ஆடாத நிலம் ஆடினால்
ஆடாத மனமும் ஆடுதே கல்லான கட்டிடம் சிதறினால் கல்லான மனமும் சிதறுதே
உயர்வான இருப்பிடம் உடைந்தால்
உயிரின் இருப்பிடமும் உடையுதே நிலையான நிலம் நடுங்கினால் நிலையற்ற நிலையும் ஒடுங்குதே சுமைத் தாங்கும் பூமியே சாய்ந்தால் சுகமான வாழ்வும் சரிந்து சாயுதே
அங்கும் இங்கும் எங்கும் என்றும்
ஆடாத நிலமும் அதிர்ந்து ஆடலாம்
ஆணவ ஆட்டமும் அடியோடு முடியலாம்
முடியுமுன் முடிந்ததைச் செய்யலாமே!
- தஞ்சை த.இராமநாதன்




