பொன்னை எண்ணுமா? பொருளை எண்ணுமா?
மண்ணை எண்ணுமா? விண்ணை எண்ணுமா?
சொந்தத்தை எண்ணுமா? பந்தத்தை எண்ணுமா?
வாழ்ந்ததை எண்ணுமா? வாழாததை எண்ணுமா?
காதலை எண்ணுமா? சாதலை எண்ணுமா?
மோதலை எண்ணுமா? போதலை எண்ணுமா?
விட்டதை எண்ணுமா? விடாததை எண்ணுமா?
பட்டதை எண்ணுமா? படாததை எண்ணுமா?
இளம் நிலையை எண்ணுமா? கிழம் நிலையை எண்ணுமா?
வளம் நிலையை எண்ணுமா? பழம் நிலையை எண்ணுமா?
ஏமாற்றியதை எண்ணுமா? ஏமாந்ததை எண்ணுமா?
காப்பாற்றியதை எண்ணுமா? கவுந்ததை எண்ணுமா?
எண்ணுவது எண்ணமா? எண்ணாததும் எண்ணமா?
தூங்கும்போது எண்ணமா? தூங்குவதே எண்ணமா?
எப்படியும்,
போகப் போவதும் எண்ணமே! சாகப் போவதும் திண்ணமே!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment