பாரத்தை அக்கம் பக்கம் நகர்த்தி வைக்கப் பயன்படுவது பாரம் நகர்த்தி
பாரத்தைத் தூக்கி சுத்தி உயர்த்தி வைக்கப் பயன்படுவது பாரம் தூக்கி
பாரத்தை உயர்த்தித் தூக்கித் தூக்கி
பார்ப்போரை மேலே பார்க்க வைக்குது
தூக்காதபோது ஆடாது காத்து நிற்பதோ பார்ப்போரை மேலும் வியக்க வைக்குது
ஆகா ஆகாயத்தைத் தொட்டு விடுமோ என எண்ணி அண்ணாந்துப் பார்த்து
கைப்பேசியைக் கையில் எடுத்து நகர்ந்து நகர்ந்து படம் எடுத்தால்...
கவிதை வரப்போகிறதா என்றார் பாதுகாப்பைப் பாதுகாக்கும் நபர்
தவழ்ந்து வரும் கருமேகம் ஒரு புறம் காத்து நிற்கும் பாரம் தூக்கி மறு புறம்
கவிதையா என கேட்டது ஒரு குரல்
கவிதையே என எழுதியது ஒரு விரல்!
- தஞ்சை த.இராமநாதன்







