Saturday, 31 May 2025

தெரியவில்லை .... புரியவில்லை

 

வெட்டியவன் வெட்டித் தொழிலை நாடிச் செய்பவனா தெரியவில்லை
வெட்டிச் சிதைக்கும் தொழிலைத் தேடிச் செய்பவனா புரியவில்லை

வெட்டியவன் வேரோடு வெட்டிப் பணம் பண்ணியதாகத் தெரியவில்லை
வேரோடு வெட்டிச் சாய்க்காததால் பழம் பரிசானதா புரியவில்லை

மரத்தை வெட்டி வதைப்பதை வீரமாக நினைக்கிறானா தெரியவில்லை
வெட்டில் மீண்ட மரம் மீண்டும் மரமாக நினைக்கின்றதா புரியவில்லை!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment