Friday, 19 January 2024

காணும் பொங்கலின் கூட்டம்

 
காணும் பொங்கலின் கூட்டம்

பெரியோரிடம் பரிசுக் கிடைக்குத்தாவென        வணங்கிப் பார்க்கும் சிறுவர் கூட்டம்
சிறுவரிடம் பாசம் கிடைக்குமாவென                      இணங்கிப் பார்க்கும் பெரியோர் கூட்டம்

கோலை அடித்து கும்மியைத் தட்டி                                  மெட்டுப் போடும் பெண்டிர் கூட்டம்
உரியை உடைக்க காளையை அடக்க
போட்டிப் போடும் ஆடவர் கூட்டம்

தாலிகட்டப் பெண் கிட்டுமாவென                                      எட்டிப் பார்க்கும் இளைஞர் கூட்டம்
தாலி கட்டியபின் கிட்டுவேனென                                          எட்டி நிற்கும் இளைஞிக் கூட்டம்

கண்டவரைக் கண் கண்டபடிக் காணாது        காண்பவரைத் தேடும் மனக்கண் ஓட்டம்
கண்டோரைக் கண்டதே போதுமென                கண்டவரோடு மகிழும் கூடிய கூட்டம்!

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment