Monday, 30 May 2022

பிடித்தக் கைகள்

 

பிடித்தக் கைகள்

பிடித்துப் பிடித்தக் கைகள்
கை நழுவிப் போவதுமில்லை
பிடிக்காது பிடித்தக் கைகள்
கை நழுவாமல் போவதுமில்லை
காளைகளைப் பிடித்தக் கைகள்
கரடு முரடானக் கைகளும் இல்லை
கலைகளைப் படித்தக் கைகள்
கரடு முரடாக இல்லாமலும் இல்லை!

- தஞ்சை த இராமநாதன்


வெற்றியின் திறவுகோல்

 

வெற்றியின் திறவுகோல்

பூட்டியப் பூட்டை பூட்டியவழியில் திறந்து வழிக் கிடைத்தால் வெற்றி!

திறந்தப் பூட்டை திறந்தவழியில் பூட்டி வழியை அடைத்தாலும் வெற்றி!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 24 May 2022

யார் நீ?

 

யார் நீ?

யார் நீயெனக் கேட்பவனை நீ யாரெனக் கோபக் குரலில் கேட்கும் நாதா!
நீ யாரென உலகிற்குக் காட்டாதது
உன் தவறின்றி வேறெவர் தவறு நாதா?                  ராஜராஜன் தான்தானென எண்ணி ராஜக் குரலில் பேசிப் பழக்கப்பட்ட நாதா!
ராஜா நீயேதாதெனச் செயலில் காட்டி உன் நிஜ வாழ்க்கையை தொடர்ந்திடு நாதா!

- தஞ்சை த இராமநாதன்


Monday, 23 May 2022

இரைதேடி இரையாகும் வெள்ளாடு

 

இரைதேடி இரையாகும் வெள்ளாடு

வேலியைத் தாண்டும் வெள்ளாடு
கிளையைத் தாண்டும் வெள்ளாடு
புல்லற்றுத் தள்ளாடும் வெள்ளாடு
புல்லுக்காகப் பலியாகும் வெள்ளாடு
உயிருக்காகப் போராடும் வெள்ளாடு
கறியாகி இரையாகும் வெள்ளாடு!

- தஞ்சை த இராமநாதன்


சுண்டைக்காய் வைத்தியம்

 

சுண்டைக்காய் வைத்தியம்

கண்ணில் கண்டதையெல்லாம் கண்டபடி கொட்டிக் கட்டிவிடாமல்
வெண்டைக்காய் சுண்டைக்காயை கறியாக்கி அளவோடு உண்டால்
கண்டக் கண்ட நோயையெல்லாம்
காணாதத் தூரம் விரட்டி விடலாம்!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 21 May 2022

பொம்மைப் படம்

பொம்மைப் படம்

ஓடா முயலும் ஆடா மயிலும்
பாடா குயிலும் பாடம் பயில வழியேது?
கண்ட முயலுக்கு துள்ளாத வழியேது?
காணும் முயலுக்கு துள்ளும் வழியேது?
வாடாப் பூவில் இருந்திடும் மணமே
வாடியப் பூவில் இறந்திடும் மணமே!
பொம்மையானது படமாகவும் மாறும்
உண்மையானது ஊமையாகவும் மாறும்!

- தஞ்சை த இராமநாதன் 


புகையும் பகையும்

 

புகையும் பகையும்

முன்னோக்கி முன்னோக்கியேச் செல்லுது
இரயில் வண்டியின் பயணம்              பின்னோக்கி பின்னோக்கியேச் செல்லுது இரயில் புகையின் பயணம் 

விண்னோக்கி விண்னோக்கியேச் செல்லுது
எரிந்து முடியும் புகை
மண்னோக்கி மண்னோக்கியேச் செல்லுது
பிறந்து தொடரும் பகை!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 20 May 2022

இலையும் மெத்தை ஆனதோ?

 

இலையும் மெத்தை ஆகலாம்

நத்தையின் நித்தைக்கு ஒத்துப்போனது மெத்தையான இலை
நத்தையின் நித்தை இத்தையானது விந்தையான நிலை!

- தஞ்சை த இராமநாதன்

திரும்புகிறது வரலாறு

 

திரும்புகிறது வரலாறு

கொலை செய்து இறக்க வைத்தவன் திக்கற்று திண்டாடுவான்
கொள்ளையடித்து ஊரைக் கெடுத்தவன்
ஊராரால் உதைக்கப்படுவான்

பதவி இருக்கும்போது போலியாக சிங்கம்போல் நடிப்பான்
பதவி இழக்கும்போது பரிதாபமாக அசிங்கப்பட்டு அல்லல்படுவான்

பழிக்குப் பழியென பழிவாங்கக் கூடவே கூடாது
இயற்கையதன் வழியில் பழி வாங்காது விடவே விடாது!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 17 May 2022

பிடித்தக் கையும் பட்டக் காலும்

 

பிடித்தக் கையும் பட்டக் காலும்

பிடித்துப்போன மண் வெடித்துப் பொறுக்கானால் பட்டக்கால் சுடாதா?
பட்டுப்போன மரத்தை கட்டிப் பிடித்துக் கதறினாலும் கைவிட்டுப் போகாதா?

- தஞ்சை த இராமநாதன்


Monday, 16 May 2022

பக்தரைப் பார்த்து சிரித்தார் புத்தர்

உலகில் புத்தருக்குப் பக்தர்களும் ஏராளம்
உலகில் புத்தருக்கு சிலைகளும் தாராளம்
பக்தர்களின் மன பக்தியால் புத்தருக்குச் சிலைகள் வருகின்றனவா?
பக்தர்களின் பண சக்தியால் புத்தருக்குச் சிலைகள் வருகின்றனவா?
புத்தருக்குச் சிலைமேல் ஆசை என்றும் இல்லவே இல்லை
பக்தருக்குச் சிலைமேல் ஆசை இன்றும் இல்லாமல் இல்லை                                                  ஆசைதான் துன்பத்திற்கே அடிப்படைக் காரணம் அது புத்தர்                                              ஆசைதான் இன்பத்திற்கே அடிப்படைக்  காரணம் இது பக்தர்                                                ஆசையை அடியோடு துறந்து வாழ்ந்து அரண்மனையை இழந்தார் புத்தர் அரண்மனையை ஆர்வத்தோடு அடைந்து  ஆசையின் பிடியோடு வாழ்ந்தால் பக்தர்  

இதைப் பார்த்துதான் புத்தர் சிரித்தாரா? இதைப் பார்த்தபின் பக்தர் சிந்திப்பாரா?                         

தஞ்சை த.இராமநாதன்

Sunday, 15 May 2022

இழுத்துக் கரையேற்றிய நாய்

 

இழுத்துக் கரையேற்றிய நாய்

விழுந்தக் குட்டி வீழ்ந்து விடாமல்
விழுந்தக் குட்டி தொலைந்து விடாமல்
விழுந்தக் குட்டி பயந்து விடாமல்
விழுந்தக் குட்டியைக் காப்பாற்றினாயே!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 14 May 2022

முட்டையைச் சுற்றி தேனடை

 

முட்டையைச் சுற்றி தேனடை

குருவிக் கட்டியது முட்டைக்குக் கூடு
வளைத்துக் கட்டியதோ தேனீக் கூடு
கட்டிய இரண்டும் தனித்தனி வீடு
சேர்ந்தே இருப்பதால் கூட்டணி வீடு

கூட்டுக் குடும்பத்தைப் பிரித்தால் கேடு
கூட்டுக் குடும்பத்தை என்றென்றும் நாடு
உறவுகளைப் பிரியாது உறவைத் தேடு
உரிமையான உறவுக்குள் ஏது கேடு?

கோயிலோடு கோட்டை சேர்ந்ததால் கோழிக்கோடு
இரு ஓடைகள் ஒன்றாய்ச் சேர்ந்ததால் ஈரோடு
தென்னைகள் கூட்டு எங்க கீழக்காடு
காய்கறிகள் கூட்டு நம்ம கோயம்பேடு!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 13 May 2022

இப்படியும் அணிலா?

 

இப்படியும் அணிலா?

ரணில் பிரதமரானது அரசியல் களத்தின் மாற்றம்
அணில் நிறமாறியது அவசரக் காலத்தின் மாற்றம்

ஆட்டம் முடிந்ததால் ரணிலுக்கு
அங்கே கொண்டாட்டம்
தோட்டம் முடிந்ததால் அணிலுக்கு இங்கே திண்டாட்டம்

ஆடி அடங்கும் வாழ்க்கை ஆடாமல் என்றென்றும் அடங்காது
அடங்கப் போகும் வாழ்க்கையை அடக்கிட யாராலும் முடியாது!

- தஞ்சை த இராமநாதன்


சகிப்புத் தன்மை மிகுந்தக் கடமை

 

சகிப்புத் தன்மை மிகுந்தக் கடமை

தூங்க முடியாதவரை முடிந்தவரை  தூங்காதுக் காப்போர் செவிலியர்
தூங்கி விழித்ததும் தூக்கி வைத்து
தாங்கிப் பிடிப்போர் செவிலியர்

வலிக்குது ஊசியென்போரிடம்
வலி காக்கத்தான் ஊசியென்போர் செவிலியர்
வாந்தி எடுப்போரிடம் முந்தி வந்து  வாந்தியை எடுப்போர் செவிலியர்

மறதிக்கு மருந்தை அளந்து எடுத்து மறக்காமல் கொடுப்போர் செவிலியர் மருத்துவரை மறந்து விட்டாலும் மறவாத நினைவில் நிற்போர் செவிலியர்!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 12 May 2022

கோடைக்கேற்ற நுங்கு


 கோடைக்கேற்ற நுங்கு

வெட்டிவிடுவதென்ற முடிவோடு அரிவாளை கர்ச்கர்சென தீட்டியெடுத்து
இடுப்பில் சொருகி தாவித் தாவி ஏறி குலை குலையாய் வெட்டிச் சாய்த்து                      சிதறியக் காய்களை சீவிப் பார்த்தால்            திறந்த மூன்று கண்களும் பளிச்செனத் தெரிவதுதான் கோடைக்கேற்ற நுங்கு!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 10 May 2022

நனைந்தும் நனையாமலும்

 

நனைந்தும் நனையாமலும்

மழையில் நனைந்து துளிர்த்து மகிழும் இரு தளிர்கள்
நனைந்தக் குடைக்குள் நனையாது மகிழும் இரு பாலர்கள்!

- தஞ்சை த இராமநாதன்


Monday, 9 May 2022

சிறை வாழ்க்கை

 

சிறை வாழ்க்கை

போதைப் பழக்கத்தால் பேதையாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே

களவாடும் பழக்கத்தால் களவாணியாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே

கொலை வெறியால் கொலையாளியாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே

கொள்ளை வெறியால் கொள்ளையனாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே

கூடவே இருந்து குழி பறித்துக் கொன்றால் 
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே

வேலைக்காரனாக இருந்தவன் வினைக்காரனாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 8 May 2022

அன்னை - அம்மா - தாய்

 

அன்னை - அம்மா - தாய்

எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும் தாயின் பாசம் குறைந்ததில்லை
எத்தனைக் கஷ்டம் இருந்தாலும்
பிள்ளைகளுக்கு கஷ்டம் இருந்ததில்லை

பெற்றத் தாயின் இடத்தை மற்றத் தாய் எவராலும் நிரப்ப முடியாது
அப்படி மற்றத் தாய் நிரப்ப முயன்றாலும்
நிரம்பியதாய் வரலாறு கிடையாது

அடிபட்டால் அடி வயிற்றில் இருந்து அதிரும் ஆழமான ஒலி அம்மா
உயிர் போகுமுன் உள்ளிருந்து ஒலிக்கும் ஒரே தெய்வீக ஒலி அம்மா!

- தஞ்சை த இராமநாதன்



Saturday, 7 May 2022

கிளிகளுக்குள் வந்தக் கிலி

 

கிளிகளுக்குள் வந்தக் கிலி

காலோடு பட்டக் காலில் படபடப்பை அறிகின்றேன் கண்ணே!
இயற்கையின் இயல்பான படைப்பை இழக்கின்றோம் கண்ணா!

கத்திச் சண்டை குத்துச் சண்டை
உலகமிது கண்ணே!
கொத்தித் தின்ற கத்தித் தின்ற
காலமெங்கே கண்ணா?

காட்டை இழந்தோம் வீட்டை இழந்தோம் மனிதரால் கண்ணே!
கூண்டோடு அழிந்து கூண்டும் அழிந்து மாண்டிடுவோமோ கண்ணா?

- தஞ்சை த இராமநாதன்


காடு மலை முதல் வீடு நாடு வரை

 

காடு மலை முதல் வீடு நாடு வரை

காட்டில் கண்ட மயில்கள் நாட்டிலும்
மலையில் கண்ட மயில்கள் வீட்டிலும்
வயலில் இருந்த நெல்லைக் காட்டிலும் வீடுகள் நிறைந்த இடமாய் ஆனதே!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 5 May 2022

காரல் மார்க்ஸ்

 

காரல் மார்க்ஸ்

நான்கு வயது மூத்தப் பெண்ணை காதலித்தார்
பெற்றோரின் எதிர்ப்பை எண்ணி பேதலித்தார்

எப்படி எப்படியோ எழுதிப் பார்த்தார் எடுபடவில்லை
ஏழ்மையின் பிடியை எளிதில் முறியடிக்க
முடியவில்லை

பேனா முனைப் போரினை விடாது
தொடர்ந்தார்
எழுத்துப் போரில் தொடர் வெற்றியை
அடைந்தார்

அறிவியலை சேர்த்து பொது உடைமை தந்தார்
சட்டம் படித்ததால் திட்டம் பல வகுத்தும் தந்தார்!

- தஞ்சை த இராமநாதன்


Wednesday, 4 May 2022

குருவிப் பாட்டு

 

குருவிப் பாட்டு

என்னக் கிடைக்கும் என்று தெரியாது ஆனாலும் ஏதாவது கிடைக்கும் என்று நம்பி வாழ்வதுதான் வாழ்க்கை!

சேர்த்து வைக்க என்றுமே தெரியாது
ஆனாலும் சேர்ந்ததை வைத்து பகிர்ந்து உண்டு வாழ்வதுதான் வாழ்க்கை!

பசி தாங்கா பிள்ளைகளின் பசியைப் போக்கி பசி தாங்கி வாழும் பெற்றோரின் வாழ்க்கைதான் தியாக வாழ்க்கை!

பிறந்தது முதல் இறக்கும் வரை போராட்டமென சோர்ந்து விடாமல்
போராடும்போதே முடிந்து விடுவதுதான் வாழ்க்கை!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 3 May 2022

ரமலான் 2022

 

ரமலான் 2022

கடந்த இரண்டு வருட வழிபாடு புதிதான அனுபவத்துடன் நடந்து முடிந்தது
இந்த வருட வழிப்பாட்டை பழமையான அனுபவ முறையில் நடத்த முடிந்தது

இல்லாதவருக்கு இருப்போர் உதவுவது பண்புகளில் பன்மடங்கு மகத்தானது
அதிலும் தெரியாதவருக்கு உதவுவது மாண்புகளில் எல்லாம் மகத்தானது

பசியோடு இருந்து பசியின் உணர்வை உணர்வோடு உணர்வது உயர்வானது
உயிரோடு வாழும்வரை உறுதியானக் கொள்கையுடன் வாழ்வது உயர்வானது!

- தஞ்சை த இராமநாதன்


தீச்சட்டியின் தீவட்டி

 

தீச்சட்டியின் தீவட்டி

பூச்சட்டியென எண்ணி தீச்சட்டியைத் தூக்குவோர் தரத்தில் தாழ்ந்தவரா?
ஆராதனை தாம்பூலத்தைத் தூக்கிச் சுற்றுபவர் தரத்தில் உயர்ந்தவரா?

தேரை இழுத்து தெருவில் நடப்பவர்
என்றென்றும் தரத்தில் தாழ்ந்தவரா?
இழுக்கும் தேரில் அர்ச்சனை செய்பவர்
என்றென்றும் தரத்தில் உயர்ந்தவரா?

பெண்கள் முன்பு மேலாடை அணியாது அர்ச்சனை செய்வோர் தாழ்ந்தவரே!
கையில் சுட்டாலும் மெய்யில் பட்டாலும் தீச்சட்டியைத் தூக்குவோர் உயர்ந்தவரே!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 1 May 2022

உழைப்பும் உழைப்போரும் பலவிதம்

 

உழைப்பும் உழைப்போரும் பலவிதம்

கோடியில் சம்பாதிப்போர் மேலும் பெரிய  கோடிகளை சம்பாதிக்க உழைக்கின்றார்
கேடியாகி சம்பாதிப்போர் மேலும் பெரிய கேடியாகி சம்பாதிக்க உழைக்கின்றார்

மருத்துவர் மருத்துவம் மூலம் பணம் சம்பாதிக்க அயராது உழைக்கின்றார்
அரசியல்வாதி அரசியல் மூலம் பணம் சம்பாதிக்க தளராது உழைக்கின்றார்

ஏமாற்றுபவர் ஏமாற்றவே தொடர்ந்து
ஏமாற்றி சம்பாதிக்க உழைக்கின்றார்
ஏமாறுபவர் ஏமாறியதோடு தொடர்ந்து
ஏமாறவே உழைத்து சம்பாதிக்கின்றார்

அன்றாடக் கூலி ஊழியர்கள் குடித்துக் கெடவே உழைத்து சம்பாதிக்கின்றார்
குடி கெடுக்கும் குடியைத் தயாரிப்பவர்
குடியைக் கொடுத்து சம்பாதிக்கின்றார்!

- தஞ்சை த இராமநாதன்