குழலின் ஓசை குயிலின் பாசை
குயிலுக்காக ஊதியக் கண்ணனும் இருந்ததுண்டு
கண்ணனுக்காகப் பாடியக் குயிலும் இருந்ததுண்டு
குயிலின் பாசையில் துன்பமும் இருந்ததுண்டு
குழலின் ஓசையில் துயரமும் இருந்ததுண்டு
ஊதிய ஓசையை அசை போட்டுப் பார்ப்பவருமுண்டு
பாடியப் பாடலை இசை போட்டுக் கேட்பவருமுண்டு
ஊதியக் குழலை ஊதாமல் விட்டுவிட்ட கண்ணனுமுண்டு
பாடியப் பாடலை பாடாமல் விட்டுவிட்ட குயிலுமுண்டு
சூழலால் காலங்கள் மாறலாம் கானங்கள் மாறலாம்
குழலின் ஓசையும் மாறாது குயிலின் பாசையும் மாறாது!
- தஞ்சை த.இராமநாதன்

Nandri.😊
ReplyDelete🤝🤝
ReplyDelete