியாமல் தூக்கிப் போகின்றேன்                                                                                      மேலும் தாக்கினால் சாய்ந்துப் போவேன் 

இருந்ததையும் இழந்ததால் அழுவதா?                                                                                   பிழைத்ததே போதுமென அழுவதா? 

வாழ்ந்ததுப் போதுமென அழுவதா?                                                                                                     இனி எப்படி வாழ்வதென அழுவதா?

பிள்ளைகள் எனக்குப் பிறந்தது பாவமா?                                                                                             என் மேல் இயற்கைக்குக் கோபமா?

என்னை எடுத்துக் கொள் என் இறைவா                                                                                பிள்ளைகள் வாழ வழி கொடு இறைவா! 

- தஞ்சை த இராமநாதன் 

Thursday, 25 November 2021

சிரிப்பே மழலையின் மொழி

 

சிரிப்பே மழலையின் மொழி

பாயில் அமர்ந்தத் தாயும் தன் தாயின் மடியில் அமர்ந்தச் சேயும் சிரிக்கும் சிரிப்பு
காரணமே இல்லாது கண்டதும் சிரிக்கும் சேயின் சிரிப்பால் சிறக்கும் சிரிப்பு

கிச்சு கிச்சு மூட்டினாலும் சிரிப்பு
கைக் காட்டினாலும் அதே சிரிப்பு
கிலுகிலுப்பை ஆட்டினாலும் சிரிப்பு
சைகைக் காட்டினாலும் அதே சிரிப்பு

தொட்டிலில் போட்டு ஆட்டினாலும் சிரிப்பு
மெட்டுப் போட்டு பாடினாலும் அதே சிரிப்பு
கையை அசைத்துக் குதித்துச் சிரிப்பு
கண்ணாடியில் பார்த்து ரசித்தும் சிரிப்பு

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 24 November 2021

இளைய வள்ளுவர் வருந்துகிறார்

 

இளைய வள்ளுவர் வருந்துகிறார்

வாய்மையே வெல்லும் என சொன்னது
பொய்மையே வெல்லும் என்றானதேன்?
அகத்தின் தூய்மை அறவே மறக்கப்பட்டு
புறத்தின் மாயை மேலென ஆனதேன்?

கற்ற நெறியைப் பின்பற்ற மறுத்து                                                                                  பிழைத் தொற்றி முற்றியதேன்?
கற்றவர் கண்ணே கண் என்பது போய்                                                                      கல்லாதவர் புண்ணே கண்ணானதேன்?

ஆசிரியரிடம் பணிந்துப் படித்தது மாறி                                                        ஆசிரியர்களே சிலர் பாவிகளாகிப் போனதேன்?
கற்ற நல்லவர்களின் வல்லமை மாறி
கல்லாக் கயவர்களின் பொல்லாமை வந்ததேன்?

கற்றார்க்கு எல்லாமே தன் ஊரென்பது மாறி
காசு பெற்றார்க்கே அது என்றானதேன்?
புண்தான் இறைச்சி எனக் கூறியும்
புண்ணை ரசித்து ருசித்துப் புசிப்பதேன்?

உயிரினும் மேலானது ஒழுக்கம் ஆனால்
மானம் போகும் அளவிற்கு ஒழுக்கம் கெட்டதேன்?
குணம் சிறந்து மனம் மாறச் சொன்னால்
மனம் நாறி என்னையும் மதம் மாற்றிப் பேசுவதேன்?

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 23 November 2021

முடிவில் ஆரம்பம் நோக்கி

 

முடிவில் ஆரம்பம் நோக்கி

பெண்ணை பேனா பிடிக்க வைத்து                    பெண்ணை தானா படிக்க வைத்து
பெண்ணை மதுவைக் குடிக்க வைத்து
பெண்ணை புகையைப் பிடிக்க வைத்து
பெண்ணை அவலமாய் உடுக்க வைத்து
பெண்ணை கேவலமாய் நடிக்க வைத்து
பெண்ணை சாயம் அடிக்க வைத்து
பெண்ணை முடியை வெட்ட வைத்து
பெண்ணை கொடியைப் பிடிக்க வைத்து
பெண்ணை போட்டிப் போட வைத்து
பெண்ணை பாட்டுப் பாட வைத்து
பெண்ணை போட்டியில் ஓட வைத்து
பெண்ணை மண்ணை மறக்க வைத்து
பெண்ணை வாழ்வைத் துறக்க வைத்து இறுதியில்,                                                                    பெண் வாளைத் தூக்கியக் கதைக்கு வந்தோம்!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 22 November 2021

கடலைக் கொல்லையின் காட்சி

 

கடலைக் கொல்லையின் காட்சி

மார்கழியில் விதைக் கடலையைத் தேடி
விதைத்தால் சித்திரையில் மகசூல்
சித்திரையில் காய்ந்தக் கடலையைத் தேக்கி ஆடியில் விற்றால் அதிக வசூல்

காய்ந்தக் கடலைச் செடி வைக்கோல் போர் போல் குவித்து வைக்கப்படும்
மழைக் காலத்தில் காய்ந்தக் கடலைச் செடி மாட்டுக்குத் தீவனமாக்கப்படும்

உடைத்தக் கடலைத் தோல் விளைந்த நிலத்திற்கே நன்றியோடு நல் உரமாகும்
சுருங்கியக் கடலைப் பருப்பு அம்மியில் அரைப்படடு கஞ்சிக்கு துவையலாகும்

நிலத்தில் யாவும் விளைந்தாலும் இந்தக் கடலைதான் என்றென்றும் நிலக் கடலை
கிழங்குபோல் ஒளிந்து வேரோடு வேராக விளையும் தமிழ்நாட்டு நிலக் கடலை!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 21 November 2021

ஊழ் (அதிகாரம் 38)

 

ஊழ் (அதிகாரம் 38)

சோம்பல் சுறுசுறுப்பு விதியின் செயலே
பொருள் இழப்பும் விதியின் செயலே

இருக்கும் பொருளைப் பறிப்பதும் விதி
அள்ளிக் கொடுப்பதும் விதி

படித்த படிப்பு அறிவை மேம்படுத்தாது
விதித்தால் மட்டுமே மேம்படுத்தும்

பொருளைக் கொடுக்கும் விதி வேறு
அறிவைப் பெருக்கும் விதி வேறு

முயன்றும் தோல்வி அடைவது விதியால்
முயலாது வெற்றி அடைவதும் விதியால்

தடுத்தும் செல்வம் தங்காதது விதியால்
தானாகத் தங்கி இருப்பதும் விதியால்

கோடி இருந்தும் அனுபவிக்க முடியாது
விதி அனுமதிக்காத போது

வெள்ளத்தால் தரணி மிதக்கிறது பாரீர்
இருந்தும் விதிதான் காக்கிறது பாரீர்

நல்லது நடந்தால் போற்றாதது ஏன்?
தீயது நடந்தால் தூற்றுவது ஏன்?

உப்பு விற்றால் மழையாக வருவது விதி
பஞ்சென்றால் காற்றாக வருவதும் விதி!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 20 November 2021

அவையஞ்சாமை (அதிகாரம் 73)

 

அவையஞ்சாமை (அதிகாரம் 73)

எங்கு எதை எப்போது எப்படியென நன்கு அறிந்து துணிந்துப் பேசுக

சொல்லும் பொருளும் பிறழாது மற்றவர் விரும்பும் வகையில் பேசுக

சம்பந்தம் உள்ளப் பேச்சை சம்பந்தம் உள்ள இடத்தில் பேசுக

மரியாதை கொடுக்க வேண்டிய அளவில் கொடுத்து தரத்தோடுப் பேசுக

தேவையற்றப் பேச்சைத் தவிர்த்து உள் அமைதியுடன் இருக்கப் பழகுக

அறிவானவரின் தரத்தை அறிந்த பின் அவரிடம் பேசுவதற்குச் செல்க

பிழையற்றுப் பேசுவோர் புத்திக் கூர்மை உடையோர் என்பதை உணர்க

வீணான சவடால் பேச்சு வல்லவரிடத்தில் எடுபடாது என்பதை அறிக

நல்லறிஞர் அறிவு அற்ற மூடரிடம் எப்போதும் சேராரென்பதைப் புரிக

முட்டாளிடம் அறிவாளியின் பேச்சு அந்த சாக்கடையோடு நன்னீரெனத் தெளிக!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 19 November 2021

உறுப்பு நலன் அழிதல் (அதிகாரம் 124)

 

உறுப்பு நலன் அழிதல் (அதிகாரம் 124)

கண்ணின் சோகம் மலருக்குத் தெரியும் பிரிவின் துயரம் பூவுக்குப் புரியும்

கொட்டும் என் கண்ணீரே என் கணவன் பிரிவை உலகிற்குச் சொன்னீரே

மணமாகி மகிழ்ந்துப் பெருத்த உடல் மணந்தவரைப் பிரிந்து சிறுத்த உடல்

கணவன் இருந்தால் இறுகும் வளையல்
கணவன் பிரிந்தால் கழடும் வளையல்

கணவனைப் பிரிந்தது கொடுமை நிலை
தோள்களுக்கோ வலிமை இழந்த நிலை

தோள் சுருங்கி வளையல்கள் வீழ்ந்தது
காதலனின் நற்பெயரும் தாழ்ந்தது

மெலிந்தத் தோளால் உடலுக்குத் தீது உள்ளத்திற்கு உள்ளம் விடும் தூது

கையைப் பிடித்து நெட்டி முறித்தால் கணவனைப் பற்றி ரசித்துச் சிரிப்பாள்

கணவன் குங்குமம் வைக்கும் போது  காற்றடித்தால் காதலிக்கு நிம்மதி ஏது?

கணவனிடையே மென் காற்று வந்திடும் மணவாளி மனம் துவண்டு நொந்திடும்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 18 November 2021

தனியான அனுபவம்

 


தனியான அனுபவம்

வளமான மலைமேலே இதமான குளிராலே பாடி மகிழ்ந்தனக் குயில்கள்              தெளிவான வான்மேலே மிதமானக் காற்றாலே தேடி அலைந்தன முகில்கள்

பொழியப் போகும் சற்று முன்னே புதுப்
பொலிவைப் பெற்றன மேகக் குவியல்கள்
பொழிவில் நனையப் போகும் முன்னே
தோகையை விரித்து ஆடின மயில்கள்

கொடிய மிருகங்கள் அவ்விடம் இல்லே கடுந்தவம் செய்தேன் குடிலின் உள்ளே
வயிற்றுப் பசி அவ்விடம் அறவே இல்லே
ஆனந்தம் அடைந்தேன் என் உள்ளே!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 17 November 2021

உலகப் பொருளாதார மாயமாக்கல்

 

உலகப் பொருளாதார மாயமாக்கல் 

கஞ்சியைப் பானையில் சமைத்து உப்பிட்டு ருசித்து சுவைத்துச் சாப்பிட்டது ஏழைப் பொருளாதாரம் 

கஞ்சியைக் குழைத்து கட்டியாக்கி கரண்டி வைத்து கொஞ்சிச் சாப்பிடுவது கோழைப் பொருளாதாரம் 

பாரம்பரியத்தோடு உழைத்துக் கிடைத்ததை சாப்பிட்டு வயிறு நிறைய மகிழ்வுடன் வாழ்ந்தது நியாயமானப் பொருளாதாரம் 

கண்டதைத் தின்றுக் குடித்து வயிறைப் பெருக்க வைத்து நலத்தைக் கெடுத்து வாழ்வது அநியாயமானப் பொருளாதாரம் 

இருக்கும் காசை வைத்து சிக்கனமான வாழ்வைக் கொடுத்தது பெருமிதமான  உண்மைப் பொருளாதாரம் 

இல்லாதக் காசை இருப்பதாக நினைக்க வைத்து சிக்கலான வாழ்வைக் கொடுப்பது பொய்யானப் பொருளாதாரம்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 16 November 2021

காலத்தின் கணக்கு

 

காலத்தின் கணக்கு

கடந்தகால கணக்கைப் பார்த்தால் மனம் நொந்து விடும்
நடந்தகால கணக்கைப் பார்த்தால் மனம் சோர்ந்து விடும் 
நடக்காமல் போனக் கணக்கைப் பார்த்தால் மனம் ஒடிந்து விடும் 
நடக்கப் போகும் கணக்கைப் பார்த்தால் மனம் மகிழ்ந்து விடும்!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 15 November 2021

இந்தியாவில் குழந்தைகள் தினம்

 

இந்தியாவில் குழந்தைகள் தினம்

ஜவஹர்லாலை மறந்தாலும் நேரு மாமாவை மறக்காத குழந்தைகளின் தினம்
மோகன்தாசை மறந்தாலும் காந்தி தாத்தாவை மறக்காத குழந்தைகளின் தினம்

வேலை இல்லாது கவலை இல்லாது சிரித்து வாழ வேண்டிய குழந்தைகளின் தினம்
வெள்ளம் நில்லாது நிம்மதி இல்லாது இருக்கும் சூழலில் வந்தக் குழந்தைகள் தினம்

வயதிற்கேற்ற குழந்தைத் தனம் மாறாமல் இருந்தால் அது உண்மையான குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகள் பத்திரமாக தினமும் வீடு திரும்பினால் அது வெற்றிகரமான குழந்தைகள் தினம்!

தஞ்சை த இராமநாதன்


Sunday, 14 November 2021

நீரால் சூழ்ந்த தமிழகம்

 

நீரால் சூழ்ந்த தமிழகம்

சூழ்ந்த வெள்ளம் மழை முடிந்தாலும் இன்னமும் வடிந்த பாடில்லை
வாழ்ந்த இல்லம் இடிந்தாலும் தொல்லை இன்னமும் முடிந்த பாடில்லை

அன்றுப் பார்த்தால் ஆங்காங்கே இருந்தது பலமான ஆற்றுப் பாலம்
இன்றுப் பார்த்தால் ஆங்காங்கே இருப்பது பள்ளமான சேற்றுப் பாலம்

அப்போது வயலெல்லாம் பச்சையாக இருக்கும் நடவு நட்ட பயிரால்
இப்போது வயலெல்லாம் பழுப்பாக இருக்கிறது நட்டுக் கெட்ட பயிரால்

சென்னை முதல் குமரி வரை தொடர்கிறது மண்ணின் எல்லை
சென்னை முதல் குமரி வரை தொடர்கிறது வானின் தொல்லை!

தஞ்சை த இராமநாதன்

Saturday, 13 November 2021

முதலில் உதவியும் முதல் உதவியும்

 

முதலில் உதவியும் முதல் உதவியும் 

முடியாதவருக்கு முதலில் உதவுவதோடு முதல் உதவியாகவும் இருத்தல் சிறப்பு 
முடிந்தவர் முடிந்தவரை முடியாதவருக்கு 
முடிந்ததை முடித்துக் கொடுத்தல் சிறப்பு 

எதிரியும் எதிர்பாரா உதவியை எதிரியிடம் எதிர்பாராமல் உதவுதல் அதிச் சிறப்பு
எதையும் செய்யும்போது இதயத்தோடு எதார்த்தமாகச் செய்தல் தனிச் சிறப்பு 

எல்லா உயிரையும் சொந்த உயிராக
எல்லா நிலையிலும் பாவித்தல் சிறப்பு 
எந்த ஊரையும் தன் சொந்த ஊராக 
எல்லா ஊரிலும் நினைத்தல் சிறப்பு 

வேலைக்காக வேலை செய்யாமல் நல் 
சேவைக்காக வேலை செய்தல் சிறப்பு
வேலையில் வேறு வேலை செய்யாமல்
சேவையைச் செய்தது சிறப்போ சிறப்பு!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 12 November 2021

முக்கோண வடிவில் தமிழர் முறம்

 

முக்கோண வடிவில் தமிழர் முறம் 

உலைக்குப் போகுமுன் முறம் கொண்டு புடைத்தால் உமியும் தூசியும் பறக்கும்
புடைத்த அரிசியைக் கொழித்தால் அது குருணையைப் பக்குவமாய்ப் பிரிக்கும் 

அக் குருணை கஞ்சியுமாகி மிஞ்சினால் கோழி குஞ்சுகளுக்கு நற் தீனியாகும் 
புடைப்பட்ட அரிசியில் கலந்தக் கல்லைப் பிரித்தால் நெல் அரிசி நல் அரிசியாகும் 

முறம் கொண்டு புடைத்துக் கொழித்து மும்முரமாய் இருப்பார் தமிழ்ப் பாட்டி  
கற்களைப் பார்த்துப் பிரித்து எடுத்து பம்பரமாய் இருப்பார் தமிழ்த் தாத்தா 

பக்கத்தில் நிற்கும் சேவலுக்கு இரண்டு அரிசியைப் போடச் சொல்வார் பாட்டி 
பக்கத்தில் நின்றாலும் அது பக்கத்து வீட்டு சேவல் என்பதை அறிவார் தாத்தா!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 11 November 2021

செவிலியர்கள் வாழ்க

 

செவிலியர்கள் வாழ்க

இருக்கப் போகிறவர்களுக்கு  அன்பான சேவை
இறக்கப் போகிறவர்களுக்கும் பரிவான சேவை

ஏழை எளியோர்க்கு கருணையான சேவை
பணம் படைத்தோர்க்கும் இரக்கமான சேவை

தொற்றும் என தெரிந்தும் தொய்வு இல்லாத சேவை
தொற்றை அகற்ற தைரியத்துடன் தொடரும் சேவை

தன்னலம் பாராது பொதுநலம் காக்கும் சேவை
உலக மனிதர்களின் உயிரைக் காக்கும் சேவை!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 10 November 2021

உண்மையை உணரும் உணர்வு



 

உண்மையை உணரும் உணர்வு

ஒரு புறம் உண்ண உணவில்லாது 
பசியோடு வாழ்ந்து தவிக்கின்றார்
மறு புறம் தூங்கக் கூட இடமில்லாது
தண்ணீரால் சூழ்ந்து தவிக்கின்றார்

தண்ணி அடிக்க ஆணும் பெண்ணும் பேய் போல் மதுக்கடைக்கு செல்கின்றார்
தண்ணியே அடிக்க ஆரம்பித்தால் நிலை
தடுமாறி குழம்பிப் போய் நிற்கின்றார்

அர்த்தமற்ற ஆன்மிகம் பேசியோர்
அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றார்
அநாகரிக நாத்திகம் பேசியோர்
பயந்து பதுங்கிக் கிடக்கின்றார்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 9 November 2021

உயிரோடு கலந்த அம்மா


 உயிரோடு கலந்த அம்மா

ஆபத்தில் அலறும் போதும் அம்மா!
அவசரத்தில் இடறும் போதும் அம்மா!
துன்பத்தில் அழும் போதும் அம்மா!
இன்பத்தில் சிரிக்கும் போதும் அம்மா!
பிறந்த நாள் முதல் அரவணைக்கும் அம்மா!
கடைசி நாள் வரை துணை நிற்கும் அம்மா!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 8 November 2021

கடவுளால்தான் காப்பாற்ற முடியும்

 



கடவுளால்தான் காப்பாற்ற முடியும்

கொள்ளும் அளவிற்கு மும்மாரி மழைப்
பொழிந்த காலம் மறைந்ததும் சோகம்
கொல்லும் அளவிற்கு இம்மாதிரி மழைப்
பொழியும் காலம் வந்ததும் சோகம்

கொல்லையில் பெய்த மழை பள்ளமான வயல் நோக்கிப் புகுந்து வெள்ளமாகும்
வயலே இல்லமானால் பள்ளம் நோக்கிய நீர் குடிப் புகாமல் எங்கேப் போகும்?

பகுத்தறியத் தெரியாதப் பதர்கள் தம்மை பகுத்தறிவாதிகள் என்பதும் கேவலம்
வெள்ளம் வந்ததும் செய்வதறியாது  முடங்கிக் கிடப்பதோ படு கேவலம்

நல்லார் ஒருவரால் பொல்லார்க்கும்
சேர்த்து அளவோடு பொழிந்ததும் மழை
பொல்லார் பலரால் நல்லோரையும் மறந்து அளவற்றுப் பொழிவதும் மழை!

எங்கும் கடவுள் எதிலும் கடவுள் அதை நினை!
அப்படி நினைத்தால் கடவுள் நமக்குத் துணை!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 7 November 2021

இயற்கை நினைத்தால்...


 இயற்கை நினைத்தால்...

நாள்தோறும் கொட்டும் அருவியால்  நிலையாய் ஓடுது வெள்ளம்
ஒரு நாள் கொட்டிய மழையால்
கலகலத்து ஆடுது உள்ளம்

செம்பரம்பாக்கம் குறைந்தால் பஞ்சம்
நிறைந்து திறந்தால் வீட்டிற்குள் தஞ்சம்
சாலையெல்லாம் ஆறாக மாற்றம் வீடெல்லாம் குளமாக நாற்றம்

இயற்கை நீர் வீழ்ச்சியால் எப்போதும் இருந்ததில்லை நமக்குத் தொல்லை
செயற்கை சூழ்ச்சியால் எப்போதும்
இல்லாமலில்லை நமக்குத் தொல்லை

மானைக் கொன்று தின்னும் உலகம்
மயிலைக் கொன்று தின்னும் உலகம்
அநியாயம் அதிகரிக்கும் அவல நிலை
இயற்கையை சீண்டினால் அழிவு நிலை

ஆண்டுக்கு ஆண்டு வெள்ளமும் வரும் ஆய்வு செய்ய தவறாமல் கூட்டமும் வரும் 

ஆன்மிகம் லௌகீகம் சமநிலைப் பெறுக
இறைவா மற்றொரு வாய்ப்பைத் தருக!

- தஞ்சை த இராமநாதன்

வேர் வேறு விரல் வேறு

 

வேர் வேறு விரல் வேறு

வேரோடு வேராக விரலை வைக்க மனிதனுக்கு ஆசை

வேரோடு விரலாக வேரை மறைக்க வேருக்கு ஆசை

வேரோடு வேராக விரலை வைத்தாலும் வேறாகத் தெரியுது விரல்

விரைவாக வேரை மண் வைத்து மூட வேண்டுது வேரின் குரல்!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 6 November 2021

குடில்களின் அழகுத் தோற்றம்

 

குடில்களின் அழகுத் தோற்றம்

குடியிருக்கும் மக்கள் குடில்களின் தோற்றம்
குடிகள் வாழும் மாடி வீடுகளின் தோற்றம்
முன் வீடு பின் வீடு என அன்றைய வாழ்க்கை
மேல் வீடு கீழ் வீடு என இன்றைய வாழ்க்கை

வாசல் கதவை திறந்து வைத்தே வாழ்ந்த நிலை அன்று
வாசல் கதவை பூட்டியே வைத்து வாழும் நிலை இன்று
குளிர் வர ஜன்னலைத் திறந்தே வைத்த நிலை அன்று
ஜன்னலைப் பூட்டினால்தான் குளிரும் நிலை இன்று

குடியிருந்த இடம் புனிதமாக இருந்து சிறந்தது அப்போது
மத வழிபாட்டுத் தலங்களில் முறைகேடு நடப்பது இப்போது
கூரை வீடானாலும் கோடி புண்ணியம் பெற்றது அப்போது
கோடியின் வீடானாலும் சிறு புண்ணியம் பெறுவது எப்போது?

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 3 November 2021

காயும் கனியும் ஒன்றே

 

காயும் கனியும் ஒன்றே 

காயாக இருந்தால் கனியாவது இயல்பு கனிந்தக் கனியை பழமென்பதும்  இயல்பு

தேங்காய் தெங்கம் பழமாகவும் உள்ளது ஆப்பிளோ மாறாமல் அப்படியே உள்ளது

கடித்தால் காயாகத்தான் இருக்கின்றது சுவைத்தால் கனிபோல் இனிக்கின்றது

அமுக்கினாலும் அமுங்குவது இல்லை நுகர்ந்தாலும் மணப்பது இல்லை

பச்சிளம் பல்லால் கடித்ததால் குழந்தைக்கு சிரிப்பு ஆப்பிள் கடிப்பட்டதால் முகத்தில் பூரிப்பு

ஆப்பிளைக் கடிக்க ஆசையாய் இருக்கும் கடிக்கும் ஓசையும் மென்மையாய்  இருக்கும்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 2 November 2021

புரட்சி வெடியை வெடி

 

புரட்சி வெடியை வெடி

வெடித்தால் காசு கரியாகுமென்றால் குடித்தால் காசு கரியாகாதா?

வெடித்தால் மாசென்றால் புத்தாண்டு வெடியால் மாசு உண்டாகாதா?

கடலெண்ணெய்யை கெட்டதாக்கி கலப்பட எண்ணெய் வந்தது எப்டி?

செக்கு எண்ணெய் தீதென்றால் இப்போது சீக்கு அதிகரிப்பது எப்படி?

அயல் நாட்டுப் பணத்தை வைத்து ஏழையை மதம் மாற்றுவது நியாயமா?

அயலார் மதத்தைப் போற்றி சொந்த மதத்தை தூற்றுவது நியாயமா?

எந்த மதத்தின் பண்டிகையையாவது விமர்சித்து  விமர்சனம் வருகிறதா?

ஒரே ஒரு மதத்தின் பண்டிகைக்கு மட்டும் ஏன் அதிக விமர்சனம் வருகிறது?

காரியவாதக் கயவர்கள் முகத்திரையை கிழிக்க வெடிக்க வேண்டும் வெடி

வேடதாரிகளின் வேடத்தைக் கலைக்க அளவோடு வெடிக்க வேண்டும் வெடி!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 1 November 2021

பிரித்தாளும் சூழ்ச்சியால் வீழ்ச்சியே

 

பிரித்தாளும் சூழ்ச்சியால் வீழ்ச்சியே

ஐந்தில் அருமையான சகோதர உறவு                பத்தில் பகைமையான பங்காளி உறவு

ஐந்தில் அன்புடன் உறுதியான உறவு                  இருபதில் வம்புடன் எதிரியான உறவு

நியாயம் இல்லாதது பாகப் பிரிவினை              பகையை வளர்ப்பது பாகப் பிரிவினை

வஞ்சகம் செய்வது பாகப் பிரிவினை                  அன்பை முறிப்பது பாகப் பிரிவினை

வீட்டில் ஆரம்பமாகும் பிரச்சினை இது                வீதியில் தொடரும் பிரச்சினை இது

சாதியில் கலக்கும் பிரச்சினை இது                    சமாதியில் நிலைக்கும் பிரச்சினை இது

பிரிந்த நாளை நினைத்து சிரிப்பதா?                  இருந்த நாளை நினைத்து அழுவதா?

கடந்ததைப் பெருமையாக நினைப்பதா?            நடந்ததைக் கொடுமையாக நினைப்பதா?

இருக்கும் மதத்தைப் பிரிப்பது யார்?                    புதிதாகப் பெயரை சூட்டுவது யார்?

பிரித்தே பிணைப்பைப் பேசுவது யார்?              பிரிந்தே இணைப்பைப் பேசுவது யார்?

பிரிக்கத் தெரிந்த மனமே உனக்கு                        இணைக்கத் தெரியாதா?                                        

பிரியத் தெரிந்த மனமே உனக்கு                          இணையத் தெரியாதா?

- தஞ்சை த இராமநாதன்