ஐந்தாயிரம் வருடத்திற்கு முன்பு தமிழ் இருக்குமா என அப்போது இருந்த பழந் தமிழன் நினைத்ததேயில்லை
ஐந்நூறு வருடத்திற்குப் பின்பு தமிழ் இருக்குமா என இப்போது இருக்கும் பயந்த தமிழன் நினைக்காமலில்லை
பழந் தமிழன் பயந்ததாகச் சரித்திரம் எப்போதும் இருந்ததே இல்லை
பயந்த தமிழன் முகத்தில் தரித்திரம் இப்போது இல்லாமல் இல்லை
தென் கிழக்காசியாவைப் கடற்படை கொண்டு வென்றவன் பழந் தமிழன்
வென்றதைச் சொல்லக்கூடத் தயங்கித் தயங்கித் தாழ்ந்தவன் பயந்த தமிழன்
இருந்தாலும் இறந்தாலும் பழந் தமிழன் உணர்வோடு வாழச் சபதத்தைக் கொள்வோம்
பேச்சாலும் செயலாலும் பயந்த தமிழனாய் உணர்வற்று வாழும் அபலத்தை வெல்வோம்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment