Saturday, 17 May 2025

நடனத்தாலும் நாடு ஒன்றுபடும்

 

 

இசையை இசைக்க இசைக்க இசைப்போரை இசையே ரசிக்கும்
இசைத்த இசையை ரசிக்க ரசிக்க இருப்போரின் ரசனையே ருசிக்கும்

இசைப்பவரின் தாய் மொழித் தெரியாது இசைப்பவரின் ஊர்ப் பெயர்த் தெரியாது
இசைத்த இசையில் மொழி வகை ஏது?
இசைப்பவர் இசைக்கு வாய் மொழி ஏது?

வேற்றுமைகளைச் சொல்லிக் காட்டி பிரிந்து திரிந்து வாழலாம்
வேற்றுமையில் ஒற்றுமையைக் காட்டி சேர்ந்து மகிழ்ந்தும் வாழலாம்
தமிழில் பழம் பாடல் தேடினால் நேராக பாபநாசம் செல்லலாம்
பல இனத்தினர் சேர்ந்து நடனம் ஆடுவதும் பாபநாசமே எனவும் சொல்லலாம்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment