Sunday, 1 May 2022

உழைப்பும் உழைப்போரும் பலவிதம்

 

உழைப்பும் உழைப்போரும் பலவிதம்

கோடியில் சம்பாதிப்போர் மேலும் பெரிய  கோடிகளை சம்பாதிக்க உழைக்கின்றார்
கேடியாகி சம்பாதிப்போர் மேலும் பெரிய கேடியாகி சம்பாதிக்க உழைக்கின்றார்

மருத்துவர் மருத்துவம் மூலம் பணம் சம்பாதிக்க அயராது உழைக்கின்றார்
அரசியல்வாதி அரசியல் மூலம் பணம் சம்பாதிக்க தளராது உழைக்கின்றார்

ஏமாற்றுபவர் ஏமாற்றவே தொடர்ந்து
ஏமாற்றி சம்பாதிக்க உழைக்கின்றார்
ஏமாறுபவர் ஏமாறியதோடு தொடர்ந்து
ஏமாறவே உழைத்து சம்பாதிக்கின்றார்

அன்றாடக் கூலி ஊழியர்கள் குடித்துக் கெடவே உழைத்து சம்பாதிக்கின்றார்
குடி கெடுக்கும் குடியைத் தயாரிப்பவர்
குடியைக் கொடுத்து சம்பாதிக்கின்றார்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment