கள்ளமில்லாத உள்ளத்தாரின் கலாச்சாரத்தின் உபசரிப்பு
கபடமில்லாத குலத்தாரின் அகச்சாரத்தின் முகசிரிப்பு
தாராளமான பந்தியில்லாத பரிமாறல்
ஏராளமான சத்தமில்லாத பலபாடல்
நிகழ்ச்சி நெறியாளரின் நற்பெயர் அதுதான் G.T.மணி
மகிழ்ச்சிப் பொங்கச் சிரிக்க வைத்தாரே அதுதான் நற்பணி
தன் தலையாயக் கடமையைச் செய்தார் தலைவர்
சிட்டெனக் காட்டி பட்டெனப் பறந்தார் செயலாளர்
அத்தாச்சியின் அன்பை அலாதியானது என்றார்
சிண்டாவின் அத்தாட்சியாக வந்து சென்றார்
ஒருங்கிணைப்பாளர் ஒழுங்காக ஒருங்கிணைத்த காட்சி
குடும்பத்தார் ஆடாது ஓடாது அமர்ந்திருந்ததே சாட்சி
சிறப்பு விருந்தினர் பேசினார் சிறப்போடு
சிறப்புச் செய்தனர் பலபேருக்குப் பொறுப்போடு
முனைவரோ முழங்கினார் புலிக்கொடி ஏந்திய சிங்கமாக
முன்னவராக விளங்கினார் விவரப்படி ஓங்கிய அங்கமாக
உறவு என்றதும் கூடித் திளைத்தோம் பொதுவாக
பிரிவு என்றதும் வாடிக் கலைந்தோம் மெதுவாக!
- தஞ்சை த.இராமநாதன்