Thursday, 30 June 2022

சிறுமியின் பலமான நம்பிக்கை

 

சிறுமியின் பலமான நம்பிக்கை

நம்பிக்கையோடு தும்பிக்கையைப்
பிடித்ததால் பலமாகவேப் பிடித்தாள்          பலமான தும்பிக்கையைப் பிடித்ததால் தன்னம்பிக்கையோடுப் பிடித்தாள்!

- தஞ்சை த இராமநாதன்


Wednesday, 29 June 2022

பிடி பை வைத்துப் பிடிக்கும் புதுமை

 

பிடி பை வைத்துப் பிடிக்கும் புதுமை

மாசோடும் காசோடும் போராடி அழியும் மானிட வர்க்கமே
வலையோடும் தூண்டிலோடும் அழித்த மானிட வர்க்கமே
கையோடும் பறியோடும் எமைப் பிடித்த மானிட வர்க்கமே
Wifiயில் பிடிபட்டு பிடி பை வைத்த மானிட வர்க்கமே!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 28 June 2022

இவர்தான் கண்ணதாசன்

 

இவர்தான் கண்ணதாசன்

எண்ணியதை எண்ணியபடியே எழுதியவர் கண்ணதாசன்
எழுதியதை எழுதியபடியே சொன்னவர் கண்ணதாசன்
சொன்னதை சொன்னபடியே செய்தவர் கண்ணதாசன்
திராவிடம் பேசி உணர்வைக் கூட்டி உரைத்தவர் கண்ணதாசன்
ஆன்மிகம் பேசி அறிவைக் காட்டி நிரூபித்தவர் கண்ணதாசன்!

- தஞ்சை த இராமநாதன்


ஆக்கி அழிக்கும் ஆற்றல்

 

ஆக்கி அழிக்கும் ஆற்றல்

தொடந்து எரிபொருள் எரிந்து பயணம் தொடர்ந்து தொடர்ந்தால் தொடர் வண்டி
தொடர்ந்து தொடர் வண்டியே தீ பிடித்து தொடர்ந்து எரிந்தால் அது இடர் வண்டி
தொடர்ந்து தொடர் வண்டி ஓட்டம் தொடர
தொடர்ந்து எரிபொருள் எரிய வேண்டும்
தொடர்ந்து எரியும் விபத்தைத் தடுக்க
தொடர்ந்து பழுது பார்க்க  வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்


பசுமைக்காக புரட்சி செய்வோம்

 

பசுமைக்காக புரட்சி செய்வோம்

கடுமையான வறட்சியின் தாக்கத்தால் வருந்துவதை நிறுத்த வேண்டும்
பசுமையான புரட்சியின் ஆக்கத்தால் திருந்துவதை நிலை நிறுத்த வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்


கனவு நனவாகட்டும்

 

கனவு நனவாகட்டும்

நிலவிலே நினைவாலே வீடு கட்டி முடித்தால் அது கனவு
நிலவின் நினைவாலே வீடு கட்டி முடித்தால் அது நனவு!

- தஞ்சை த இராமநாதன்


Monday, 27 June 2022

அணி மாறுவதுதான் அரசியலா?

 

அணி மாறுவதுதான் அரசியலா?

கிளியாரே கிளியாரே கிலிமாற அணிலாரைப் பார்க்கின்றாயோ?
அணிலாரே அணிலாரே அணிமாறி அரசியலாக்கப் பார்க்கின்றாயோ?

- தஞ்சை த இராமநாதன்


மரமேறும் மறமும் மரபும்

 

மரமேறும் மறமும் மரபும்

மரமேறும் மறத்தின் மரபோடு மரத்தைக் காத்தால் தன்மானத்தின் சிங்கம்
மதம்மாறும் குணத்தோடு மரபைக் கெடுத்தால் அவமானத்தின் அசிங்கம்!

- தஞ்சை த இராமநாதன்


கையைக் கொடுத்துக் கெடுப்போர்

 

கையைக் கொடுத்துக் கெடுப்போர்

கையைக் கொடுத்து கையூட்டையும் கொடுத்து கெடாவிட்டாலும் கெட்டவரே
கையைக் கொடுத்து கையூட்டையும் தடுத்து கெட்டாலும் நல்லவரே
பல்லைக் காட்டி படித்தவாறே கையூட்டை வாங்கும் படித்தவரும் கெட்டவரே
சுட்டிக் காட்டி சுட்டியயவாறே கையூட்டை
மறுக்கும் படிக்காதவரும் நல்லவரே!

- தஞ்சை த இராமநாதன்


புளிக்காதது புளியா?

 

புளிக்காதது புளியா?

புளிக்குமென புளியைப் புசித்தால் புசிக்குமுன் இனித்தால் அது புளியா?
புசிக்காதென புல்லைக் கொடுத்தால்
புசித்தபின் உறுமினால் அது புலியா?

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 26 June 2022

மகிழ்வான தருணம்

 

மகிழ்வான தருணம்

மணந்தவளை மணந்தவர் மதித்து
முதிர்ந்த வயதிலும் முயன்று மிதித்து மதித்தக் கணவனின் காலால் மிதித்து மெதுவானப் பயணத்தை நினைத்து மகிழ்வுக் கூடுகிறது மனம் திளைத்து!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 12 June 2022

சிரிப்பின் மகிமை

 

சிரிப்பின் மகிமை

சுமையை சுமையாகக் கருதாது செமையாகத் தூக்குவது சிறப்பு                                          சுமையை சுமையாகப் பாராது சுமையை மறக்கடிப்பது சிரிப்பு!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 11 June 2022

மாம்பழத்தின் குரல்


மாம்பழத்தின் குரல்

பூத்துக் காய்த்துத் தேறியதால் 
உலுக்கி உலுக்கிப் பறிக்கப்பட்டேன்   பறிக்கப்பட்டக் காம்பின் காயத்தால் பாலைக் கண்ணீராக வடித்தேன்
இயற்கையாகப் பழுக்கும் முன்பே செயற்கைக்கு உள்ளாக்கப்பட்டேன்
பழுத்துப் பலநாள் ஆகியும் சிலநாள் பரிதாபமாய் தட்டில் வைக்கப்பட்டேன்                பறிக்கப்பட்டு தட்டில் விடப்பட்ட வரை காட்சிப் பொருளாக ஆக்கப்பட்டேன்
எப்போது வெட்டி அரிவார்கள் என்ற நினைவோடு காக்க வைக்கப்பட்டேன்
அரியாமல் எறிவார்களோ என அறியும் வலியால் அழாமல் அழுக விடப்பட்டேன்!

- தஞ்சை த இராமநாதன்





Friday, 10 June 2022

செருக்கெனும் கிறுக்கு இருக்கு

 

செருக்கெனும் கிறுக்கு இருக்கு

மண்ணை நம்பி மரம் இருக்கு
மரத்தை நம்பி கிளைகள் இருக்கு!
கிளைகளை நம்பி இலைகள் இருக்கு
இலைகளை நம்பி உயிர்கள் இருக்கு!
இயற்கையை நம்பி யாவும் இருக்கு
தானென்ற செருக்கு நமக்கு எதற்கு?

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 9 June 2022

எது சிறந்த நட்பு?

 

எது சிறந்த நட்பு?

உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையும் நட்பு சிறந்ததா?
மானமிழந்து மதிகெட்டுப் போன நன்றி கெட்ட நயவஞ்சர்கள் நட்பு சிறந்ததா?
உதவியைச் செய்ய ஓடோடி வரும் நட்பு சிறந்ததா?
உதவியைப் பெற தேடோடி வரும் நட்பு சிறந்ததா?
நிலையற்ற உடலின்பால் நட்புக் கொள்வது சிறந்ததா?                                                          நிலையான உள்ளத்தின்பால் நட்புக் கொள்வது சிறந்ததா?                                              எண்ணிய ஆடையோடு ஓடிப் போகும் நட்பு சிறந்ததா? பின்னிய சடையோடு கூடிப் போகும் நட்பு சிறந்ததா?

- தஞ்சை த இராமநாதன்


Wednesday, 8 June 2022

மாசற்ற உலகம் வேண்டும்

 

மாசற்ற உலகம் வேண்டும்

ஒரு நாள் போதுமா?
ஒரே ஒரு நாள் போதுமா?
உலக சுற்று சூழலைப் பாதுகாக்க
ஒரே நாள் போதுமா?

நிலம் நீர் காற்றைப் பாதுகாக்க மாசற்ற சுற்றுச் சூழல் வேண்டும்                                              மாசுடைய மானிடரினுள் மாசு நீங்க மாசற்ற மனச் சூழல் வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன் 

Sunday, 5 June 2022

சும்மாடு அதுதான் பண்பாடு

 

சும்மாடு அதுதான் பண்பாடு

சும்மாடுக் கட்டோ சுமையைத் தூக்க
முந்தானைக் கட்டோ மகவைத் தூக்க
தலையில் சுமையோ பசியைப் போக்க
இடுப்பில் சுமையோ வம்சத்தைக் காக்க
செருப்பில்லா நடை சாலையைக் கடக்குது
செருக்கில்லா உடை மானத்தைக் காக்குது!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 4 June 2022

அடிப்படை விதி

 

அடிப்படை விதி

மிதித்தால்தான் ஓட்ட முடியும் என்பது மிதிப்பவரின் தலை விதி
மிதிப்பட்டால்தான் ஓட முடியும் என்பது மிதிவண்டியின் தலை விதி
மிதித்து சட்டென ஓட்டினேன் என்பதும் மிதிப்பட்டு பட்டென ஓடினேன் என்பதும்
அடைப்பட்ட காற்றின் அடிப்படை விதி!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 3 June 2022

செங்காய்

 

செங்காய்

ஆசை பெரிதானால் அது பேராசை
அதை அடைவதில் பலருக்கு இஷ்டமே
இன்பம் அகமானால் அது பேரின்பம்
அதை அடைவதில் பலருக்கு கஷ்டமே
கொத்தாய்க் காய்த்த பேரீச்சைதன் செங்காயை சுவைத்தால் அதிஷ்டமே
நன்றி மறந்து நாயளவு கூட வாழாது போனால் வாழ்வே பெரும் நஷ்டமே!

- தஞ்சை த இராமநாதன்