எது சிறந்த நட்பு?
உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையும் நட்பு சிறந்ததா?
மானமிழந்து மதிகெட்டுப் போன நன்றி கெட்ட நயவஞ்சர்கள் நட்பு சிறந்ததா?
உதவியைச் செய்ய ஓடோடி வரும் நட்பு சிறந்ததா?
உதவியைப் பெற தேடோடி வரும் நட்பு சிறந்ததா?
நிலையற்ற உடலின்பால் நட்புக் கொள்வது சிறந்ததா? நிலையான உள்ளத்தின்பால் நட்புக் கொள்வது சிறந்ததா? எண்ணிய ஆடையோடு ஓடிப் போகும் நட்பு சிறந்ததா? பின்னிய சடையோடு கூடிப் போகும் நட்பு சிறந்ததா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment