தாயானவள் மாமியாராக மாற மகளை மணக்க மணமகனாக மருமகன் வரவேண்டும்
தாயானவள் மாமியாராக மாற மகனை மணக்க மணமகளாக மருமகள் வரவேண்டும்
தாயானவள் தாயாகு முன்னே தன் தாய்தானே தனக்கு எல்லாமும்
தானே தாயான பின்னே தன் சேய்தானே தனக்கு எல்லாமும்
பிள்ளையாகிப் பெண்ணாகித் தாயாக தானே ஆன பின்னே
தன்னால் ஓய்வெடுக்க முடியாதுன்னே
தயாரான தாயார்தானே மாமியார்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment