பொய்யாகப் பேசி மெய்யைப் பேசாமல் வீணான வாழ்வை வாழ்தலும் கேடே
மெய்யாக நடித்துப் பொய்யைப் பேசும் ஈனப் பிறவியின் வாழ்வாலும் கேடே
நேரில் மதித்து மறைவில் மிதித்துப் பேசும் பேச்சைப் பேசுவதிலும் கேடே
மறைவில் ஒளிந்து நேரில் வழிந்து
கூழைக் கும்பிடு போடுவதிலும் கேடே
அகத்தில் நினைத்து அதை முகத்திலும்
உதிக்க வைக்க முடிந்தாலும் வரமே
அகத்திலும் நினைக்காது முகத்திலும் உதிக்காது இருக்க முடிந்தாலும் வரமே!
- தஞ்சை த.இராமநாதன்

Good
ReplyDelete🤝
Delete