Thursday, 30 September 2021

அலாதி அலையாத்தித் தாவரங்கள்

 

அலாதி அலையாத்தித் தாவரங்கள்

ஆண்டுதோரும் ஈரத்தோடு உள்ள நிலம் அது சதுப்பு நிலம்

அன்றாடம் நீரோடு குளிராடும் நிலம் அதுதான் சதுப்பு நிலம்

உவர்ப்பு நீரைக் கொண்டு இருப்பது சதுப்பு நிலம்

நன்னீரைக் கொண்டு இருப்பதும் அதே சதுப்பு நிலம்

கங்கைப்படுகை அலையாத்திக்காடு அது சதுப்பு நிலக்காடு

பிச்சாவரம் அலையாத்திக்காடு அதுவும் சதுப்பு நிலக்காடு

முத்துப்பேட்டை கண்டல்கள் காடு அது சதுப்பு நிலக்காடு

பள்ளிக்கரணையில் உள்ளக் காடு அதுவும் சதுப்பு நிலக்காடு

அலையாத்தித் தாவரங்கள் மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்

அலையாத்தித் தாவரங்கள் சுனாமி அழிவிலிருந்து காக்கும் தாவரங்கள்

அலையாத்தித் தாவரங்கள் காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்கள்

அலையாத்தித் தாவரங்கள் நீரை சுத்திகரிக்கும் தாவரங்கள்!

- தஞ்சை த இராமநாதன்

எதுவும் நடக்கலாம்

 

எதுவும் நடக்கலாம்

துளிர் விட்டுப் பெருமிதமாய் இருந்த இலை

பாதி பழுப்போடு பரிதாபமாய் வீழ்ந்த இலை

மனிதன் பறிக்க முயன்று முடியாமல் போனதும் உண்டு

பூச்சி புகைகளால் அரித்துப்போய்  இலைகள் வீழ்வதும் உண்டு!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 29 September 2021

இதயம் இருந்தால் இன்பம்

 

இதயம் இருந்தால் இன்பம்

இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பு இயற்கையான தூய அன்பு

இதயத்தில் உதயமான உறவு உயிர் உள்ளவரை தொடரும் உறவு

மூளைச்சாவால் உடலும் அழியாது உடலை விட்டு உயிரும் பிரியாது

இதயம் நின்று விட்டால் உயிரும் இருக்காது உடலும் இருக்காது

மூளையை மட்டும் பயன்படுத்துவோரை மண்ணுலகம் வாழ்த்திப் போற்றும்

இதயத்தின் உணர்வோடு வாழ்வோரை விண்ணுலகம் வணங்கிப் போற்றும்

மூளையால் குறுக்குப் புத்தியோடு கிறுக்குப் புத்தியும் வருவதுண்டு

இதயத்தால் குடும்பப் பிணைப்போடு சமுதாயப் பிணைப்பும் வருவதுண்டு!

- தஞ்சை த இராமநாதன்

பெருமித மகிழ்வோடு வாழ்க

 

பெருமித மகிழ்வோடு வாழ்க

பட்டாம் பூச்சி பறப்பது போல ஆனந்தத்தோடு வாழ்க

பரந்த உள்ளம் நிறைந்த பெண்டிர் மகிழ்வோடு வாழ்க

சகோதரித்துவம் வலுப் பெற்று வளமோடு வாழ்க

தியாகப் பிறவி என்ற பெருமிதத்தோடு வாழ்க!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 28 September 2021

கிருஷ்ணகிரி

 

கிருஷ்ணகிரி

நிகரிலி சோழமண்டலமாய் இருந்த கிருஷ்ணகிரி

விதுகதழகி நல்லூராய் இருந்ததும் கிருஷ்ணகிரி

நுளம்பர்களின் நுளம்பாடியாய் இருந்த கிருஷ்ணகிரி

காலப்போக்கில் எயில்நாடாவாக இருந்ததும் கிருஷ்ணகிரி

சிந்து நாகரிக ஓவியம் இருந்த கிருஷ்ணகிரி

பாறையால் ஆன ஓவியம் இருந்ததும் கிருஷ்ணகிரி

நவகண்டம் கற்களின் சரித்திரம் இருந்தது கிருஷ்ணகிரி

பாறைக் கற்களின் சித்திரம் இருந்ததும் கிருஷ்ணகிரி

பன்னிரெண்டு கோட்டைகள் இருந்த கிருஷ்ணகிரி

பாரா மகாலென பெயர் இருந்ததும் கிருஷ்ணகிரி

இந்தியாவுக்கு இராஜாஜியைத் தந்தது கிருஷ்ணகிரி

திருவள்ளுவருக்கு திருவுருவம் தந்ததும் கிருஷ்ணகிரி!

- தஞ்சை த இராமநாதன்

பாடம் படிப்போம்

 

பாடம் படிப்போம்

நானும் சம்பாதிக்கிறேன் என்ற கர்வத்திற்கா படிப்பு?

நானும் படித்துள்ளேன் என்ற கவுரவத்திற்குதான் படிப்பு!

வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்கா படிப்பு?

எல்லா வேலையையும் சரியாக செய்யவே படிப்பு!

ஆண் ஆதிக்கம் போய் பெண் ஆதிக்கம் வரவா படிப்பு?

ஆதிக்கம் அற்ற மனிதாபிமானம் வளரவே படிப்பு!

சமுதாயத்தில் போட்டி பொறாமைக்கா படிப்பு?

ஒன்றே குலமாக இணைந்து வாழவே படிப்பு!

ஆண் பெண் சேர்ந்து புகைப் பிடிக்கவா படிப்பு?

நல்லதைக் கற்று மானம் காக்கவே படிப்பு!

விறகை எரித்து சமைத்துப் படித்தால் வராதா படிப்பு?

ஆர்வம் இருந்தால் படிக்க வரும் எல்லோருக்கும் படிப்பு!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 26 September 2021

ஈரோடா? ஈரோடையா?

 

ஈரோடா? ஈரோடையா?

இரு உடல் ஈருடல் ஆனதில் மகிழ்ச்சி; இரு குழந்தைகள் இரட்டைக் குழந்தை ஆனதிலும் மகிழ்ச்சி

இரு இலைகள் இரட்டை இலை ஆனதில் மகிழ்ச்சி; இரு குழல் துப்பாக்கி இரட்டைக் குழல் துப்பாக்கி ஆனதிலும் மகிழ்ச்சி

ஆனால், இரு ஓடை ஈரோடை ஆகாமல் ஈரோடாக மாறியது யாரோட சூழ்ச்சி?

சில எழுத்துக்களை சீர்திருத்தம் செய்து மாற்றியது மகிழ்ச்சி; சிலை மனை களை இணை அண்ணா என மாற்றியதிலும் மகிழ்ச்சி

எதையும் பகுத்தறிவோடு பார்க்கச் சொன்னதால் வெடித்ததுப் புரட்சி; Road ரோடாகி ஈரோடை ஈரோடு என சொல்ல வேண்டாமென வெடிக்குமா புரட்சி?

- தஞ்சை த இராமநாதன்

பயமுறுத்தும் ஆசாமிகள்

 

பயமுறுத்தும் ஆசாமிகள் 

சாமிபோல் நடித்து வேடமிடும் ஆசாமியே

பேசாம பிள்ளையை விட்டுட்டுப் போசாமியே

கொரோனாவிற்கு இணையாக பிள்ளையைப் பயமுறுத்தாதீர் 

பகுத்தறிவுப் பூமியை பாழாக்கி பூச்சாண்டிக் காட்டாதீர்!

- தஞ்சை த இராமநாதன்

கருவூராம் கரூர்

 

கருவூராம் கரூர்

படைப்புத் திறனை பிரம்மன் மீட்டக் கரு ஊராம் கரூர்

பிரம்ம தீர்த்தம் உள்ள பிரம்மனின் குள ஊராம் கரூர்

காவிரி ஆறு கரைபுரண்டு பாய்ந்து ஓடும் ஊராம் கரூர்

அமராவதிக் கரையில் அமைந்த வஞ்சி ஊராம் கரூர்

அயல்நாட்டு வணிகம் அப்போதே செய்த ஊராம் கரூர்

ரோமாபுரியுடன் ரொம்ப தொடர்பு மிக்க ஊராம் கரூர்

ஆடியில் அமராவதித் தாயை போற்றும் ஊராம் கரூர்

போர்க்கள நினைவுச் சிலைகளைக் கொண்ட ஊராம் கரூர்

மங்களகர கோயில்களைக் கொண்ட ஊராம் கரூர்

ஆத்தூர் சோழியம்மன் கோயில் இருக்கும் ஊராம் கரூர்

மதுக்கரை செல்லாண்டியம்மன் இருக்கும் ஊராம் கரூர்

கொசுவலை உற்பத்தியில் முன்னணி ஊராம் கரூர்

பேருந்து கூடு கட்டுதலிலும் முன்னணி ஊராம் கரூர்

நல்லாசிரியர் க.பரமத்தி செல்வக்கண்ணன் ஊராம் கரூர்

பேராசிரியர் க.பரமத்தி முனைவர் மு.ஈஸ்வரமூர்த்தி ஊராம் கரூர்!

- தஞ்சை த இராமநாதன்

தூணிலும் துரும்பிலும்

 

தூணிலும் துரும்பிலும்

மண்ணாலாகி கடலில் கரைவாய்

கல்லாலாகி காட்சித் தருவாய்

காட்சியாகி மக்களைக் கவர்வாய் 

கட்சிகளுக்கும் கருணைப் புரிவாய்

உண்மையில்லார்க்கும் உதவிப் புரிவாய்  

உண்மையானவர்களை கைவிடாமல் காப்பாய் 

வெண்கலத்துடன் விளக்கானால் ஒளிர்வாய்

பொன்னாலானால்  கடத்தப்பட்டு ஒளிவாய்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 25 September 2021

தகடூராம் தர்மபுரியாம் தருமபுரியாம்









 தகடூராம் தர்மபுரியாம் தருமபுரியாம்

சங்ககால தகடூராக இருந்த தருமபுரி; இரும்பு நிறைவாக இருந்த தருமபுரி

கிரானைட் பரவி இருக்கும் தருமபுரி; ஒகேனக்கல் அருவி இருக்கும் தருமபுரி

ஆதியினம் பலர் வாழ்ந்தயிடம் தருமபுரி; ஆதீனம் சிலர் வாழுமிடம் தருமபுரி

தீர்த்தகிரிஸ்வரர் தீர்த்தம் தரும் தருமபுரி; மலைநீர் தீர்த்தம்  தரும் தருமபுரி

அரியபெரும் அரசர்கள் ஆண்ட தருமபுரி; அதிசய அதியமான் ஆண்ட தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி இருக்கும் தருமபுரி; பாப்பாரப்பட்டி இருக்கும் தருமபுரி

வாணியாறு அணை இருக்கும் தருமபுரி; வரட்டாறு அணை இருக்கும் தருமபுரி

முக்கியமாக -

தருமம் புரி என புரிய வைக்கும் தருமபுரி!

- தஞ்சை த இராமநாதன்

செயற்கையை வெல்லட்டும் இயற்கை

 

செயற்கையை வெல்லட்டும்  இயற்கை

குறிஞ்சியில் ரயில் செயற்கை; காட்டில் மாளிகை செயற்கை

மருதத்தில் மனை செயற்கை; நெய்தலில் விடுதி செயற்கை

பாலையில் பசுமை செயற்கை; கவிதையில் பொய்மை செயற்கை

போதைக்கு நீர் இருப்பது செயற்கை; குடிநீரை அழித்தது செயற்கை 

விஞ்ஞான விபரீதம் செயற்கை; மெஞ்ஞான வீழ்ச்சி செயற்கை

அரசியலில் தலைவராவது செயற்கை; விவசாயத்தில் விபரீதம் செயற்கை

இயற்கையை மாற்றுவது செயற்கை; இயற்கையின் பிடியில் செயற்கை!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 24 September 2021

திண்டீஸ்வரமெனும் திண்டுக்கல்

 

திண்டீஸ்வரமெனும் திண்டுக்கல்

எதிரியால் திறக்க முடியாத பூட்டுக்கும் திண்டுக்கல்

எளிதில் திறக்க உதவும் சாவிக்கும் திண்டுக்கல்

மலையின் மேல் உள்ள கோட்டைக்கும் திண்டுக்கல்

இலையின் மேல் நல்ல பிரியாணிக்கும் திண்டுக்கல்

கல்மலையின் தலையணை பெயரில் திண்டுக்கல்

திண்டி அழிந்து திண்டீஸ்வரம் பெயரில் திண்டுக்கல்

வீர வேலுநாச்சியார் வாழ்ந்தக் கோட்டை திண்டுக்கல்

ஹைதர் அலி அரசாண்டக் கோட்டை திண்டுக்கல்

மலையில் கோட்டை அம்மன் உள்ள திண்டுக்கல்

பேகம்பூரில் பெரிய பள்ளிவாசல் உள்ள திண்டுக்கல்

புனித ஜோஸப் தேவாலயம் உள்ள திண்டுக்கல்

இறைவி அபிராம்பிகையாக உள்ள திண்டுக்கல்

வெட்டியக் கல்லென்றால் அது துண்டுக்கல்

தூக்க முடியாதக் கல்லென்றால் அது குண்டுக்கல்

கட்டுமானக் கல்லென்றால் அது முண்டுக்கல்

கண்கவர் கல்லென்றால் அதுதான் திண்டுக்கல்!

- தஞ்சை த இராமநாதன்

கலயத்தில் கஞ்சி

 

கலயத்தில் கஞ்சி

மிஞ்சி போன சோறுதான் கஞ்சி; சூட்டை இழந்த சோறுதான் பழையக் கஞ்சி

பானையில் குதித்த அரிசிதான் கஞ்சி; நீரில் இளைப்பாறிய சோறுதான் கஞ்சி

கூம்பாவில் வைத்தும் உண்ணுவர்; மண் கலயத்தில் வைத்தும் உண்ணுவர்

உப்புக் கல் மிளகாயோடு ஒரு கடி; சின்ன வெங்காயத்தோடு மறு கடி

மென்ற சோறு கூழ்மமாக கடந்து செல்லும்; மெல்லாத சோற்றை நீராகாரம் கடத்திச் செல்லும்

உழைப்பால் கிடைத்த மருதக் கஞ்சி; சோழ நாட்டின் சுவையானக் கஞ்சி!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 23 September 2021

கூடலூர்- கடலையூர்- கடலூர்

 

கூடலூர்- கடலையூர்- கடலூர்

கடல் வற்றிய நிலமாம் கடலூர்; சோழரின் வணிக வழியாம் கடலூர்

கடலை விளைந்த கடலையூராம் கடலூர்; மூன்று ஆறுகளின் முக்கூடலாம் கடலூர் 

ஆத்திகர் வள்ளலார் பிறந்தது கடலூர்; நாத்திகர் வீரமணி பிறந்ததும் கடலூர்

அருமை அஞ்சலையம்மாள் பிறந்தது கடலூர்; தலைமை சுப்பராயலு பிறந்ததும் கடலூர்

பரங்கிப்பேட்டையில் இரும்புக்கு உருக்கு ஆலை; நெல்லிக்குப்பத்தில் சர்க்கரைக்கு இருக்கு ஆலை

மஞ்சக்குப்பம் கடலூரின் புது நகர்; பாண்டிச்சேரி கடலூரின் புற நகர்

அடர்க் காடு இருப்பது பிச்சாவரம்; நடராசர் வீடு இருப்பது சிதம்பரம்

வெள்ளிப் பிள்ளையாரும் உண்டு; நெய்வேலி நிலக்கரியும் உண்டு!

- தஞ்சை த இராமநாதன்

மனமிருந்தால் போதும்

 

மனமிருந்தால் போதும் 

விதையில் இருந்து மரம்; மரத்தில் இருந்து விதை

விதையின் உள்ளே பூஜ்ஜியம்; பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியம்

மதம் பிடித்தால் புது மதம்; மதம் பிடித்ததால் பல மதம்

எங்கும் இருப்பது இறைவனே; பூஜ்ஜியமாக இருப்பதும் இறைவனே

மனிதரைப் பிரிக்கக் கூடாது மதம்; மனிதரை மதம் மாற்றக் கூடாது மதம்

இறந்தவரை துதிக்க வேண்டும் மதம்; இரப்பவரை மிதிகக் கூடாது மதம்

மதத்தை மறந்தார் மனதால் நிறைந்தார்; மனதால் இணைந்து மதத்தை மறந்தார்

காற்றான இறையைப் போற்றுவோம் ; மூச்சான இறையைப்  போற்றுவோம்!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 22 September 2021

செங்கல்பட்டு



 

செங்கல்பட்டு

செங்கல் கொண்டு வீடு கட்டியதுமுண்டு

செங்கல் கால்வாயைப் பார்த்ததுமுண்டு

செந்நிறப்பட்டு உடுத்துவதுமுண்டு

செங்கல்பட்டு என்றொரு ஊருமுண்டு

செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்தப் பட்டு

பூக்களை விட்டால் செங்கழுநீர்ப்பட்டு

செங்கல்பட்டான செங்கழுநீர்ப்பட்டு

அதுதான் நீர்வளமிக்க செங்கல்பட்டு

இடம்பெயரும் பறவைகளுக்கு ஏற்ற வேடன்தாங்கல் ஆலயம்

வேலனை வழிபடுவதற்கு நடுபழனியில் தண்டாயுதபாணி ஆலயம்

நவீன வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் இங்கு ஏராளம்

கல்விப் பயில பல்வேறு கல்லூரிகளும் இங்கு ஏராளம்

மகத்தான மதுராந்தகம் என்றொரு ஏரி

வற்றாத மற்றொரு கொலவை ஏரி

கொலவையில் கதிரவன் முகம்படும்

கொலவையில் நிலாவே அகப்படும்!

- தஞ்சை த இராமநாதன்

தொடரட்டும் பயணம்


தொடரட்டும் பயணம்

வருகிறது கருமையான புகையைப் போக்கி

செல்கிறது அருமையான திசையை நோக்கி

நாம் வாழ வேண்டும் வறுமையை நீக்கி

நமது பயணம் தொடர  வேண்டும் ஒற்றுமையை நோக்கி!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 21 September 2021

கோவை எனப்படும் கோயம்புத்தூர்

 

கோவை எனப்படும் கோயம்புத்தூர்

பருத்தி விளைந்து சிறந்தக் கோவை; மான்செஸ்டெராகி சிறந்தக் கோவை

தொழில் நிறுவனம் நிறைந்தக் கோவை; கல்வி நிறுவனமும் நிறைந்தக் கோவை

மருதமலை முருகனுக்கு காவடி ஆட்டம்; கூடுதல் வருவாய் ஈட்டும் மாவட்டம்

சாப்பாட்டுக்கு இல்லை திண்டாட்டம்; சிறார்களுக்கு கோவைக் கொண்டாட்டம்

கோணி முத்தா பெண்களின் பெயரூர்; கோணமுத்தூர் கோயமுத்தூரானவூர்

கோசர் குலத்தாராண்ட கோசர்புத்தூர்; கோயம்புத்தூராகி பின் கோயமுத்தூர்

சிறுவாணி கொடுக்குது கோவைக்கு நல்ல இயற்கையானத் தண்ணி 

இடியும் இங்கே கருப்பானது செயற்கை சாகசங்களை தண்ணியோடுப் பண்ணி

கோயம்புத்தூரா கோயமுத்தூரா முடிவு வரோணும்  தீர்மானம் பண்ணி 

Coimbatore என எழுதி பத்தூர் வருவதை நீக்கோணும் நல்லதை எண்ணி!  

- தஞ்சை த இராமநாதன்

குருடும் திருடும்

 

குருடும் திருடும்

குருடாக இருந்த எண்ணெய்

திருடாக இருக்கும் எண்ணெய்

திருடாக வருவார்கள் ஓட்டைக்  கேட்டு

குருடாக வேண்டாம் ஓட்டைப் போட்டு!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 20 September 2021

அரிய பெரிய அரியலூர்

 

அரிய பெரிய அரியலூர்

அரியலெனும் கள் பானம் பருகிக் களித்தப் பூமி

பானம் தரும் மரம் பல வளர்த்து நிலைத்தப் பூமி

அரிய வகை மீன் வகைகள் புதைப்படிவம் கிடைத்தப் பூமி

அரிய வகை டைனோசர் வகைகள் புதைப்படிவமும் கிடைத்தப் பூமி

அன்று பெரம்பலூரோடு சேர்ந்து ஒன்றாக இருந்த பூமி

பிரிந்து பின்பு சேர்ந்து பின்பு பிரிந்து இருக்கும் பூமி

சுண்ணாம்புக் கல்லை உள்ளகத்தே கொண்ட பூமி

சிமெண்ட் தொழிலை தன்னகத்தே கொண்ட பூமி

இராணுவத்தில் உயிர்த் தியாகம் செய்தோரைக் கொண்ட பூமி

வீரர் சிவசந்திரன் நினைவாக மணிமண்டபத்தைக் கண்ட பூமி

கம்பு சோளம் விளைச்சலில் செழிப்பைக் கண்ட பூமி

கங்கை கொண்ட சோழபுரத்தால் பெருமையைக் கொண்ட பூமி!

- தஞ்சை த இராமநாதன்

பாசப் பசுவின் பாடம்

 

பாசப் பசுவின் பாடம் 

பசுவின் பரிவு பார்த்தாலே தெரிகின்றது

சுரந்தப் பாலை பாகுபாடின்றித் தருகின்றது

படம் எடுத்ததில் எந்தத் தவறுமில்லை

பாடம் கற்றோமா என்பதுதான் தெரியவில்லை!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 19 September 2021

மாயுரம் - மாயவரம் - மயிலாடுதுறை


மாயுரம் - மாயவரம் - மயிலாடுதுறை

நெல் ஆராய்ச்சிக்கு நெல்லாடுதுறை; மயில் ஆட்டத்துக்கு மயிலாடுதுறை

ஆடுதுறை கொடுத்தது நெல் வகைகள்; மயிலாடுதுறை கொடுத்தது பல் வகைகள்

நாடி வருவோர்க்கு நாடி பார்க்கப்படும்; நோய் தீர்த்து உயிரும் காக்கப்படும்

ஆலைகளுக்கு அவசியம் இங்கில்லை; ஆலையம் இல்லா இடமே இங்கில்லை

நொறுங்கத் தின்னும் வழக்கமுண்டு; நொறுக்கித் தின்ன கை முறுக்குண்டு

இங்கு பிரபலங்கள் பலர் பிறந்ததுண்டு; இங்கு ஆலய திருத்தலங்கள் பலவுண்டு

அழகுக் கடற்கரை படைத்த நிலம்; அற்புத இசையைக் கொடுத்த நிலம் 

சோழப் பரம்பரையின் வீர நிலம்; வாழப் படியளக்கும் பண்பினர் நிலம்!

- தஞ்சை த இராமநாதன்

அன்று முதல் இன்று வரை

 

அன்று முதல் இன்று வரை

அன்புடன் ஆறுதல் தரும் அக்கா; உறுதியுடன் ஊக்கம் தரும் அக்கா

பாசத்துடன் நேசம் மிக்க அக்கா; போட்டி பொறாமை இல்லாத அக்கா

அன்புடன் ஆனந்தம் அடையும் தம்பி; மாமனாகி மகிழப் போகும் தம்பி

சம்பந்தி ஆகவும் வாய்ப்புள்ள தம்பி; சண்டை சச்சரவை தவிர்த்திடு தம்பி!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 18 September 2021

வீர தீர ஈரோடு

 

வீர தீர ஈரோடு

ஈரமும் ஓடும் சேர்ந்ததால் ஈரோடானதாம்

இரு ஓடைகள் ஈரோடையாகி ஈரோடானாதாம்

ஓடும் ஓடையும் சேர்ந்ததால் ஈரோடானதாம்

மஞ்சள் மகசூலில் மகத்துவமானது ஈரோடாம் 

கைத்தறியில் கைதேர்ந்தது ஈரோடாம் 

காவிரியோடு பவானி சேருமிடம் ஈரோடாம் 

நொய்யலில் வெள்ளம் ஓடுமிடம் ஈரோடாம் 

முப்பத்து மூன்று அகவைக்குள் சாதித்த அற்புதக் கணித மேதையைத் தந்து

உயிரை துச்சமென துணிந்து கொடி காத்தக் குமரனைத் தந்து 

விடுதலைப் போராட்ட வீர தீர தீரன் சின்னமலையைத் தந்து

பகுத்தறிவுப் பகலவன் இராமசாமியை தந்தைப் பெரியாராக்கித் தந்த ஈரோடு!

- தஞ்சை த இராமநாதன்

சிலையானாலும் கிளி

 

சிலையானாலும் கிளி

கோவைப் பழம் போல அலகு; பச்சைப் பசேலென உடல் அழகு

குண்டு மணிபோல கண் அழகு; இனிமையாகக் கத்தும் சத்தமும் அழகு

சிலையான கிளியின் முகத்தில் கிலி; ஜோசியம் பார்த்த கிளிக்கே கிலி

பக்க வாட்டில் நல்லா நடந்தக் கிளி; செங்குத்தாய் கல்லாய் நிற்கும் கிளி!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 17 September 2021

கதிரவன் கலக்கும் கன்னியாகுமரி

 

கதிரவன் கலக்கும் கன்னியாகுமரி

முக்கடலும் ஒன்று கூடி முக்கூடலும் ஒன்றாகும் தென் எல்லையாம் குமரி

காலைக் கதிரவன் எழுந்து மாலையில் இளைப்பாற மூழ்குமிடமாம் குமரி

பிறவிப் பெருங்கடல் நீந்தியவரை நீந்தியபின் இறைவனடி சேர்த்தக் குமரி

மூன்று நாள் தொடர் தியான நிலையால் நரேந்திரர் விவேகம் அடைந்தக் குமரி

பிறவிப் பெருங்கடல் நீந்தி அமர்ந்தவர் பெயரைப் பெற்ற பாறை குமரியில்

பிறவிப் பெருங்கடல் எழுதி எழுந்தருளி சிறப்புற்றவர் பெயரிலும் பாறை குமரியில்

குமரிக் கண்ட குமாரனை அடைய குமாரி காத்து இருந்த இடமாம் கன்னியாகுமரி

சிவனை அடைய கன்னியான பார்வதி காத்து இருந்த இடமாம் கன்னியாகுமரி!

- தஞ்சை த இராமநாதன்

உண்மையான வலிமை

 

உண்மையான வலிமை

வேட்டை ஆடுபவருக்கும் இது பொருந்தும்; நாட்டை ஆள்பவருக்கும் இது பொருந்தும்

நோக்கம் வேண்டும் கொள்கைக் குறிக்கோளிலே; நோக்கம் வேண்டாம் கொள்ளைக் குறிக்கோளிலே

கூழைக் கும்பிடு மானங்கெட்டுப் போடாதே; வேஷக் கும்பிடு  மனங்கெட்டுப் போடாதே

தெரியாததை தெரிந்தது போல் நடிக்காதே; தெரியாததை தெரிந்து கொள்ளத்  தயங்காதே

முடிந்ததை முடிக்கும் வரை விடாதே; முடியாததையும் முடிக்கும் வரை விடாதே

நடப்பது நடக்காமல் போகாதே; நடந்தது நடக்காமல் போகாதே

துரோகியை தூரத்தில் வைக்கத் தயங்காதே; நல்லவரை பக்கத்தில் வைக்கத் தயங்காதே

எளியவரை வெல்பவர் எளியவரினும் எளியவரே; வலியவரை வதைப்பவர் வலியவரினும் வலியவரே!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 16 September 2021

காஞ்சிப் போகாத காஞ்சி நிலம்

 

காஞ்சிப் போகாத காஞ்சி நிலம்

காஞ்சி மரம் இருந்து காஞ்சி மலர் மலர்ந்து சிறந்த காஞ்சிபுரம்

காஞ்சி அணி அணிந்து காஞ்சிப் பாடல் புனைந்து சிறந்த காஞ்சிபுரம்

அரசியலின் ஆளுமைக்கு அச்சாணி இட்டது காஞ்சிபுரம்

பெரிய மனிதர்களுக்கும் ஆசீர்வாத மடமானதும் காஞ்சிபுரம்

கல்யாணப் பட்டென்றால் பட்டென மனதில் பதிந்தது காஞ்சிபுரம்

காமாட்சி அம்மனென்றால் காஞ்சிக் காமாட்சியென பதிந்ததும் காஞ்சிபுரம்

சங்கரமடம் என்றாலும் காமகோடி சங்கராச்சாரி என்றாலும் காஞ்சிபுரம்

கடமை கண்ணியம் என்றாலும் அறிஞர் அண்ணா என்றாலும் காஞ்சிபுரம்!

- தஞ்சை த இராமநாதன்

சிரிப்பின் சிறப்பு

 

சிரிப்பின் சிறப்பு

தலை வாராமல் இந்த சிரிப்பு; கலை மாறாமல் வந்த சிரிப்பு

மனித இனத்தின் வரம் சிரிப்பு; மனித இனத்தின் சாபம் வெறுப்பு

சிறப்பான வாழ்வை மனம் நாடும்; சிரிப்பான வாழ்வில் நலம் கூடும்

நாமும் சிரித்து சிறக்க வேண்டும்; பிறரும் சிறந்து சிரிக்க வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 15 September 2021

நினைவில் நிலைத்த சென்னை

 

நினைவில் நிலைத்த சென்னை

தஞ்சையில் சோழனைப் பிடித்து திருவள்ளுவரோடு இணைந்து பயணத்தைத் தொடர்ந்து சென்னையை அடைந்து பல்லவனைப் பிடித்தேன்

அதிகாலை சைதாப்பேட்டை சத்தத்தில் சங்கமித்து 5B பயணத்தில் அடையாறு ஆலமரம் பார்த்து மந்தைவெளி கடந்து மயிலைக் குளத்தடி அடைந்தேன்

இருபத்தொரு வயதில் அன்று பார்த்த சென்னை வியக்க வைத்தது என்னை; பல மாற்றங்களோடு இன்று பார்க்கும் சென்னை வியக்க வைக்கிறது என்னை

மாமண்டூர் வந்ததும் சென்னையின் மணம் வீசும்; நெருங்கியதும் பாண்ட்ஸ் பவுடரின் மணம் வீசும்; பாடி பக்கம் போனால் பிரிட்டாணியா மணம் வீசும்

கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் காந்தி மண்டபம் அருகில் அமைந்தது; எனக்கு நல்ல படிப்பைக் கொடுத்து வளமான வாழ்வைத் தந்தது

எம் ஜி ஆர் இறந்ததும் கிண்டியில் இருந்து நடந்தே சென்ற காலம்; தேனாம்பேட்டையில் கலைஞர் சிலை இடிக்கப்பட்டதைப் பார்த்தக் காலம்

படித்தவுடன் மூலக்கடை கனகன் சத்திரம் பகுதியில் முதல் வேலை; அது பெரம்பூர் இளைஞர்கள் விடுதியில் தங்கி இருந்து வேலைக்குச் சென்ற வேளை

சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே மூர் மார்க்கெட் இருந்த இடம் பார்த்ததுண்டு; கே கே நகரில் வசித்து மரத்தடியில் கிளி ஜோசியம் பார்த்ததும் உண்டு!

- தஞ்சை த இராமநாதன்

என்றென்றும் தமிழ்

 

என்றென்றும் தமிழ்

(தாய்மொழி நாள் 21 Feb '21)

தமிழுக்கு எதிரிகள் அதிகமா? தமிழருக்கு எதிரிகள் அதிகமா?

தமிழுக்கு தமிழரே எதிரியா? தமிழருக்கு தமிழரே எதிரியா?

வந்தாரை வாழ வைத்தது தவறோ? வந்தவரை உயர்த்திப் பார்த்ததும் தவறோ?

நாடாண்ட தமிழ்ப் பரம்பரை எங்கே? பங்காளிப் பகையால் வீழ்ந்தது இங்கே!

ழகரம் வராதது தமிழின் தவறா? தவறாய்ப் பேசும் தமிழரின் தவறா?

தகுதியற்றவர்கள் தலைவர்கள் ஆனதும் தமிழரின் தவறே!

தமிழறியாதவர்கள் தலைவர்கள் ஆனாலும் தமிழரின் தவறே!

கூஜா தூக்கியவன் கோடீஸ்வரன்! ஜால்ரா அடித்தவன் ஆளுமைக்காரன்!

நல்லவர்கள் நலிந்ததும் கொடுமை! தீயவர்கள் கூத்தாடுவதும் கொடுமை!

நல்லவர்களை நாம் மறப்பது சரியா? நம் தமிழை தரம் தாழ்த்தியதும் சரியா?

வீரர் இராசேந்திரனுக்கு வீரவணக்கம்! வடித்த சிற்பிக்கு கோடி வணக்கம்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 14 September 2021

வெற்றி விழா

 


வெற்றி விழா

வகை வகையாய் இனிப்பதும் சுவை; சாக்லெட்டின் சுவையோ தனிச் சுவை

திடச் சாக்லெட்டைக் கடித்தாலும் சுவை; கடிக்காமல் கரைத்தாலும் சுவை

பல் முளைக்காத சிறுசுகளுக்கும் சாக்லெட் பிடிக்கும்; பல் விழுந்த பெருசுகளுக்கும் சாக்லெட் பிடிக்கும்

பாலைக் கலந்ததில் பால் சுவையில் சாக்லெட்; பாலைக் கலக்காததில் பல சுவையில் சாக்லெட்

கொக்கோவில் இருந்து வந்த சாக்லெட்; சொக்காவில் இருந்து தீர்ந்த சாக்லெட்

பிறந்தநாள் விழாவைச் சிறப்பிக்கும் சாக்லெட் ; வெற்றி விழாவையும் சிறப்பிக்கும் சாக்லெட்!

- தஞ்சை த இராமநாதன்

பணமும் குணமும்

 

பணமும் குணமும் 

மனம் படைத்த இளைஞன்; பணமும் படைத்த இளைஞன்

படம் பிடித்த இளைஞன்; பாடம் கொடுத்த இளைஞன்

உழைப்பை நம்பும் ஆத்தா; கடவுளையும் நம்பும் ஆத்தா

எதார்த்த சிரிப்பில் ஆத்தா; குணத்தின் சிறப்பில் ஆத்தா

மூத்தோரை நீங்க என்றழைப்பது குணத்தால்; நீ என்றழைப்பது பணத்தால் 

ஆத்தா குணம் தடுமாறாதது; பந்தா குணம் தடுமாறுவது!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 13 September 2021

தெய்வத்திடம் கோரிக்கை

 

தெய்வத்திடம் கோரிக்கை

ஊரைக் கெடுத்து உலையில் போடும் இரக்கமற்றோரை இறக்கி வைக்கணும்

அரசன் அன்றன்றே செயல்பட்டது போல் தெய்வமும் இன்றே செயல்படணும்

நன்றி மறக்கும் நயவஞ்சகப் பேர்வழிகள் உடனுக்குடன் தண்டிக்கப் படணும்

ஏமாற்றி அதையும் சாதகமாக மாற்றும் மானம் கெட்டவர்கள் ஏமாறணும்

பெற்றோரை மிரட்டி அடிமைப் போல் நடத்துவோர் அடிமைப் படணும்

பொய்யை மெய்யாக்கிப் பேசுவோரின முகத்திரை கிழிக்கப் படணும்

சந்தர்ப்பவாத மனிதப் பதர்களை ஓரங்கட்டி ஒதுக்கி வைக்கணும்

அடக்கமற்று ஆரவாரம் செய்யும் அயோக்கியர்களை அடக்கி வைக்கணும்

பருவ மழை அளவோடு பெய்து பசி பட்டினியைத் தீர்த்து வைக்கணும்

விஞ்ஞான மெஞ்ஞான நிலைகளை ஆக்கப் பூர்வமாக மாற்றி அமைக்கணும்

உண்டியலுக்கு உழைத்தக் காசு மட்டுமே வரும் நிலை வரணும்

இதெல்லாம் நடக்குமா என நகைக்கும் நபர்கள் நடுநடுங்கிப் போகணும்!

- தஞ்சை த இராமநாதன்

தெளிந்தால் தெளிவு

 

தெளிந்தால் தெளிவு

தெளிந்த நீரில் வானம் பார்; நீரில் நீந்தும் மேகம் பார்

தெளிந்தால் தெரியுது பார்; தெளியாமல் தெரியுமா பார்

நீரில் தெரியும் பிம்பம் பார்; குளிரில் குளிரா பிம்பம் பார்

ஏரிக்கரையில் அழகைப் பார்; அடிபட்டு மகிழும் புல்லைப் பார்

வரப்பின் வரம்பில் வயலைப் பார்; வரம்பை மீறா நீரைப் பார்

வளைவு நெளிவில் நடந்துப் பார்; வழியில் தடையைக் கடந்துப் பார்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 12 September 2021

பாரதியைக் கேட்கின்றேன்

 

பாரதியைக் கேட்கின்றேன்

ஐந்தில் அன்னையை இழந்து அழுது துடித்தீரா சுப்பிரமணியனாகிய சுப்பையா எனும் என் பாரதி?

ஏழில் தந்தையின் மறுமணத்தைப் பார்த்து என் அன்னை எங்கே என எண்ணித் துடித்தீரா என் பாரதி?

பதினொன்றில் புலவர் சபையில் கவியாகி கலைமகனாகி பாரதியாகி பாரதியாவீரென நினைத்தது உண்டா என் பாரதி?

ஈரேழில் ஏழு வயது செல்லம்மாளை கை பிடித்த அந்நாளில் இழந்த உம் செல்ல அம்மாவின் அரவணைப்பை மீண்டும் பெற்றீரா என் பாரதி?

ஈரெட்டில் தன் தந்தையைப் பறி கொடுத்து பரிதவித்து செய்வதறியாது துவண்டீரா என் பாரதி?

தொடர் தவத்தை இருபான் வரை தன் வடகாசி அத்தையார் வீட்டினில் தொடர்ந்தீரோ என் பாரதி?

தலைப்பாகை அணிந்து மீசையோடு தமிழ் மண் திரும்பி பிடிக்காத வேலயிடையே தனிமை இரக்கத்தை விவேகபானுவாக வெளியிட்டீரோ என் பாரதி?

இருபதில் ஆரம்பித்து பதினொன்பது வருடங்கள் எழுத்தால் புரட்சித் தீயை பரவ செய்து அதற்குப் பரிசாக வயிறு பட்டினியில் வாடியதோ என் வைர பாரதி?

பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளுக்கு பயந்து பதுங்கி அல்ல துணிந்து ஒதுங்கி தமிழ்ப் பரம்பரையை வாழ வைக்க வதைப் பட்டீரோ என் பாரதி?

இருக்கும் போது இரக்கமற்று இறக்க விட்டு இறந்த போதும் பத்துபேர் கூட கூடாத சுயநலக் கூட்டத்தை மன்னிப்பீரா என் பாரதி? 😢😭

- தஞ்சை த இராமநாதன்

கரகம் தாங்கி ஆட்டம்

 

கரகம் தாங்கி ஆட்டம்

காலும் கையும் ஆடும் ஆட்டம்; தலை ஆடாமல் ஆடும் ஆட்டம்

கதை சொல்லி ஆடும் ஆட்டம்; பாட்டுப் பாடி ஆடும் ஆட்டம்

பெருசுகள் ரசிக்கும் ஆட்டம்; சிறுசுகள் களிக்கும் ஆட்டம்

தரையில் ஆடி ஆடும் ஆட்டம்; திரை தேவை இல்லா ஆட்டம்

களையாமல் ஆடும் ஆட்டம்; கலையாமல் பார்க்கும் கூட்டம்

கலைக்காக ஆடும் ஆட்டம்; கலையைக் காக்கும் கூட்டம்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 11 September 2021

இக்காலப் பெண்ணே! நீ பேசு!

 

இக்காலப் பெண்ணே! நீ பேசு!

காதல் பேச்சு உண்மையா? பெண்ணே நீ பேசு

கண்ணின் வீச்சு உண்மையா? பெண்ணே நீ பேசு

அரைகுறை ஆடை நாகரீகமா? பெண்ணே நீ பேசு

பூசிய சாயம் வெளுக்காதா? பெண்ணே நீ பேசு

காதல் இல்லையேல் சாதலா? பெண்ணே நீ பேசு

காதல் வேறு கல்யாணம் வேறா? பெண்ணே நீ பேசு

பணம் பெரிதா மனம் பெரிதா? பெண்ணே நீ பேசு

திருமண வாழ்வு சுகமானதா? பெண்ணே நீ பேசு

விவாகரத்து அதிகரிப்பது ஏன்? பெண்ணே நீ பேசு

ஆண் பாவம் பாவமில்லையா? பெண்ணே நீ பேசு

ஈருடல் ஓருயிர் உண்மையா? பெண்ணே நீ பேசு

பழிக்குப் பழி இல்லையா? பெண்ணே நீ பேசு!

- தஞ்சை த இராமநாதன்

பாரதி யார்?

 


*(11 September 2021, பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள்)*

பாரதி யார்?

பெண்ணின் இயற்கையான பேரழகின் கிளியாக என்றென்றும் ரதி                பண்ணின் இயற்கையான சீரழகின் கவியாக என்றென்றும் பாரதி

தேரை நிறுத்தி கடகடவென கீதையாக உபதேசம் செய்தார் சாரதி                            ஊரை நிறுத்தி கிடுகிடுவென கவிதை உபதேசம் செய்தார் பாரதி

பணத்தைக் காக்க தன்மானத்தை இழந்தோரும் உண்டு இழப்போரும் உண்டு இனத்தைக் காக்க தன்மான பாரதிபோல் வாழ்ந்தோரும் உண்டு வாழ்வோரும் உண்டு

கூழைக் கும்பிடுப் போட்டு அசிங்கமாய் இருந்தோரும் உண்டு இருப்போரும் உண்டு தலை நிமிர்ந்து பாரதிபோல் சிங்கமாய் இருந்தோரும் உண்டு இருப்போரும் உண்டு

அதுவெல்லாம் சரிதான், பாரதியை யார் என்றா கேட்கின்றீர்?

முண்டாசுக் கட்டி தமிழனின் வீரம் காத்தது யார்?

முறுக்கு மீசையில் தமிழனுக்கு வீரம் சேர்த்தது யார்?

வேட்டியோடு coat போட்டு அந்நியனை மிரட்டியது யார்?

தமிழ்ப் பாடலில் புரட்சி செய்து பகுத்தறிவைப் புகுத்தியது யார்?

புதுக் கவிதைக்கு உயிர்க் கொடுத்து நமக்கெல்லாம் கவிஞர் என பெயர்க் கொடுத்தது யார்?

அவர்தான்...

பாரதியார்! பாரதியார்!! பாரதியார்!!!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 10 September 2021

கருணைமிக்க கணபதியார்

 

கருணைமிக்க கணபதியார்

மிருக முகம் கொண்டு மனித உடல் கொண்ட அருளாளர் பிள்ளையார்

மனித உடல் கொண்டு மிருகக் குணம் கொண்டோரை விரும்பார் கணேசர்

மிருகக் குணம் கொண்டு மனிதனென நடிப்போரை விரும்பார் கணநாதர்

அழுக்கை நீக்கினாலும் அழுக்காகிப் போனோரை விரும்பார் வரதனார்

மிருக-மனித நிலை கடந்து தெய்வக் குணத்தை அடைய அருள்வார் விநாயகர்!

- தஞ்சை த இராமநாதன்



கண்ணனால் நல்லிணக்கம்

 

கண்ணனால் நல்லிணக்கம்

கண்ணனை நம்பி கண்ணன் வழியில் நடந்தால் கண்ணன் கைவிட மாட்டார்

கண்ணனை நாம் கைவிட்டு விட்டாலும் நம்மைக் கண்ணன் கைவிட மாட்டார்

கண்ணனான தன் வீட்டுக் கண்ணனை கண்ணனானகவே நினைத்து நடந்தார்

கண்ணனானகவே நடந்த தன் வீட்டுக் கண்ணனைக் கண்ணனாகவே மதித்து நடந்தார்

போட்டிக்கு மாறு வேடம் போட்டாலும் மத வேடம் போடாமல் மகனோடு நடந்தார்

பேட்டிக்கு ஒரு வேடம் போடாமல் நடந்த போட்டிக்கு வேடம் போட்டு மகனோடு நடந்தார்

நாட்டுக்குத் தேவை மத நல்லிணக்கம் அதை உணர்த்த இப்படி நடந்தனரோ?

கவிப் பாட்டுக்கும் தேவை மத நல்லிணக்கம் அதை உணர்த்தவும் இப்படி நடந்தனரோ?

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 9 September 2021

மலை அடிவாரம்

 

மலை அடிவாரம் 

மலையை வெட்டிய நிலையின் வடிவம் மலை அடி தரும் 

மலையை வெட்டியக் கலையின் வடிவம் மலையடிப் பெறும் 

யானை வடிவில் யானைக் குகை; மனித வடிவில் மனிதப் பகை

அடி வாரத்தில் ஆழ்நிலைப் பெறு! அமைதி வரத்தில் மேல்நிலைப் பெறு!

- தஞ்சை த இராமநாதன்

பூக்காமல் பூத்தது பூக்களா?

 

பூக்காமல் பூத்தது பூக்களா?

பூத்துக் குலுங்கி மணம் வீசுவது இயற்கைப் பூக்களின் குணம்

பூக்காமல் குலுங்கி மனம் கவருவது செயற்கைப் பூக்களின் குணம்

மலர்ந்து விரிந்து மணம் வீசி வாடி வதங்கும் அது இயற்கைக் குணம்

மலராமல் விரிந்து மணம் வீசாது வாடாது வதங்காது அது செயற்கைக் குணம்

பளபள வண்ணத்துடன் வசதியானோர் இடத்தில் அது செயற்கைப் பூக்கள்

மணமணக்கும் வாசனையுடன் வறியவர் இடத்தில் அது இயற்கைப் பூக்கள்!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 8 September 2021

சுமைகள் யாவும் சுகமானதா?

 

சுமைகள் யாவும் சுகமானதா? 

கை கொடுத்து தூக்கும் சுமையும் இது; கை பிடித்து சுமக்கும் சுமையும் இது 

தூக்கிச் சுமக்கும் சுமையும் இது; குடும்பத்தைக் காக்கும் சுமையும் இது 

கடன் அடைக்கும் சுமையும் இது; துயர் துடைக்கும் சுமையும் இது 

சந்தையில் விற்ற சுமையோ அது; சந்தையில் பெற்ற சுமையோ இது 

தூக்கி வரும் பாதை இது! தூக்கிப் போகும் பாதை எது? 

- தஞ்சை த இராமநாதன்

மனிதரின மாண்பு வீழ்ந்ததா?



 

மனிதரின மாண்பு வீழ்ந்ததா?

எடையில் ஏமாற்றி கடையில் வணிகம்; இடையில் ஏமாற்றி தரகில் வணிகம்

பாடையில் ஏமாற்றி சாவில் வணிகம்; கோடையில் ஏமாற்றி குடிநீரில் வணிகம்

மண்ணைக் கலந்து சாந்தில் வணிகம்; தண்ணீரைக் கலந்து பாலில் வணிகம்

சர்க்கரையைக் கலந்து தேனில் வணிகம்; பந்தயத்தில் கலந்து பந்தாட்டத்தில் வணிகம்

மருந்தைக் கொடுத்து மருத்துவத்தில் வணிகம்; மனதைக் கெடுத்து விளம்பரத்தில் வணிகம்

கடனைக் கொடுத்து வட்டியில் வணிகம்; பணத்தைக் கொடுத்து தேர்தலில் வணிகம்

ஆடையைக் காட்டி ஆடம்பரத்தில் வணிகம்; வீட்டைக் கட்டி விற்பனையில் வணிகம்

கோழியைக் காட்டி முட்டையில் வணிகம்; முட்டையைக் காட்டி கோழியில் வணிகம்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 7 September 2021

மூத்தக்குடியின் குடிலும் கோவிலும்

 

மூத்தக்குடியின் குடிலும் கோவிலும்  

மேலடிக்கு வந்தது ஏராளம்; மோசடியால் வராததும் ஏராளம்

ஆயிரம் ஆண்டு பெரிய கோவில்; உலகினர் அறியா அரிய கோவில்

கீழடியில் இருக்கு ஏராளம்; உள்ளடியும் இருக்கு ஏராளம்

செழிப்போடு வாழ்ந்த என்னினம்; மிடுக்கோடு இருந்த என் தமிழினம்

மீண்டும் வரணும் இராசராசன்; உலகையே ஆளணும் இராசராசன்

பழம் பெருமை உள்ள என் மண்ணே! உலகின் மூத்தக்குடியான வீர மண்ணே!

- தஞ்சை த இராமநாதன்

நிலவின் ஒளியில் நீர்

 

நிலவின் ஒளியில் நீர் 

அரை நிலவின் முழுமையான ஒளி; ஆழ் கடலின் அமைதியான அலை

மழை இல்லா குளிர்வான வெளி; ஆரவாரம் அற்ற மகிழ்வான நிலை

கடலில் மிதந்து பாய்ந்து விரைவில் கடக்க கப்பலைக் கண்டவன் மனிதன்

காற்றில் பறந்து அதிவிரைவில் கடக்கவும் தெரிந்தவன் அதே மனிதன்

மிதந்தும் பறந்தும் பல கண்டம் விட்டு கண்டம் கடந்தவன் மனிதன்

ஜாதகக் கட்டங்களின் கண்டங்களைக் கடக்க முடியாதவனும் அதே மனிதன்! 

- தஞ்சை த இராமநாதன்

Monday, 6 September 2021

பாசக் காற்றே!

 

பாசக் காற்றே!

பிள்ளைக்குப் பிள்ளை இத்தாய்

அன்னைக்கு அன்னை இச்சேய்

பிஞ்சு கையால் பஞ்சு நேசம்

தாய்-சேய் மூச்சில் பாச வாசம்!

- தஞ்சை த இராமநாதன்

யார் ஆசிரியர்?

 

யார் ஆசிரியர்?

பள்ளியில் ஆரம்பப் படிப்பைக் கற்பித்தால் ஆசிரியர்/ஆசிரியை

கல்லூரியில் படிப்பைக் கற்பித்தால் பேராசிரியர்/பேராசிரியை

ஆனால்,

நூலை எழுதியவர் எழுத்தாளர் ஆகாமல் நூலாசிரியர் ஆனதெப்படி?

நாவலை எழுதியவர் ஏதாவதாகாமல் நாவலாசிரியர் ஆனதெப்படி?

கதையை எழுதுவோர் கதையாளர் ஆகாமல் கதாசிரியர் ஆனதெப்படி?

பத்திரிக்கை நடத்தினால் நடத்துநர் என்றாகாமல் ஆசிரியர் ஆனதெப்படி?

எப்படியாயினும்,

நல்லாசிரியர் விருதை இவ்வாசிரியர் தட்டிப் பறிக்காமல் இருந்தால் போதும்!

பயிற்றுவிக்கும் ஆசிரியரை வாத்தியார் என ஏமாற்றாமல் இருந்தால் போதும்!

- தஞ்சை த இராமநாதன்