படி படிப்படியாய்ப் படி
வழக்கப்படி பதவிக்கு முன்படி வழியாக வந்தால் அது பலத்தின் படி
பழக்கப்படி பதவிக்குப் பின்படி வழியாக வந்தால் அது பணத்தின் படி
மரத்தால் செய்யப்பட்டு தானியத்தை அளப்பது தமிழரின் மரக்கால்படி
மறத்தால் செயல்பட்டு மானத்தைக் காப்பது தமிழரின் மரபுப்படி
கசடறக் கற்று மரியாதையைப் பெற்று பெருமையோடு வாழ்ந்தது அக்காலப்படி
கசடைக் கற்று மடமையைப் பெற்று
வெறுமையோடு வாழ்வது இக்காலப்படி
அடிதடி நடத்தி அக்கிரமம் அநியாயம் செய்வது சதியின் நாற்றப்படி
இடித்தும் வெள்ளம் பிடித்தும் பூமி ஆடியும் அழிவது விதியின் சீற்றப்படி
மூத்தோரை மதிப்பதும் கடவுளைத் துதிப்பதும் வாழ்வியலில் ஏற்றப்படி
மூத்தோரை அவமதிப்பதும் கடவுளை
ஏய்ப்பதும் வாழ்வியலில் இறக்கப்படி!
- தஞ்சை த.இராமநாதன்









