Wednesday, 24 January 2024

கொலைகளும் கொள்ளைகளும்

 

கொலைகளும் கொள்ளைகளும் 

கவனித்துக் கொள்ள முடியாதவர்கள்
முடியாதவர்களைக் கவனத்துடன்                  கொல்வதற்குப் பெயர் என்ன?

முரண் பிடிக்கும் மூத்த முடியாதவர்களை
முரண் பிடித்தே மூச்சை முடித்து                          வைப்பதற்குப் பெயர் என்ன?

நொடித்த உறவுடன் கச்சிதமாக நடித்து
வாய்ப்புக் கிடைத்தால் உடலை ஒடித்து நுடமாக்குவதற்குப் பெயர் என்ன?

கன்று நட்டு மரமாக்கினாலும் பலனை
நன்றி மறந்த நாய்போல் செயல்பட்டு        அனுபவிப்பதற்குப் பெயர் என்ன?

உடல் நலம் நாடி மருத்துவரிடம் போனால்
நியாயமற்ற மருத்துவர் பணத்தை
கறப்பதற்குப் பெயர் என்ன?

உரிமைக்காகப் போராடும் உணர்வைச்            சூழ்ச்சியால் நாசமாக்க நினைத்தால்                        அதற்குப் பெயர் என்ன?

- தஞ்சை த இராமநாதன் 

Sunday, 21 January 2024

பழமைமிகு பூமி பலமிகு சாமி

 

 பழமைமிகு பூமி பலமிகு சாமி

இராமனுக்கே சாமியானதால் இராமேஸ்வரத்தில் இராமநாதசுவாமி
இராமனே சாமியானதால்
தனுஷ்கோடியில் கோதண்டராமசுவாமி
பிள்ளையாரால் தூக்கி வைக்கப்பட்ட
திருவரங்க அரங்கநாதசுவாமி
எல்லா சாமிகளையும்விட உயர்வான
தஞ்சாவூர் பிரகதீஸ்வரசுவாமி
எல்லா தீபங்களையும்விட ஒளிவீசும்
திருவண்ணாமலை நாதர்சுவாமி
அறுபடை வீடுகளைக் கொண்ட    வேலோனாகிய சுப்பிரமணியசுவாமி
நவக்கிரங்களையும் தன்னுளடக்கிய தமிழ்நாட்டு நவக்கிரகசுவாமி
இராமநாதன் மண்ணில் எழுந்தருளும் ஆற்றல்மிகு ஆதிசிவசுவாமி
பலவித சுவாமிகள் எங்கு உருவானாலும் பழமைமிகு சாமி தமிழ்நாட்டுசுவாமியே!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 19 January 2024

காணும் பொங்கலின் கூட்டம்

 
காணும் பொங்கலின் கூட்டம்

பெரியோரிடம் பரிசுக் கிடைக்குத்தாவென        வணங்கிப் பார்க்கும் சிறுவர் கூட்டம்
சிறுவரிடம் பாசம் கிடைக்குமாவென                      இணங்கிப் பார்க்கும் பெரியோர் கூட்டம்

கோலை அடித்து கும்மியைத் தட்டி                                  மெட்டுப் போடும் பெண்டிர் கூட்டம்
உரியை உடைக்க காளையை அடக்க
போட்டிப் போடும் ஆடவர் கூட்டம்

தாலிகட்டப் பெண் கிட்டுமாவென                                      எட்டிப் பார்க்கும் இளைஞர் கூட்டம்
தாலி கட்டியபின் கிட்டுவேனென                                          எட்டி நிற்கும் இளைஞிக் கூட்டம்

கண்டவரைக் கண் கண்டபடிக் காணாது        காண்பவரைத் தேடும் மனக்கண் ஓட்டம்
கண்டோரைக் கண்டதே போதுமென                கண்டவரோடு மகிழும் கூடிய கூட்டம்!

- தஞ்சை த இராமநாதன் 

Tuesday, 16 January 2024

இத் தையில் எவ்வழிப் பிறந்தது?

 

இத் தையில் எவ்வழிப் பிறந்தது?

வருடந்தோறும் பொங்கல் வந்தாலும்
பொங்கும் உள்ளங்களிலும் மாற்றமில்லை
வருடந்தோறும் பொங்கி வந்தாலும்
பொங்கும் இல்லங்களிலும் மாற்றமில்லை

நாட்டுக்கு நாடு பொங்கல் வைத்தாலும்
நாட்டு மக்களிடமும் நல்ல மாற்றமில்லை
வீட்டுக்கு வீடு பொங்கல் வைத்தாலும்                            வீட்டு மக்களிடமும் நல்ல மாற்றமில்லை

தெருதோறும் நடந்து திரிந்து அலைந்து                      பிச்சை எடுப்போரிலும் மாற்றமில்லை
தெருவோரம் அமர்ந்து கிடந்து அயர்ந்து
மூச்சை விடுவோரிலும் மாற்றமில்லை

ஏய்த்துப் பிழைக்க ஏற்றத் தொழிலைச் செய்து ஏமாற்றுவதிலும் மாற்றமில்லை
கண்ணியத்துடன் கடமையைச் செய்து        ஏமாறுவதிலும் மாற்றமில்லை

மாட்டுப் பொங்கலுக்கு மாடு தொட்டித் தண்ணியைக் குடிப்பதிலும் மாற்றமில்லை
மாட்டுப் பொங்கலுக்கு வீடு புட்டித் தண்ணியைக் குடிப்பதிலும் மாற்றமில்லை!

- தஞ்சை த இராமநாதன் 

Monday, 15 January 2024

பொங்கலுக்குப் பொங்கலே உணவு

 

பொங்கலுக்குப் பொங்கலே உணவு

பொங்கலன்று பொங்கலைப் பொங்கி
பொங்கிய பொங்கலை ருசித்தீரா?

பொங்கலைப் பொங்கலன்றுப் பொங்கி
பொங்கலோ பொங்கலென ரசித்தீரா?

நான்கு நாள் பொங்கலுக்கு இருவகைப்                        பொங்கல் பொங்குவதைக் கண்டீரா?

அந்த பொங்கலோ இந்த பொங்கலோ
வெந்த பொங்கலை உண்டீரா?

- தஞ்சை த இராமநாதன் 

Sunday, 14 January 2024

போக்கிப் பண்டிகை

 

போக்கிப் பண்டிகை

போக்கி வந்ததைப் போக்காது நீக்கக் கூடாததை நீக்கியதால் போகியாகி வந்தது

போக்கப் போவதைப் போக்காது போக்கி
போகியாகி போலிப் பொங்கலாகி வந்தது

அயோக்கியன் அகரத்தை நீக்கிட ஆதிபகவனிடம் வந்தாலும் எளிதாக யோக்கியனாகிட முடியாது

போக்கிப் பண்டிகை போகியாகி வந்தாலும் போக்கிட வேண்டியதை எளிதில் போக்கிட முடியாது

நீக்க வேண்டியதை நீக்கிட போகியான போக்கிப் பண்டிகையில் போக்கிட முயன்றிடுவோம்

காக்க வேண்டியதைக் கட்டாயம் காத்திட போகியான        போக்கிப் பண்டிகையில் முயன்றிடுவோம்!


- தஞ்சை த இராமநாதன் 

Friday, 12 January 2024

இளஞ்சியத்தம்மாவை இழந்தோம்

இளஞ்சியத்தம்மாவை இழந்தோம்

கள்ளம் கபடமற்ற முகத்தினில் சிரிப்பு
நடிப்பு நாடகமற்ற அகத்தினில் பூரிப்பு
அன்போடு அழைத்து விருந்து உபசரிப்பு
இதையெல்லாம் இழந்த நமக்குப் பேரிழப்பு

அம்மியில் உப்பு மிளகாயோடு நசுக்கிக் கொடுத்த          ஒட்டு மாங்காய் கிடைப்பது எப்போது?
அப்பாடியென அன்போடு அழைத்துக் கொடுக்க இளஞ்சியத்தம்மா இல்லாதபோது😭😭😭😭

- தஞ்சை த இராமநாதன்
   12 Jan 2024

Wednesday, 10 January 2024

இல்லை...இல்லவே...இல்லை

 

இல்லை...இல்லவே...இல்லை

சொந்தத்திற்கு உடன்பட்டு பந்தத்திற்குக் கடன்பட்டு வாழ்வோர் கோமாளியா?

பாசத்திற்கு உதைபட்டு நேசத்திற்கு
வதைபட்டு வாழ்வோர் ஏமாளியா?

ஊரையும் ஏமாற்றி உற்றாரையும் ஏமாற்றி வாழ்வோன் நல்லவனா?

பொய்யையும் உரைத்து மெய்யையும் மறைத்து வாழ்வோன் வல்லவனா?

நல்லவர்கள் நாடெல்லாம் நலிவது கலியுகத்தில் கட்டாய கட்டமா?

கொடியவர்கள் வீடெல்லாம் குளிர்வது காசு பணத்தின்
கொட்டமா?

- தஞ்சை த இராமநாதன் 

Sunday, 7 January 2024

மதிப்பெண்

 
மதிப்பெண்

பெண் மதியை எண்ணிட எண்ணி மதியை எண்ணினால் மதியுடையப் பெண்ணை மதிப்பெண் எனலாம்

பெண் நிதியை எண்ணிட எண்ணி நிதியை எண்ணினால் நிதியுடையப் பெண்ணை நிதிப்பெண் எனலாம்

பெண் சதியை எண்ணிட எண்ணி சதியை எண்ணினால் சதியுடையப்
பெண்ணை சதிப்பெண் எனலாம்

பெண் யுக்தியை எண்ணிட எண்ணி
யுக்தியை எண்ணினால் யுக்தியுடையப்
பெண்ணை யுக்திப்பெண் எனலாம்

பெண் சக்தியை எண்ணிட எண்ணி சக்தியை எண்ணினால் சக்தியுடையப்
பெண்ணை சக்திப்பெண் எனலாம்

பெண் பக்தியை எண்ணிட எண்ணி
பக்தியை எண்ணினால் பக்தியுடையப்
பெண்ணை பக்திப்பெண் எனலாம்

பெண் முக்தியை எண்ணிட எண்ணி
முக்தியை எண்ணினால் முக்தியுடையப் பெண்ணை முக்திப்பெண் எனலாம்

மதிப்பெண்ணை மதிப்பெண்ணிற்குக் கொடுத்து எண்ணினால் மதிப்பெண் பெறும் மதிப்பெண் 100/100!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 5 January 2024

தொங்கும் தொழிலிலும் தெய்வமே!

தொங்கும் தொழிலிலும் தெய்வமே!

சொந்த நாடு விட்டு வேறு நாடு வந்து                    தொங்கும் தொழிலுக்கு வந்தேனுங்கோ
தொங்குவதே தொழில் என்றானாலும்
இந்த தொழிலும் தெய்வந்தானுங்கோ

தொங்கும் தம்பி நீதான் தங்கத் தம்பி                தொங்கலை நம்பி நாடே இருக்கு தம்பி
தொங்கும்போது கவனம் தேவை தம்பி
உங்களை நம்பி வீடே இருக்கு தம்பி

தொங்கி முடித்தால் காசுக் கிடைக்கும்
தொங்க மறுத்தால் பேச்சுக் கிடைக்கும்
தொங்கி அடித்தால் வர்ணம் கிடைக்கும்
கர்ணம் அடித்தால் மரணமும் கிடைக்கும்!

- தஞ்சை த இராமநாதன் 

Wednesday, 3 January 2024

தானமும் தாராளமும்

 

தானமும் தாராளமும்

கண்ணைத் தானமாகக் கொடுத்தால் பெற்றவரின் கண்ணாகிப் பார்க்கும்
இரத்தத்தைத் தானமாகக் கொடுத்தால் பெற்றவரின் இரத்தமாகிச் சுரக்கும்

உறுப்பைத் தானமாகக் கொடுத்தால்
பெற்றவரோட உறுப்பாகி வாழ்த்தும்
பசியைத் தணிக்கக் கொடுத்தால் பெற்றவரோட உடலெல்லாம் வாழ்த்தும்

உள்ளதைத் தானமாகக் கொடுத்தால்
பெற்றவருக்கு இல்லாததாக இருக்கும்
உள்ளத்தைத் தாராளமாகக் கொடுத்தால்
பெற்றவருக்கு இன்பமாக இருக்கும்!

- தஞ்சை த இராமநாதன்