அப்போது...
கட்டாயப்படுத்தி வீட்டுக்கு வாங்க எனச் சொல்வார்கள்,
கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் செல்வார்கள்
கட்டாயம் கட்டாயத்திலும் திண்ணையிலும் அமர வைத்து விருந்துண்ண வைப்பார்கள்,
கட்டாயம் விருந்துண்ண வருவதாகச் சொல்லி விருந்தினரை விருப்பமின்றி அனுப்பி வைப்பார்கள்!
இப்போது...
திண்ணையோடு கட்டாயத்தையும் கட்டிய வீட்டைக் காட்ட முடியுமா?
கட்டிய வீட்டைக் காட்டினாலும் விருந்தாளி வரும் வீட்டைக் காட்ட முடியுமா?
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment