ஆனந்த அழுகையோடு பிறந்து அன்பு அரவணைப்போடு வளர்ந்து
எண்ணற்ற இடர்களைக் கடந்து உயிரற்ற உடம்பைப் பிரிந்து.............................................
- தஞ்சை த.இராமநாதன்
பார்க்காத பணத்தைப் பார்த்து
உண்ணாத உணவை உண்டு
உடுத்தாத உடையை உடுத்திப்
பேசாத பேச்சைப் பேசித் திரிந்தால்.....
தரம் தரவே தராது தராதரம்!
- தஞ்சை த.இராமநாதன்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகச் சோமன்தெரு தொடக்கப் பள்ளியில் பயின்றோமே, எப்பொழுதும் ஒரே அணியில் இருந்து கபடி ஆடி ஜெயித்தோமே!
நாக்கைக் கடித்தபடி கொதித்து ரைடு (ride) எடுத்து உதைத்து வரத் துடித்த நான் இங்கே! கையைப் பிடித்தபடி என்னை அமைதிப்படுத்தி, கபடி கபடியெனப் பாடியபடி கதறடித்த என் டாங்கே எங்கே?
வேங்கைப் பள்ளம் வடப்பக்கம் நடு இரவில் வயலுக்கு நாம் நீர்ப் பாய்ச்சியதை நினைக்கின்றேன்; சிங்கப்பூரில் பகல் பொழுதினில் பலர் அமர்ந்திருக்கும் பகுதியில், உம் மறைவை எண்ணி அழுதபடியே இக்கவிதையை முடிக்கின்றேன்!
- தஞ்சை த.இராமநாதன்
ஆனந்தமயம்
பிறந்து வளர்ந்து இறக்கும்வரை புரட்சி ஓங்குக புரட்சி ஓங்குக எனச் சொல்லியே வாழ்ந்தால் புரட்சியால் எழுச்சி இல்லைதானே?
பிறந்து வளர்ந்து இருக்கும்வரை
மகிழ்ச்சி ஓங்குக மகிழ்ச்சி ஓங்குக எனச் சொல்லியே வாழ்ந்தால் மகிழ்ச்சியால் வீழ்ச்சி இல்லைதானே?
புரட்சியைப் பார்த்துச் சிரித்தும் மகிழ்ச்சியைப் பார்த்து ரசித்தும் வாழ்ந்தால் நம் வாழ்க்கை ஆனந்தமய வாழ்க்கைத்தானே?
- தஞ்சை த.இராமநாதன்