ஊழ் (அதிகாரம் 38)
சோம்பல் சுறுசுறுப்பு விதியின் செயலே
பொருள் இழப்பும் விதியின் செயலே
இருக்கும் பொருளைப் பறிப்பதும் விதி
அள்ளிக் கொடுப்பதும் விதி
படித்த படிப்பு அறிவை மேம்படுத்தாது
விதித்தால் மட்டுமே மேம்படுத்தும்
பொருளைக் கொடுக்கும் விதி வேறு
அறிவைப் பெருக்கும் விதி வேறு
முயன்றும் தோல்வி அடைவது விதியால்
முயலாது வெற்றி அடைவதும் விதியால்
தடுத்தும் செல்வம் தங்காதது விதியால்
தானாகத் தங்கி இருப்பதும் விதியால்
கோடி இருந்தும் அனுபவிக்க முடியாது
விதி அனுமதிக்காத போது
வெள்ளத்தால் தரணி மிதக்கிறது பாரீர்
இருந்தும் விதிதான் காக்கிறது பாரீர்
நல்லது நடந்தால் போற்றாதது ஏன்?
தீயது நடந்தால் தூற்றுவது ஏன்?
உப்பு விற்றால் மழையாக வருவது விதி
பஞ்சென்றால் காற்றாக வருவதும் விதி!
- தஞ்சை த இராமநாதன்
அருமை
ReplyDelete🙏🙏
Delete