புத்திகெட்டு திமிரோடு பேசுபவனிடம் பேசினால் பேசட்டுமெனப் பேசாமல்
விட்டு விட்டால் விடாமல் பேசுகின்றான்
திமிரால் கொழுத்து கத்துபவனிடம்
கத்தவிடாமல் கெத்தோடுப் பேசினால் குருடனைப் போல் பார்க்கின்றான்
வாயால் கெட்டு வாங்கிக்கொண்டவன்
அர்த்தமற்ற ராத்திரியில் குடையைப் பிடித்துத் திருடனைப் போல் திரிகின்றான்
பார்க்காத அளவு பணம் பார்ப்பவன் பார்க்கும் பார்வையாலேயே பறந்தாலும் பறக்க முடியாத குருவி ஆகின்றான்
பம்பரமாய்ச் சுற்றிப் பலவாறு ஆடம்பரம் செய்து சாயத்தைப் பூசி ஆடினாலும் பரம்பரைக் குணத்தோடு வாழ்கின்றான்!
- தஞ்சை த.இராமநாதன்




