இறக்கும்வரை இறக்காது
ஓடி ஆடி விளையாடிய நினைவுகள் இறக்கும்வரை இறக்காமல் இருக்கும்
பார்த்து ரசித்து மகிழ்ந்த நினைவுகளும் இறக்கும்வரை இறக்காமல் இருக்கும்
கண்களால் கண்டு களித்த நிகழ்வுகள்
இருக்கும்வரை மறக்காமல் இருக்கும்
பேசி மகிழ்ந்து திளைத்த நிகழ்வுகளும்
இருக்கும்வரை மறக்காமல் இருக்கும்
பிடித்த உடுப்பை உடுத்திய நினைவுகள் உடுத்தியவரிடம் உணர்வோடு இருக்கும் பிடித்துப் படித்த படிப்பின் நினைவுகளும் படித்தவரிடம் உயர்வோடு இருக்கும்
கடந்து வந்த கரடானப் பாதைகள்
கடந்தவருக்கு கனமாகவே இருக்கும்
கடக்கப் போகும் முரடானப் பாதைகளும்
கடப்பவருக்கு கனவாகவே இருக்கும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment