Saturday, 29 August 2026

தான் செத்தால் உயிரோடு சொர்க்கம்

 

                                                        (நேபாளம்)

மலைமீது மாளிகையானதும் மலைத்து தரையோடு தரையானதும் திகைத்து

நாளானதும் நடந்ததை மறைத்து மாளிகைமேல் மாளிகை முளைத்து

குலத்தை நாசமாக்கிடும் என்றுமே சிவனின் சொத்து!


- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 26 August 2026

உயிரில்லாது உய்வது ஏது?

 


கொட்டோ கொட்டெனக் கொட்டிய மழையில் 
வெள்ளமாய் இருப்பதும் நீரே
பட்டாலும் படாமல் வாழையின் இலையில் ஒட்டாத 
துளியாய் இருப்பதும் நீரே

முகிலாய் இருந்து காற்றினில் தவழ்ந்து
கொட்டாமல் ஒட்டாமல் நீர் இருந்திருந்தால்
துளியாகித் தொங்காது போயிருந்தால்
தரணியில் உயிர் ஏது? உயர்வு ஏது? நீரே!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 23 August 2026

அடிக்கு மேல் அடி கிடைக்கும்

பித்தலாட்டம் செய்தால் பிள்ளையாரால் கிடைக்கும் அடி பிள்ளையாரடி
ஆதிக்கத்தால் ஆடினால் ஆதிசிவனால் கிடைக்கும் அடி அகிலமும் அதிரும் அதிரடி
குலத்தைக் குளறுபடி செய்து குழப்பினால் குலை நடுங்கும் அடி குலதெய்வத்தடி
கத்தி ஆடி சுற்றி ஓடி ஒளிந்திட்டாலும் அழித்துக் காட்டும் அடி அறுபடை வேலனடி
எல்லை மீறி கூத்தாடிக் குதித்திட்டால் குட்டு வைத்து குந்த வைக்கும் அடி  ஐயனாரடி!

ஆறடிக்குள் அடங்குமுன் போராடிப் பெறுவதோ பேரிடி
இதைப் புரிய வைக்க பண்டை நிலத்தில் நின்று பறையடி
இயற்கையை வணங்கி அடைந்திடு இறையடி!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 22 August 2026

சொல்லும் சொல்


சொன்ன சொல்லைச் சொன்னால் சொல்லும் சொல்லானது சொன்ன சொல்லாகும்!

- தஞ்சை த. இராமநாதன்


Tuesday, 18 August 2026

அருகம் புல்லே எருக்கம் பூவே

 

நாயை நடுத் திண்ணைவரை விடாது ஓரத்தில் ஒதுக்கி விடுதலே சரி
பண்பற்றவனை பக்கத்தில் விடாது தூரத்தில் துரத்தி விடுதலே சரி

இலக்கியத்திற்காக இலக்கணம் இருக்கின்றது அன்றும் இன்றும்
கலக்குவதற்காக கவிக்குணம் இருக்கின்றது இன்றும் என்றும்

பொய்யாய்ப் புகழும் பொய்யாலே பொருளும் கண்டோன் கெடுவோன்
அருகம்புல் எருக்கம்பூ தத்துவம் தெரிந்தோன் கவலை மறந்தோன்!

- தஞ்சை த.இராமநாதன் 

Saturday, 15 August 2026

வாழை போல் வாழ முடியுமா?

 

வாழ வழி வகுத்தாரை வாழ்த்தி வளமாக வளருவதுதான் வாழை  வாழ வழி வகுத்தாரை வதைத்து வாழ்விழக்கும் வஞ்சக பேய்தான்  மனிதன்

தண்டோடு தழைத்துக் குலை சாய்த்து குலம் காத்து மாண்டிடும் வாழை
கூட்டாகத் தர்மத்தைக் கொலை செய்து கூண்டோடு அழியும் சண்டாளன்தான் மனிதன்

வாழையாக வாழ்வை வளமாக வாழ வாழையாகி வாழ்வில் வாழ்!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 13 August 2026

சிரிப்பின் சிறப்பு

 


தன்னலத்தின் சிறப்பு தன்மையற்ற சிரிப்பு
தன்னடகத்தின் சிறப்பு தரமான சிரிப்பு

ஏமாற்றியவர்களின் சிறப்பு ஏளனச் சிரிப்பு
ஏமாந்தவர்களின் சிறப்பு எளிமையான சிரிப்பு

வீழப்போகிறவர்களின் சிறப்பு சத்தமான சிரிப்பு
வாழப்போகிறவர்களின் சிறப்பு சுத்தமான சிரிப்பு

இன்பத்தில் சிரிப்பது பிறப்பின் சிறப்பு
துன்பத்திலும் சிரிப்பது இறப்பினும் சிறப்பு

- தஞ்சை த.இராமநாதன் 

Sunday, 2 August 2026

அன்போடு அறுபதைக் கடந்தேன்



பகுத்தறிவான அறிவாற்றலைப் பயன்பாட்டில் கொண்டும்
பக்குவமான செயலாற்றலைப் பண்பாட்டில் கொண்டும்

நியாய நீதியோடு நேர்மையைக் கோட்பாட்டில் கொண்டும்                                                 கடமையோடு கண்ணியத்தைக் கொள்கையில் கொண்டும்

அறிவுரையோடு ஆலோசனையை இரு மகன்களுக்குச் சொல்லித் தந்தும்
தன்மையோடு பாசத்தினைக் கணவன் இராமநாதனுக்கு அள்ளித் தந்தும்

பிறந்த ஆம்பலாப்பட்டில் முதல் பெண் பொறியாளராகப் படித்துச் சிறந்தும் சிங்கப்பூரில் முனைவர் படிப்பைக் குடும்பத்திற்காகப் படிக்காமல் துறந்தும்

அடியேன் எனக்கு அளவில்லாத ஆனந்தத்தை அள்ளித் தந்த
அறியாததை நான் அறிய அரிய தியானத்தைச் சொல்லித் தந்த என் மனையாள் அன்பரசிக்கு..
அறுபான் வாழ்வியலைக் கீழே ஈரடியில் தந்தேன்...
"அன்பு-நாதனுக்கு ஆற்றும் உதவி இந்நாதன் என்னோற்றான் கொல்எனும் சொல்"

என் உள்ளத்தின் ஒலியோடு ஒளியை ஏற்றி இப்பாவழி பாடி மகிழ்கின்றேன்!

- தஞ்சை த.இராமநாதன்